கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. 51 சதவீத ஆஃபில் LG 55 இன்ச் டிவி.. டால்பி அட்மாஸ்.. HDR 10.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. தற்போது இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் எல்ஜி நிறுவனத்தின் 55 இன்ச் 4கே டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் எல்ஜி 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2026 எடிஷன் (LG 55 inch Ultra HD 4K LED Smart WebOS TV 2026 Edition) மாடலுக்கு 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.41,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.7,230 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.34,769 விலையில் வாங்கிவிட முடியும்.

எல்ஜி 55 இன்ச் 4கே வெப்ஓஎஸ் டிவி 2026 அம்சங்கள் (LG 55 inch 4K Smart WebOS TV 2026 Edition Specifications): இந்த எல்ஜி 55 இன்ச் டிவி அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் வெளியாகி உள்ளது. இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10, 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.
ஆல்பா7 ஏஐ ப்ராசஸர் 4கே ஜென்9 (alpha7 AI Processor 4K Gen9) உடன் எல்ஜி 55 இன்ச் 4கே வெப்ஓஎஸ் டிவி 2026 எடிஷன் மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ப்ராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவியில் உள்ளது.
4கே அப்ஸ்கேலிங் (4K Upscalling), டைனமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping), ஏஐ எச்டிஆர் ரீமாஸ்டரிங், 4கே எக்ஸ்பிரஷன் என்ஹான்சர் (4K Expression Enhancer), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), 9 பிக்சர் மோட் உள்ளிட்ட பல தரமான அம்சங்கள் இந்த எல்ஜி 55 இன்ச் டிவியில் உள்ளன.
1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி வெளியாகி உள்ளது. ஸ்மார்ட் ரிமோட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த எல்ஜி 55 இன்ச் 4கே வெப்ஓஎஸ் டிவி 2026 எடிஷன் மாடல்.
அதுவும் Virtual 9.1.2 Up-mix மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் எல்ஜி 55 இன் 4கே டிவி மாடல் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro), எல்ஜி சவுண்ட் சின்க் (LG Sound Sync), வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro) போன்ற வசதிகளும் இந்த டிவியில் உள்ளன.

ஏஎல்எல்எம் (ALLM) விஆர்ஆர் (VRR), மற்றும் எச்ஜிஐஜி (HGiG) போன்ற பல கேமிங் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.
பில்ட்-இன் வை-பை, ப்ளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட் , யுஎஸ்பி போர்ட்,லேன், ஆடியோ அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த எல்ஜி டிவியில் உள்ளன. ஆப்பிள் டிவி, நெட்பிளிக்ஸ், யூடியூப், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
