Home
Gadgets

இதுதான் பொங்கல் பரிசு.. LG டிவிக்கு விலை குறைப்பு.. AI சவுண்ட்.. எச்டிஆர்10.. எந்த மாடல்?

சாம்சங், சியோமி, மோட்டோரோலா டிவிகளை விட எல்ஜி (LG) ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களும் எல்ஜி நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்தியா முழுவதும் இந்நிறுவனத்தின் டிவிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் எல்ஜி நிறுவனத்தின் தரமான ஸ்மர்ட் டிவி மாடல் ஒன்று விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இதுதான் பொங்கல் பரிசு.. LG டிவிக்கு விலை குறைப்பு.. எந்த மாடல்?

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் எல்ஜி எல்ஆர்600 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 ( LG LR600 32 inch HD Ready Smart WebOS TV 2025) மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.14,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட்டில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.13490 விலையில் வாங்கிவிட முடியும்.

எல்ஜி எல்ஆர்600 32 இன்ச் எச்டி வெப்ஓஎஸ் டிவி 2025 அம்சங்கள் (LG LR600 32 inch WebOS TV 2025 Specifications) : எச்டி ரெடி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த 32 இன்ச் எல்ஜி டிவி வெளிவந்துள்ளது. மேலும் 1366 x 768 பிக்சல்ஸ், எச்டிஆர்10, எச்எல்ஜி, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz refresh rate), உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. எனவே இது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

α5 பிராசஸர் ஜென் 6 ஏஐ பிராசஸர் (a5 Gen6 AI Processor) உடன் இந்த எல்ஜி எல்ஆர்யு600 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேம் ஆப்டிமைசேஷன் (Game Optimizer), HGiG மோட் உள்ளிட்ட பல் சிறப்பான வசதிகள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

வெப்ஓஎஸ் (WebOS) மூலம் இந்த எல்ஜி எல்ஆர்600 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடல் இயங்குகிறது. எனவே இந்த டிவியில் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஈரோஸ் நவ் (Eros Now), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட பல்வேறு ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

டைனமிக் டோன் மேப்பிங், எப்டிஏ சாட்டிலைட் கனெக்டிவிட்டி, ThinQ ஏஐ, உள்ளிட்ட அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. மேலும் மேஜிக் ரிமோட் உடன் இந்த எல்ஜி எல்ஆர்600 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த ரிமோட் பல ஸ்மார்ட் அம்சங்களை வழங்குகிறது.

இதுதான் பொங்கல் பரிசு.. LG டிவிக்கு விலை குறைப்பு.. எந்த மாடல்?

ஏஐ சவுண்ட், விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட் 5.1 உள்ளிட்ட பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த எல்ஜி எல்ஆர்600 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடலில் உள்ளன. மேலும் 20W ஸ்பீக்கர்கள் இதில் வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், லேன், ஆப்டிக்கல் டிஜிட்டல் ஆடியோ அவும், ஆர்எப் இன்புட், வைஃபை, புளூடூத் போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த எல்ஜி 32 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG LR600 32 inch HD Ready Smart WebOS TV 2025 price Drop on Flipkart: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X