இனி பழைய டிவியை தூக்கி வீசுங்க.. HDR 10.. டால்பி அட்மாஸ்.. LG 55 இன்ச் டிவிக்கு விலை குறைப்பு.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தற்போது Mega World Cup Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் பிப்ரவரி 22 வரை மட்டுமே இருக்கும். குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் 55 இன்ச் டிவிகள் விலை குறைப்பில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் எல்ஜி நிறுவனத்தின் 55 இன்ச் டிவியும் கூட தற்போது விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது.
எல்ஜி 55 இன்ச் யுஏ82 சீரிஸ் 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி (LG 55 inch UA82 Series 4K Smart webOS TV) மாடல் முன்பு ரூ.66,290 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் இந்த டிவியின் விலை குறைக்கப்பட்டு ரூ.39,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.38,990 விலையில் வாங்கிவிட முடியும்.

எல்ஜி 55 இன்ச் யுஏ82 சீரிஸ் 4கே டிவி அம்சங்கள் (LG 55 inch UA82 Series 4K Smart webOS TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த எல்ஜி 55 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10, எச்எல்ஜி (HLG), டைனமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக மேம்பட்ட கிளாரிட்டி மற்றும் பிரைட்னஸ் கொண்டுள்ளது இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (VRR), ஏஐ சர்ஸ் (AI Search) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த 55 இன்ச் எல்ஜி ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி இந்த டிவியில் உள்ளது.
α7 AI பிராசஸர் 4கே ஜென் 8 பிராசஸர் உடன் இந்த எல்ஜி 55 இன்ச் யுஏ82 சீரிஸ் 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி மாடல் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த டிவியில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.
ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), 4கே சூப்பர் அப்ஸ்கேலிங் (4K Super Upscaling), 4K எக்ஸ்பிரஷன் என்ஹான்சர் போன்ற தனித்துவமான அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். அதுவும் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.
இந்த எல்ஜி 55 டிவி வெப்ஓஎஸ் (WebOS) மூலம் இயங்குகிறது. எனவே இந்த டிவியில் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். யூடியூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஈரோஸ் நவ் (Eros Now), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட பல்வேறு ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

ஏஐ சவுண்ட் ப்ரோ, Virtual 9.1.2 Up-mix மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த 55 இன்ச் எல்ஜி டிவி. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவியில் உள்ளது.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், லேன், ஆப்டிக்கல் டிஜிட்டல் ஆடியோ அவுட் ஆர்எப் இன்புட், வைஃபை, புளூடூத் போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவியில் உள்ளன. குரோம்காஸ்ட் பில்ட்-இன் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது. இதுதவிர பல கேமிங் அம்சங்களுடன் எல்ஜி 55 இன்ச் யுஏ82 சீரிஸ் 4கே டிவி வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








