Flipkart ஒரே போடு .. 41 சதவீத ஆஃபரில் 55 இன்ச் LG டிவி.. டால்பி அட்மோஸ்.. எச்டிஆர் 10.. வெப்ஓஎஸ்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் எல்ஜி ஏஐ கியூஎன்இடி65 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே வெப்ஓஎஸ் டிவி 2026 (LG AI QNED65 55 inch Ultra HD 4K WebOS TV 2026) தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த எல்டி மாடலின் முழு விவரங்களை பார்க்கலாம்.
இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 41 சதவீத தள்ளுபடியுடன் எல்ஜி ஏஐ கியூஎன்இடி65 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே வெப்ஓஎஸ் டிவி 2026 கிடைக்கிறது. ஆகவே, ரூ.53,999 விலைக்கு வாங்கலாம். இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.7,764 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது.

எல்ஜி ஏஐ 55 இன்ச் 4கே வெப்ஓஎஸ் டிவி 2026 அம்சங்கள் (LG AI QNED65 55 inch 4K WebOS TV 2026 Specifications): வெப்ஓஎஸ் 26 (webOS 26) உடன் இந்த எல்ஜி டிவி கிடைக்கிறது. இதில் ஏஐ மேஜிக் ரிமோட் (AI Magic Remote), இன்டலிஜென்ட் வாய்ஸ் ரிககனைசேஷன் (Intelligent Voice Recognition) உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளன. வாய்ஸ் கமாண்ட் மூலம் டிவியை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
மேலும், ஏஐ சாட்பாட் (AI Chatbot), ஏஐ வாய்ஸ் ஐடி (AI Voice ID), எம்எஸ் கோபைலட் சப்போர்ட் உடனான ஏஐ சர்ச் (AI Search) போன்ற பீச்சர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. யூசர்களின் பாதுகாப்பை மேம்படுத்த எல்ஜி ஷீல்டு (LG Shield) வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் ஹோம் (Google Home), கூகுள் காஸ்ட் (Google Cast) ஆகியவற்றுக்கும் சப்போர்ட் உள்ளது.
இந்த எல்ஜி 55 இன்ச் டிவியில் 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. 55 இன்ச் 4கே கியூஎன்இடி (4K QNED) டிஸ்பிளேவுடன் வரும் இந்த மாடலில், டைனாமிக் கியூஎன்இடி கலர் (Dynamic QNED Color) தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. மேலும், ஏ7 ஏஐ ப்ராசஸர் 4கே ஜென்9 (α7 AI Processor 4K Gen9) சிப்செட் உள்ளது.
4கே சூப்பர் அப்ஸ்கேலிங் (4K Super Upscaling), டைனாமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping), ஏஐ எச்டிஆர் ரீமாஸ்டரிங் (AI HDR Remastering) போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பிரிசிசியன் எச்டிஆர் மாஸ்டர் ப்ரோ (Precision HDR Master Pro), 4கே எக்ஸ்பிரஷன் என்ஹான்சர் (4K Expression Enhancer) ஆகியவையும் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்குகின்றன.
கேமிங் மற்றும் மூவிக்கள் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் எஸ்டிஆர், எச்டிஆர் தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆட்டோ பிரைட்னஸ் கன்ட்ரோல் (Auto Brightness Control), டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG) ஆகிய அம்சங்களும் உள்ளன. இதனால், வெவ்வேறு வகையான கன்டென்ட்களை சிறந்த ரெசொலுஷனில் பார்க்க முடியும்.
ஆடியோவைப் பொறுத்தவரை, இந்த டிவியில் ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro) தொழில்நுட்பத்துடன் 20W சவுண்ட் அவுட்புட் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10W வூப்பர்களும் இடம்பெற்றுள்ளன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), கிளியர் வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro), பிரிசிசியன் சவுண்ட் மாஸ்டர் ப்ரோ (Precision Sound Master Pro) ஆகியவை ஆடியோ அனுபவத்தை மேம்படுத்த உதவுகின்றன.
கனெக்டிவிட்டி வசதிகளுக்காக எல்ஜி சவுண்ட் சிங்க் (LG Sound Sync), ப்ளூடூத் சரவுண்ட் சவுண்ட் ரெடி உள்ளிட்ட பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் மற்றும் யூஎஸ்பி போர்ட் இடம்பெற்றுள்ளன. வை-ஃபை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) வசதிகளும் இருப்பதால், மற்ற டிவைஸ்களை எளிதாக இணைத்து பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications
