வாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட் டிவி சதானங்களின் சிறப்பம்சம் என்னவென்றால் இன்டர்நெட் வசதி இல்லமால் கூட 800-க்கும் அதிகமான வாய்ஸ் காமன்ட் சப்போட் செய்கின்றன.
சியோமி நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது, அந்நிறுவனத்திற்கு போட்டியாக தற்சமயம் எல்ஜி நிறுவனம் செயற்கை தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை
அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக யுஎச்டி, சூப்பர் யுஎச்டி மற்றும் ஒஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, அந்நிறுவனம மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஆல்ஃபா 9
எல்ஜி அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் ஆல்ஃபா 7 மற்றும் ஆல்ஃபா 9 போன்ற செயலிகள் இடம்பெற்றுள்ளன, குறிப்பாக செயற்கை தொழில்நுட்ப அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இவற்றைப் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வாய்ஸ் கன்ட்ரோல்
மேலும் வாய்ஸ் கன்ட்ரோல், வெப் ஒஎஸ் சப்போர்ட், மொபைல் ரெடி கனெஷன் ஒவர்லே மற்றும் டால்பி அட்மாஸ் சவுன்ட் போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இவற்றில் மேஜிக் ரீமோட் கன்ட்ரோல்
வழங்கப்பட்டுள்ளது, இதனை கொண்டு பாயின்ட், கிளிக், ஸ்கிரால் மற்றும் வாய்ஸ் கமான்ட் போன்றவற்றை பயன்படுத்த முடியும்.

இன்டர்நெட் வசதி
இந்த ஸ்மார்ட் டிவி சதானங்களின் சிறப்பம்சம் என்னவென்றால் இன்டர்நெட் வசதி இல்லமால் கூட 800-க்கும் அதிகமான வாய்ஸ் காமன்ட் சப்போட் செய்கின்றன. மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள ப்ளூடூத் அம்சங்களை கொண்டு ஸ்மார்ட்போன்
அல்லது ஆடியோ சாதனங்களை கொண்டு பாடல்களை கேட்டு ரசிக்க முடியும்.

நாய்ஸ் ரிடக்ஷன்
எச்டிஆர், டால்பி விஷன், டெக்னிகலரின் மேம்படுத்தப்பட்ட எச்டிஆர் வசதி, எச்டிஆர் 10ப்ரோ, போன்ற பல்வேறு அம்சங்களை
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள். மேலும் நாய்ஸ் ரிடக்ஷன் வசதி கூட இந்த ஸமார்ட் டிவிகளில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் துல்லியமான வீடியோக்களை வழங்கும் தொழில்நுட்ப அம்சத்துடன் இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளது.

விலை
எல்ஜி நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள டிவி மாடல்கள் 32-இன்ச் முதல் 72-இன்ச் வரை கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிக்களின் ஆரம்ப விலை ரூ.32,500 முதல் துவங்குகிறது.


Click it and Unblock the Notifications