நேரம் பார்த்து அடித்த அமேசான்.. டால்பி அட்மாஸ்.. HDR10.. ஆஃபரில் LG 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தற்போது Prime Day Early Deal எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது இந்த சிறப்பு விற்பனையில் எல்ஜி 43 இன்ச் என்யு87 ஏஐ சீரிஸ் நானோ 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி (LG 43 inch NU87 AI Series Nano 4K Ultra HD Smart webOS LED TV) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அமேசான் சிறப்பு விற்பனையில் எல்ஜி 43 இன்ச் என்யு87 ஏஐ சீரிஸ் நானோ 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி மாடலுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.30.999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

எல்ஜி 43 இன்ச் என்யு87 ஏஐ சீரிஸ் நானோ 4கே டிவி அம்சங்கள் ( LG 43 inch NU87 AI Series Nano 4K webOS TV Specifications): இந்த 43 இன்ச் எல்ஜி டிவி 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3,840 x 2,160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate), எச்டிஆர் 10, எஸ்டிஆர் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
அதேபோல் ஆல்பா ஏஐ ப்ராசஸர் 4கே ஜென்9 (alpha7 AI Processor 4K Gen9) உடன் இந்த எல்ஜி டிவி வெளியாகி உள்ளது, குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் வெப்ஓஎஸ் (WebOS) மூலம் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி இயங்குகிறது.
4கே அப்ஸ்கேலிங் (4K Upscalling), டைனமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping), ஏஐ எச்டிஆர் ரீமாஸ்டரிங், 4கே எக்ஸ்பிரஷன் என்ஹான்சர் (4K Expression Enhancer), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), 9 பிக்சர் மோட் உள்ளிட்ட பல தரமான அம்சங்கள் இந்த எல்ஜி 43 இன்ச் டிவியில் உள்ளன.
1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் எல்ஜி 43 இன்ச் என்யு87 ஏஐ சீரிஸ் நானோ 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி மாடல் வெளியாகி உள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் கோபைலட் (Microsoft Copilot) மற்றும் ஜெமினி ஏஐ உள்ளிட்ட ஆதரவுகளும் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவியில் உள்ளன.
Virtual 9.1.2 Up-mix மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் எல்ஜி 43 இன்ச் என்யு87 ஏஐ சீரிஸ் நானோ 4கே டிவி மாடல் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro), எல்ஜி சவுண்ட் சின்க் (LG Sound Sync), வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro) போன்ற வசதிகளும் இந்த டிவியில் உள்ளன.

எல்ஜி ஷீல்டு (LG Sheild) டெக்னாலஜி ஆதரவுடன் இந்த 43 இன்ச் டிவி வெளியாகி உள்ளது. விஆர்ஆர் (VRR), ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் எச்ஜிஐஜி (HGiG) போன்ற பல கேமிங் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.
ப்ளூடூத் V5.3, பில்ட்-இன் வை-பை, எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட் , யுஎஸ்பி போர்ட்,லேன், ஆடியோ அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த எல்ஜி டிவியில் உள்ளன. மேலும் ஆப்பிள் டிவி, நெட்பிளிக்ஸ், யூடியூப், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications