புதிய ஸ்மார்ட்வாட்சை வெளியிடும் எல்ஜி: எப்போது...?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 2100 இயக்கியில் இயங்கும் இந்த ஸ்மார்ட்வாட்சில் 768MB ரேம் உள்ளது.

By GizBot Bureau
|

புதிய வியர் இயங்குதளத்தில் செயல்படும் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்வாட்ச்களை உருவாக்கி வருகிறது எல்.ஜி. இந்த பிராண்டு ஏற்கனவே எல்ஜி ஸ்போர்ட் மற்றும் எல்ஜி ஸ்டைல் ஸ்மார்ட்வாட்சுகளுக்கு பின்னர் இதை தயாரிக்கிறது.

புதிய ஸ்மார்ட்வாட்சை வெளியிடும் எல்ஜி: எப்போது...?

இந்நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச்களை அதிகாரப்பூர்வமாக அடுத்த மாதம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. கசிந்த அறிக்கையில், புதிய எல்ஜி ஸ்மார்ட்வாட்ச்களுக்கான மாடல் எண் LM-W315 என குறிப்பிடப்பட்டுள்ளது. FCCயில் தாக்கல் செய்த ஆவணங்களில் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு இதே மாடல் எண் குறிப்பிடப்பட்டள்ளது.


குவால்காம் ஸ்னாப்டிராகன் 2100 இயக்கியில் இயங்கும் இந்த ஸ்மார்ட்வாட்சில் 768MB ரேம் உள்ளது. நவீன அணிகலனான ஸ்மார்ட்வாட்சில் 4GBஉள்ளார்ந்த சேமிப்பு திறனும், 1.2 இன்ச் திரையும் போன்ற வசதிகள் உள்ளன. தண்ணீர், தூசிகளை எதிர்க்கும் வகையில் வாட்டர் ப்ரூப் மற்றும் டஸ்ட் ப்ரூப்-க்கான IP68 சான்றிதழும் பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் GPS மற்றும் NFC வசதிகள் இருக்காது என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. இந்த வாட்ச் அரோரா கருப்பு மற்றும் மேக வெள்ளி நிறங்களில் வெளியாகிறது. இதன் விலை 300 லிருந்து 400 டாலருக்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


வெகுவிரைவில் புதிய ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்சை வெளியிட முற்றிலும் தயாராக உள்ளது எல்ஜி அல்லது வெளியாகும் வதந்திகள் அப்படி நம்ப வைக்கின்றன. அனலாக் மற்றும் டிஜிட்டல் என இருபெரும் உலகில், வியர் ஓ.எஸ்-ல் செயல்படும் எல்ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச்கள் சிறந்ததாக விளங்கும் எனக் கூறுகிறது ஆண்ராய்டு ஹெட்லைன்ஸ்.

Best Mobiles in India

English summary
LG to launch a new smartwatch next month : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X