Home
Gadgets

பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. LG 4கே ஸ்மார்ட் டிவிக்கு நம்ப முடியாத ஆஃபர்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் எல்ஜி நிறுவனத்தின் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தனித்துவமான வடிவமைப்பு, தரமான ஆடியோ மற்றும் மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த எல்ஜி 43 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 43UR75006LC மாடல் நம்பர் கொண்ட எல்ஜி ஏஐ யுஆர்7500 43 இன்ச் 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 (LG AI UR7500 43 inch 4K Smart WebOS TV 2025) மாடலுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.23490 விலையில் வாங்கிவிட முடியும்.

LG 4கே ஸ்மார்ட் டிவிக்கு நம்ப முடியாத ஆஃபர்.. எந்த மாடல்?

எல்ஜி ஏஐ யுஆர்7500 43 இன்ச் 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 அம்சங்கள் (LG AI 43 inch Ultra HD 4K Smart WebOS TV 2025 Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 ப்ரோ, 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

அதேபோல் AI பிரைட்னஸ் கண்ட்ரோல் கொண்டுள்ளது இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் எச்எல்ஜி (HLG), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) உள்ளிட்ட வசதிகளும் இந் எல்ஜி ஸ்மார்ட் டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

α5 AI பிராசஸர் 4கே ஜென் 6 உடன் எல்ஜி ஏஐ யுஆர்7500 43 இன்ச் 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் வகையில் Alpha 5 AI பிராசஸர் 4கே ஜென் 6 (Alpha 5 AI Processor 4K Gen6) எனும் கிராபிக்ஸ் பிராசஸர் வசதியும் இதில் உள்ளது.

குறிப்பாக ஆட்டோமேட்டிக் லோ-லேடன்சி மோட் (automatic low-latency mode - ALLM) ஆதரவுடன் இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) ஆதரவும் இந்த எல்ஜி டிவியில் உள்ளது. அதபோல் வெப்ஓஎஸ் (WebOS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே இந்த டிவியில் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.

யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஈரோஸ் நவ் (Eros Now), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட பல்வேறு ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் எல்ஜி ஏஐ யுஆர்7500 43 இன்ச் 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடல் வெளிவந்தது.

LG 4கே ஸ்மார்ட் டிவிக்கு நம்ப முடியாத ஆஃபர்.. எந்த மாடல்?

டால்பி டிஜிட்டல், Virtual 5.1 Up-mix உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் இந்த எல்ஜி டிவி வெளிவந்துள்ளது. ஆகவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிக்கல் டிஜிட்டல் ஆடியோ அவுட், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட் ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன.

ஸ்மார்ட ரிமோட் உடன் எல்ஜி ஏஐ யுஆர்7500 43 இன்ச் 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த ரிமோட்டில் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவும் உள்ளன. குறிப்பாக அலெக்சா பில்ட்-இன் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG AI 43 inch Ultra HD 4K Smart WebOS TV 2025 gets 50 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X