எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவிகள்: என்னென்ன சிறப்பம்சங்கள்?

|

எல்ஜி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, குறிப்பாக இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளத என்றுதான் கூறவேண்டும். இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவிகளை சிறந்த தொழில்நுட்பங்களுடன் தயார் செய்கிறது.

எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவிகள்.!

தற்சமயம் இந்நிறுவனம் 8கே ஒஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, அதுவும் சமீபத்திய NVIDIA GeForce RTX 30 தொடர் GPU ஆதரிக்கும் உலகின் முதல் 8K டி.வி.கள் சமீபத்திய எல்ஜி ஸ்மார்ட் டிவிகள் தான் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் அட்டகாசமான கேமிங் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, பின்பு இது சுய-லிட் பிக்சல் தொழில்நுட்பத்துடன் வருகிறது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவிகள்.!

மேலும் இந்த வரம்பு சமீபத்திய HDMI விவரக்குறிப்புகளான மாறும் புதுப்பிப்பு வீதம் ((ultra-fast response rate) அதிவேக மறுமொழி விகிதம் (ரடவசய-கயளவ சநளிழளெந சயவந) மற்றும் ஆட்டோ லோ லேட்டன்சி பயன்முறை Auto Low Latency Mode- ALLM) ஆகியவற்றை ஆதரிக்கிறது.

எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவிகள்.!

குறிப்பாக புதிய எல்ஜி ஸ்மார்ட் டிவிகள் NVIDIA G-SYNC உடன் இணக்கமாக உள்ளன, எனவே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை GeForce RTX 20 சீரிஸ் மற்றும் GTX 16 சீரிஸ் GPU களுடன் மென்மையான, நம்பமுடியாத 8 கே இல் அடுத்த நிலை கேமிங் அனுபவத்தை வழங்குகிறது" என்று எல்ஜியின் ஹோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் டிவி தயாரிப்பு திட்டமிடல் பிரிவின் துணைத் தலைவர் எஸ்.பி. பைக் கூறினார்

உலகின் சிறந்த கேமிங் வன்பொருள் பிராண்டோடு கடந்த ஆண்டு வெற்றிகரமான கூட்டாட்சியைத் தொடர்ந்து, என்விடியாவுடனான எங்கள் உறவை விரிவுபடுத்த எதிர்பார்க்கிறோம் என்று எல்ஜி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
LG 8K OLED TVs Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X