ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 44 சதவீத ஆஃபரில் 55 இன்ச் LG டிவி.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?
எல்ஜி டிவி மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. பிராண்ட் டிவி மாடல்களின் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் எல்ஜி இருப்பதால், விற்பனையிலும் தனி வரவேற்பு பெற்று வருகிறது. இதில் எல்ஜி ஏஐ நானோ என்யூ87 55 இன்ச் டிவி (LG AI NANO NU87 55 inch TV) தள்ளுபடியில் கிடைப்பதால், ஆர்டர் குவிந்து வருகிறது.
ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro) கொண்ட இந்த எல்ஜி ஏஐ நானோ என்யூ87 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி (LG AI NANO NU87 55 inch Ultra HD 4K LED Smart WebOS TV) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 44 சதவீத தள்ளுடி கொடுக்கப்பட்டு ரூ.47,990 விலைக்கு வாங்க கிடைக்கிறது.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,500 தள்ளுபடியும் கிடைக்கிறது. பேடிஎம் வழியாக ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.3,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.44,490 விலைக்கு இந்த எல்ஜி ஏஐ நானோ என்யூ87 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவியை வாங்கி கொள்ளலாம்.
எல்ஜி ஏஐ நானோ என்யூ87 55 இன்ச் டிவி அம்சங்கள் (LG AI NANO NU87 55 inch TV Specifications): ஆல்பா ஏஐ ப்ராசஸர் 4கே ஜென்9 (alpha7 AI Processor 4K Gen9) மற்றும் வெப்ஓஎஸ் (WebOS) கொண்ட மாடலாக இந்த எல்ஜி ஏஐ நானோ என்யூ87 55 இன்ச் டிவி இருக்கிறது. ஆகவே, எல்ஜி ஷீல்டு (LG Sheild) டெக்னாலஜிகள் கிடைக்கின்றன.
60 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கொண்ட 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன், 4கே அப்ஸ்கேலிங் (4K Upscalling), எச்டிஆர்10 (HDR10) மற்றும் நானோ டீடெயில் என்ஹான்சர் (Nano Detail Enhancer) கொடுக்கப்பட்டு உள்ளது. கூகுள் ஜெமினி (Google Gemini) சப்போர்ட் உள்ளது.
மேலும், மைக்ரோசாப்ட் கோபைலட் (Microsoft Copilot) சப்போர்ட் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மட்டுமல்லாமல், ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த எல்ஜி ஏஐ நானோ என்யூ87 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி விற்பனைக்கு கிடைக்கிறது.
இதுபோக ஏஐ சவுண்ட் விசார்ட் (AI Soung Wizard), ஏஐ பிக்சர் விசார்ட் (AI Picture Wizard) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. கேமிங் பிரியர்களுக்காக 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுல்லாமல், விஆர்ஆர் (VRR), ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் எச்ஜிஐஜி (HGiG) இந்த எல்ஜி ஏஐ நானோ என்யூ87 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவிக்கு கிடைக்கிறது.
1.5 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இருக்கிறது. பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொடுத்துள்ளது. எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், எல்ஏஎன் மற்றும் ஆடியோ அவுட் உள்ளது. ஆப்பிள் டிவி, நெட்பிளிக்ஸ், யூடியூப், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications