அமேசானில் ஆர்டர் அமோகம்.. 65-இன்ச் LG TV மீது 43% டிஸ்கவுண்ட்.. தரமான 20W டால்பி அட்மோஸ் சவுண்டு!
உங்கள் வீட்டில் உள்ள 32-இன்ச் அல்லது 43-இன்ச் டிவி மாடல்களை ஓரங்கட்டி விட்டு.. இன்னும் பெரிதாக 65-இன்ச் ஸ்மார்ட் டிவியை (65 inch Smart TV) வாங்க வேண்டும் என்கிற திட்டம் உங்களிடம் இருந்தால்.. இதுவே அதற்கான சரியான நேரமாக இருக்கலாம்.
ஏனென்றால் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவில் (Amazon India) எல்ஜி நிறுவனத்தின் 65 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலொன்று 43% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அது என்ன மாடல்? என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? 43% டிஸ்கவுண்ட்டில் வாங்க கிடைப்பது எல்ஜி 65-இன்ச் யுஏ82 ஏஐ சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி (LG 65-inch UA82 AI Series 4K Ultra HD Smart webOS LED TV - 65UA82006LA) மாடலாகும்.
என்ன ஆபர்? எல்ஜி நிறுவனத்தின் இந்த 65 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது, தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 43% டிஸ்கவுண்ட்டை பெற்று அதன் எம்ஆர்பி விலையான ரூ.1,05,990 க்கு பதிலாக, ரூ.59,990 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
என்னென்ன அம்சங்கள்? ரெசல்யூஷனை பொறுத்தவரை இந்த 65-இன்ச் ஸ்க்ரீன் ஸ்மார்ட் டிவியானது 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160) ரெசல்யூஷனை வழங்கும். மேலும் இது 60 ஹெர்ட்ஸ் நேட்டிவ், 178-டிகிரி வைட் வியூயிங் ஆங்கிளையும் (Wide viewing angle) வழங்கும். மேலும் இந்த டிஸ்பிளேவில் 4கே சூப்பர் அப்ஸ்கேலிங், டைனமிக் டோன் மேப்பிங், எச்டிஆர்10 / எச்எல்ஜி, ஃபிலிம்மேக்கர் மோட், 4கே எக்ஸ்பிரஷன் என்ஹான்சர் ஆகிய அம்சங்களும் உள்ளன.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது செட் டாப் பாக்ஸ், ப்ளூ ரே பிளேயர்கள், கேமிங் கன்சோல் ஆகியவற்றை இணைக்க 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், ஹார்டு டிரைவ்கள் மற்றும் பிற யுஎஸ்பி டிவைஸ்களை இணைக்க 1 யுஎஸ்பி போர்ட், பில்ட் இன் வைஃபை, ப்ளூடூத்வி 5.0, ஈதர்நெட் இன்புட் ஆகியவைகளை கொண்டுள்ளது.
சவுண்ட்டை பொறுத்தவரை இது 20 வாட்ஸ் அவுப்புட்டை வழங்குகிறது. கூடுதலாக இது - ஏஐ சவுண்ட் ப்ரோ (விர்ச்சுவல் 9.1.2 அப்-மிக்ஸ்), டால்பி அட்மாஸ், கிளியர் வாய்ஸ் ப்ரோ (ஆட்டோ வால்யூம் லெவலிங்), ஏஐ அகௌஸ்டிக் ட்யூனிங், எல்ஜி சவுண்ட் சிங்க், ப்ளூடூத் சரவுண்ட் ரெடி (டூவே பிளேபேக்), WOW ஆர்கெஸ்ட்ரா, டவுன் ஃபயரிங் ஸ்பீக்கர்ஸ் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.
ஸ்மார்ட் அம்சங்களை பொறுத்தவரை இது ஏஎல்எல்எம் (ALLM) என்கிற ஆட்டோ லோ லேடன்சி மோட் (Auto Low Latency Mode), எல்ஜி திங்க் (LG ThinQ) ஆப் உடனான இன்டெலிஜென்ட் வாய்ஸ் ரிக்கனைசேஷன் (Intelligent Voice Recognition), ஹே கூகுள் (Hey Google) ஆதரவு ஆகியவைகளை கொண்டுள்ளது
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 2 ஜிபி ரேம், 8 ஜிபி ரோம் | 125 க்கும் மேற்பட்ட இலவச எல்ஜி சேனல்கள், கூடுதலாக அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ5, ஆப்பிள் டிவி மற்றும் பல ஆப்களுக்கான ஆதரவு ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








