பழைய டிவி காலி பண்ணுங்க.. 39 சதவீத ஆபரில் 55 இன்ச் டிவி.. Dolby Atmos ஆடியோ.. எல்ஜி WebOS TV.. எந்த மாடல்?
எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார் டிவிகளுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலைக்கு 55 இன்ச் எல்ஜி டிவிகள் கிடைக்கின்றன. இதில் 36 சதவீத தள்ளுபடியில் 55 இன்ச் எல்ஜி ஏஐ டிவி கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் ஆடியோ, வெப்டிவிஓஸ் கொடுத்துள்ளது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் எல்ஜி ஏஐ டிவி 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே 2025 எடிஷன் (LG AI TV 55 inch Ultra HD 4K 2025 Edition) மாடலுக்கு 36 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.39,990 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த டிவியை வாங்கி கொள்ளலாம்.

எல்ஜி ஏஐ டிவி 55 இன்ச் 4கே அம்சங்கள் (LG AI TV 55 inch 4K Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது. அல்ட்சா எச்டி 4கே ரெசொலூஷன், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 4கே சூப்பர் அப்ஸ்கேலிங் (4K Super Upscaling), ஏஎல்எல்எம் (ALLM), விஆர்ஆர் (VRR) மற்றும் ஏஐ பிக்சர் ப்ரோ ( AI Picture Pro) கிடைக்கிறது.
4கே எக்ஸ்பிரஷன் என்ஹான்ஸ் (4K Expression Enhance), ஏஐ பிக்சர் விசார்ட் (AI Picture Wizard) மற்றும் எச்டிஆர்10 (HDR10) பீச்சர்களும் கிடைக்கின்றன. ஏ7 ஏஐ ப்ராசஸர் ஜென்8 (A7 AI Processor Gen8) சிப்செட் மற்றும் வெப்ஓஎஸ் (webOS) இந்த 55 இன்ச் எல்ஜி ஏஐ 4கே டிவிக்கு கிடைக்கிறது. இதிலும் குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromcast buit-in) கிடைக்கிறது.
மேலும், ஏஐ சர்ச் (AI Search), ஏஐ சாட்பாட் (AI Chatbot), ஏஐ வாய்ஸ் ஐடி (AI Voice ID) மற்றும் ஏஐ மேஜிக் ரிமோட் (AI Magic Remote) கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோருடன் (Google Play Store), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொண்டுள்ளது.
20 W சவுண்ட அவுட்புட் கொண்ட டவுண் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் 9.1.2 சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) கிடைக்கிறது. மேலும், ஏஐ சவுண்ட் விசார்ட் (AI Sound Wizard), ஏஐ கிளியர் சவுண்ட் (AI Clear Sound), ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro), டைனாமிக் சவுண்ட் பூஸ்டர் (Dynamic Sound Booster) கொண்டுள்ளது.
டால்பி டிஜிட்டல் (Dolby Digital), ஏஐ அகஸ்டிக் டியூனிங் (AI Acoustic Tuning), எல்ஜி சவுண்ட் சின்க் (LG Sound Sync), சவுண்ட் மோட் ஷேர் (Sound Mode Share) ஆகியவற்றை இந்த 55 இன்ச் எல்ஜி ஏஐ 4கே டிவி கொண்டுள்ளது. எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports) மூன்று கிடைக்கின்றன. எல்ஏஎன் (LAN), 1 யுஎஸ்பி (USB) போர்டு உள்ளது. ஆப்டிகல் டிஜிட்டல் ஆடியோ அவுட் உள்ளது.
ப்ளூடூத் மற்றும் வை-பை கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. 55UA82006LA மாடல் மற்றும் AI TV UA8200 சீரிஸ் கீழ் இந்த டிவி வாங்கி கிடைக்கிறது. பிளாக் கலர் மற்றும் பெசல்-லெஸ் டிசைனில் கிடைக்கிறது. ஒரு வருட வாரண்டி கிடைக்கிறது. 2025 எடிஷனாக இருக்கிறது. வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் இந்த 55 இன்ச் எல்ஜி ஏஐ 4கே டிவிக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








