நா வந்துட்டேனு சொல்லு : ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய எல்ஜி டிவி அறிமுகம்.!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எல்ஜி ஓஎல்இடி ஸ்மார்ட் டிவிகளின் ஆரம்ப விலை ரூ.2.5 லட்சம் எனவும், பின்புயுஎச்டி ஸ்மார்ட் டிவிகளின் ஆரம்ப விலை ரூ.65,999-ஆக உள்ளது.

|

எல்ஜி நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்,அதன்படி ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் (ஏஐ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். குறிப்பாக சியோமி அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவிகளுக்கு போட்டியாக எல்ஜி நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.

நா வந்துட்டேனு சொல்லு : ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய எல்ஜி டிவி

மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் 45-இன்ச் டிஸ்பிளே முதல் 77-இன்ச் டிஸ்பிளே வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று எல்ஜி நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகத்துல்லியமான ஒலி

மிகத்துல்லியமான ஒலி

எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவி மாடல்கள் மிகத்துல்லியமான ஒலி அமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளன, பின்பு ஒல்எல்இடி, சூப்பர் யுஎச்டிஇ மற்றும் யுஎச்டி ஸ்மார்ட் டிவி என பல்வேறு மாடல்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் 25 வகையான தொலைக்காட்சிகள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 4கே ஜாஸ் என்ற
தொழைலக்காட்சியையும் அறிமுகம் செய்துள்ளது.

 வாய்ஸ் கமாண்ட்

வாய்ஸ் கமாண்ட்

எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட் டிவிகளின் மிகச் சிற்பான அம்சம் என்னவென்றால், இவற்றில் ஏஐ தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது எனவே நமக்கு வேண்டியவற்றை வாய்ஸ் கமாண்டின் மூலம் சில நொடிகளில் இந்த ஸ்மார்ட் டிவிகள் தந்துவிடுகின்றன.

யூசுல் பார்க்

யூசுல் பார்க்

மேலும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஹோம்என்டர்டெயின்மென்ட பிரிவின் இயக்குநர் யூசுல் பார்க் இது குறித்து பேசுகையில், ஏஐ
தொழில்நுட்பம் கொண்ட இந்த டிவி மாடல்கள் பொழுதுபோக்கில் புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு தருகிறது. பின்பு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளிலிருந்து கற்றுக்கொள்ளும் எல்ஜி நிறுவனம் தொடர்ந்து, ஆராய்சி மற்றும் மேம்படுத்தல்களில் அதிகளவிலான முதலீடுகளைச் செய்துவருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தனது
வாடிக்கையாளர்களுக்குப் புதிய மதிப்புகளைச் கொடுத்துவருகிறது.

இந்தியா

இந்தியா

எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள சாதனங்கள், பொருள்கள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு என்று யூசுல் பார்க் தெரிவித்துள்ளார்.

விலை:

விலை:

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எல்ஜி ஓஎல்இடி ஸ்மார்ட் டிவிகளின் ஆரம்ப விலை ரூ.2.5 லட்சம் எனவும், பின்பு யுஎச்டி ஸ்மார்ட் டிவிகளின் ஆரம்ப விலை ரூ.65,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
LG launches TVs with AI-enabled features: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X