Home
Gadgets

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ஆஃபரில் எல்ஜி 4கே டிவி.. டால்பி அட்மாஸ்.. எச்டிஆர் 10.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் எல்ஜி ஏஐ டிவி யுஏ7380 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடல் தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த டிவி டால்பி அட்மாஸ், எச்டிஆர்10 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. இங்கே இந்த ஸ்மார்ட் டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் எல்ஜி ஏஐ டிவி யுஏ7380 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 (LG AI TV UA7380 43 inch Ultra HD 4K LED Smart WebOS TV 2025) மாடலுக்கு தற்போது 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.32,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் எச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். ஆகவே இந்த டிவியை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ஆஃபரில் எல்ஜி 4கே டிவி.. எந்த மாடல்?

எல்ஜி ஏஐ டிவி யுஏ7380 43 இன்ச் 4கே வெப்ஓஎஸ் டிவி அம்சங்கள்: அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் எல்ஜி ஏஐ டிவி யுஏ7380 43 இன்ச் வெப்ஓஎஸ் டிவி வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10, 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

தரமான ஆல்பா7 ஏஐ ப்ராசஸர் 4கே ஜென்8 (alpha7 AI Processor 4K Gen8) உடன் எல்ஜி ஏஐ டிவி யுஏ7380 43 இன்ச் வெப்ஓஎஸ் டிவி மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ப்ராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவியில் உள்ளது.

4கே அப்ஸ்கேலிங் (4K Upscalling), டைனமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping), ஏஐ எச்டிஆர் ரீமாஸ்டரிங், 4கே எக்ஸ்பிரஷன் என்ஹான்சர் (4K Expression Enhancer), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), 9 பிக்சர் மோட் உள்ளிட்ட பல தரமான அம்சங்கள் இந்த எல்ஜி 43 இன்ச் டிவியில் உள்ளன.

Virtual 9.1.2 Up-mix மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் எல்ஜி 43 இன் 4கே டிவி மாடல் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro), எல்ஜி சவுண்ட் சின்க் (LG Sound Sync), வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro) போன்ற வசதிகளும் இந்த டிவியில் உள்ளன.

விஆர்ஆர் (VRR), ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் எச்ஜிஐஜி (HGiG) போன்ற பல கேமிங் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ஆஃபரில் எல்ஜி 4கே டிவி.. எந்த மாடல்?

ப்ளூடூத், பில்ட்-இன் வை-பை, எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட் , யுஎஸ்பி போர்ட்,லேன், ஆடியோ அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த எல்ஜி டிவியில் உள்ளன. மேலும் ஆப்பிள் டிவி, நெட்பிளிக்ஸ், யூடியூப், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேஜிக் ரிமோட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த எல்ஜி ஏஐ டிவி யுஏ7380 43 இன்ச் வெப்ஓஎஸ் டிவி மாடல். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் எல்ஜி ஏஐ டிவி யுஏ7380 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடல் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
LG AI TV UA7380 43 inch 4K WebOS TV 2025 available at 38 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X