பொங்கல் SALE பொளக்குது.. 43 சதவீத ஆபரில் 50 இன்ச் 4K டிவி.. டால்பி அட்மோஸ்.. வெப் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பொங்கல் தினத்தன்று எல்ஜி ஏஐ டிவி 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே 2025 எடிஷன் (LG AI TV 50 inch Ultra HD 4K 2025 Edition) மாடலானது நம்ப முடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ், 4கே சூப்பர் அப்ஸ்கேலிங், ஏஐ மேஜிக் ரிமோட் போன்ற பீச்சர்களுடன் அறிமுகமாகி உள்ளது.
இந்திய மார்கெட்டில் எல்ஜி டிவிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 43 சதவீத தள்ளுபடி விலையில் எல்ஜி ஏஐ டிவி 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே 2025 எடிஷன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.36,589 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.1,500 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே, ரூ.35,089 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

எல்ஜி ஏஐ டிவி 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே 2025 எடிஷன் (LG AI TV 50 inch Ultra HD 4K 2025 Edition Specifications): ஆல்பா7 ஏஐ ப்ராசஸர் 4கே ஜென்8 (Alpha7 AI Processor 4K Gen8) மற்றும் வெப்ஓஎஸ் டிவி (WebOS TV) கொண்டுள்ளது. ஏஐ மேஜிக் ரிமோட் (AI Magic Remote), ஏஐ சர்ச் எம்எஸ் கோபைலட் (AI Search, MS Copilot) கொடுக்கப்பட்டு உள்ளது.
வெப்ஓஎஸ் டிவி மாடலாக இருப்பதால் ஏஐ சர்ச் (AI Search), ஏஐ சட்பாட் (AI Chatbot) மற்றும் ஏஐ கான்சைர்ஜ் (AI Concierge) கிடைத்துள்ளது. மேலும், ஏஐ வாய்ஸ் ஐடி (AI Voice ID) கிடைக்கிறது. குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast Built-in) உள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) இந்த எல்ஜி ஏஐ டிவி 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே 2025 எடிஷனில் கிடைக்கிறது.
பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை கொடுத்துள்ளது. 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைத்துள்ளது. இந்த 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், அல்ட்சா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன் மற்றும் 9.5 எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் இந்த டிவி கொண்டுள்ளது.
மேலும், 4கே சூப்பர் அப்ஸ்கேலிங் (4K Super Upscaling), ஏஐ பிக்சர் ப்ரோ (AI Picture Pro), 4கே எக்ஸ்பிரஷன் என்ஹான்ஸ் (4K Expression Enhance), ஏஐ பிக்சர் விசார்ட் (AI Picture Wizard) ஆகியவற்றை இந்த
எல்ஜி ஏஐ டிவி 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே 2025 எடிஷன் கொண்டுள்ளது. வழக்கமாக கிடைக்கும் எச்டிஆர்10 (HDR10), ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் விஆர்ஆர் (VRR) பீச்சர்களும் கிடைக்கின்றன.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட 20 W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது. இந்த அவுட்புட் கொடுக்க 2 ஸ்பீக்கர்கள் வருகின்றன. இதில் 9.1.2 சரவுண்ட் சவுண்ட் (9.1.2 Surround Sound) மட்டுமல்லாமல், டைனாமிக் சவுண்ட் பூஸ்டர் (Dynamic Sound Booster) கிடைத்துள்ளது. ஏஐ சவுண்ட் விசார்ட் (AI Sound Wizard), ஏஐ கிளியர் சவுண்ட் (AI Clear Sound) போன்ற ஏஐ பீச்சர்களும் கிடைக்கின்றன.
50UA82006LA மாடல் மற்றும் AI TV UA8200 சீரிஸ் கீழ் இந்த எல்ஜி ஏஐ டிவி 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே 2025 எடிஷன் விற்பனைக்கு வருகிறது. 2025 மாடலாக இருக்கிறது. 1 வருட வாரண்டி உள்ளது. எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, எல்ஏஎன், ஆடியோ ஜாக், ஏவி இன் போர்ட்கள் உள்ளன. பில்ட் இன் வை-பை, ப்ளூடூத் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் உள்ளிட்ட வயர்லெஸ் கனெக்டிவிட்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








