சியோமி டிவிக்கு பதிலடி; பல வகையான டிவிக்களை அறிமுகம் செய்த எல்ஜி.!

டால்பி அட்மாஸ் ஆடியோ டெக்னாலஜி, உண்மையில் ஆடியோ உலகில் செய்த பெரும் புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும், இந்த அட்டகாமான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது எல்ஜி யூஎச்டி & ஒஎல்இடி டிவி மாடல்கள்.

|

எல்ஜி நிறுவனம் தற்சமயம் சியோமி ஸ்மார்ட் டிவிக்கு போட்டியாக எல்ஜி பிரீமியம் யூஎச்டி & ஒஎல்இடி டிவி மாடல்களை சியோலில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் எல்ஜி அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் (AI) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு மேம்பட்ட ஆல்ஃபா செயலி தொழில்நுட்பம் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளது.

சியோமி டிவிக்கு பதிலடி; பல வகையான டிவிக்களை அறிமுகம் செய்த எல்ஜி.!

மேலும் இந்த ஆண்டு 1.5 மில்லியன் டிவி மாடல்களை விற்க எல்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. மேலும் ஆன்லைன் தரவுகள் மற்றும் செட்-டாப் பாக்ஸ் போன்றவற்றை ஒற்றை தளத்தில் வழங்கும் வேலையை பேட்ச்வால் வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 எல்ஜி டிவி மாடல்கள்:

எல்ஜி டிவி மாடல்கள்:

எல்ஜி டபள்யூ8, ஜி8, சி8, இ8, மற்றும் பி8 போன்ற ஒஎல்இடி மாடல்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனங்கள் அனைத்தும் 49 முதல் 75 அங்குலங்கள் வரை இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமா ஸ்கிரீன் டிசைன், கண்ணாடி ஸ்கிரீன் போன்ற தனித்தனி அம்சங்கள் கொண்டுள்ளது இந்த எல்ஜி டிவி மாடல்கள்.

துல்லியமான நிறங்கள்:

துல்லியமான நிறங்கள்:

எல்ஜி நிறுவனம் முடிந்தவரை சிறந்த தரத்தை வழங்குவதற்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது, அதன்படி (ஆல்ஃபா) 9 அறிவார்ந்த செயலியை கொண்டு புதிய எல்ஜி சாதனங்கள் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய யூஎச்டி & ஒஎல்இடி டிவி மாடல்கள் பொறுத்தவரை துல்லியமான நிறங்கள் மற்றும் சரியான இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  டீப் திங் க்யூ:

டீப் திங் க்யூ:

எல்ஜி டிவி மாடல்களில் இடம்பெற்றுள்ள (AI) செயற்கை நுண்ணறிவு ஆனது, பயனர்கள் தங்கள் குரல் மூலம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த அனுமதிக்கும். மேலும் எல்ஜி பிரத்யேக ஆழ்ந்த கற்றல் தளம்,டீப் திங் க்யூ இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

எல்ஜி அறிமுகப்படுத்தியுள்ள சாதனங்களில் வைஃபை அல்லது ப்ளூடூத் மூலம் இணைப்புகளை சாத்தியமாக்க முடியும். மேலும் பல்வேறு
இணைப்பு ஆதரவுகள் வசதியைக் கொண்டுள்ளது இந்த எல்ஜி சாதனங்கள். கிராபிக்ஸ் மற்றும் சிறந்த தொழில்நுட்பம் இன்று தொலைக்காட்சிகளில் பொதுவாகப் பார்க்கும் அளவைக் காட்டிலும் அதிக கவனத்தை ஈர்க்கிறது.

 குரல் அங்கீகாரம்:

குரல் அங்கீகாரம்:

இருப்பினும், கூடுதல் துல்லியமான குரல் அங்கீகாரம் இந்தி போன்ற இந்திய மொழிகளை இன்னும் ஆதரிக்கவில்லை, ஆனால் பயனர்கள் அதை ஆங்கிலத்தில் பயன்படுத்த முடியும். ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கொரியா, மெக்ஸிக்கோ, போலந்து, ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இந்த சாதனங்கள் கிடைக்கும்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
மொழி:

மொழி:

தங்கள் விருப்பத்தை பொறுத்து முக்கிய அமைப்புகளிலிருந்து பின்வரும் மொழிகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியன், பிரேசிலிய போர்த்துகீசியம், போலந்து, கொரிய, ரஷியன், மற்றும் துருக்கிய மொழி.

Best Mobiles in India

English summary
LG Introduces Premium UHD and OLED TVs for 2018; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X