Home
Gadgets

இது TV இல்ல, சினிமா தியேட்டர்.. 100W சவுண்ட் சிஸ்டம் உடன் 136-இன்ச் TV அறிமுகம்.. எந்த மாடல்?

எல்ஜி (LG) நிறுவனம் ஆனது ஹோம் சினிமா இன்ஸ்டாலேஷன்களுக்காக வடிவமைக்கப்பட்ட 136 இன்ச் 4கே டிஸ்பிளே (136 inch 4K display) கொண்ட மேக்னிட் ஆக்டிவ் மைக்ரோ எல்இடி ஸ்மார்ட் டிவியை (Magnit Active Micro LED TV) அறிமுகப்படுத்தி உள்ளது.

எல்ஜி 136-இன்ச் மேக்னிட் ஆக்டிவ் மைக்ரோ எல்இடி ஸ்மார்ட் டிவி அம்சங்கள்: இது 3840 x 2160 பிக்சல்ஸ் 4கே ரெசல்யூஷன் மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு பிக்சலுக்கும் சுயாதீனமான கட்டுப்பாட்டை வழங்க எல்ஜி நிறுவனமானது ஆக்டிவ் மேட்ரிக்ஸ் மைக்ரோ எல்இடி (LG Active Matrix Micro LED) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

100W சவுண்ட் சிஸ்டம் உடன் 136-இன்ச் LG TV அறிமுகம்!

இந்த அணுகுமுறை பேசிவ் மேட்ரிக்ஸ் (Passive Matrix) அமைப்புகளில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய வரிசை மற்றும் நெடுவரிசை கட்டுப்பாட்டை (Row-and-column control) நம்புவதற்கு பதிலாக ஒவ்வொரு பிக்சலும் அதன் சொந்த ஒளியை வெளியிட அனுமதிப்பதன் மூலம் டீட்டெயில் (Detail), கான்ட்ராஸ்ட் மற்றும் கலர் அக்யூரஸியை (Color accuracy) மேம்படுத்துகிறது.

எல்ஜியின் இந்த 136-இன்ச் ஸ்மார்ட் டிவிடின் டிஸ்பிளேவானது 1,000,000:1 என்ற கான்ட்ராஸ்ட் ரேஷியோவை (1,000,000:1 contrast ratio) அடைகிறது மற்றும் டால்பி விஷனை (Dolby Vision) ஆதரிக்கிறது. பிளாக் லெவல்களை (Black Levels) மேம்படுத்தவும் சுற்றுப்புற விளக்குகளின் விளைவுகளை (Effects of ambient lighting) குறைக்கவும் எல்ஜி நிறுவனம் இந்த ஸ்மார்ட் டிவியில் லோ ரெஃப்ளெக்ஷன் சர்பேஸ் ட்ரீட்மெண்ட்டை (Low-reflection surface treatment) பயன்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவியின் மாடுலர் டிசைன் ஆனது விஷூவல் சீம்களை குறைத்து ஒருங்கிணைந்த ஸ்க்ரீனை உருவாக்க மைக்ரோ எல்இடி பேனல்களை அதிக துல்லியத்துடன் சீரமைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளேவானது எல்ஜி நிறுவனத்தின் ஆல்பா 9 ஏஐ (Alpha 9 AI) சிப்பின் 6வது தலைமுறையில் இயங்குகிறது.

இது காட்சிகளை நிகழ்நேரத்தில் பகுப்பாய்வு செய்து சரிசெய்து கூர்மையை மேம்படுத்தவும், நாய்ஸ்-ஐ குறைக்கவும், முகம் மற்றும் பொருள் விவரங்களை முன்னிலைப்படுத்தவும் செய்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் எல்ஜி நிறுவனம் 100W அவுட்புட்டை வழங்கும் 4.2-சேனல் ஸ்பீக்கர் சிஸ்டமையும் ஒருங்கிணைத்துள்ளது. லாஸ்லெஸ் ஆடியோ பிளேபேக்கிற்காக இந்த ஸ்பீக்கர் சிஸ்டம் ஆனது மேம்படுத்தப்பட்ட ஆடியோ ரிட்டர்ன் சேனலை (enhanced Audio Return Channel- eARC) ஆதரிக்கிறது.

இந்த டிவி எல்ஜியன் வெப்ஓஎஸ் (webOS) தளத்தை ஆதரிக்கிறது, இதில் எல்ஜி சேனல்கள், ஓடிடி ஆப்கள் மற்றும் ஆர்ட் அல்லது தீம் கன்டென்ட்-ஐ காண்பிப்பதற்கான எல்ஜி கெளரி பிளஸ் (LG Gallery Plus) அணுகல் ஆகியவைகளும் அடங்கும். இந்த மாடல் ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) டிவைஸ்களிலிருந்து ஸ்க்ரீன் ஷேரிங்க்கான ஏர்பிளே 2 (AirPlay 2) மற்றும் மிராகாஸ்ட் (Miracast) ஆகிய இரண்டிற்கும் இணக்கமானது.

எல்ஜி 136-இன்ச் மேக்னிட் ஆக்டிவ் மைக்ரோ எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது டியுவி ரெயின்லேண்ட்டின் (TÜV Rheinland) கலர் கன்சிஸ்டன்சி வைட் வியூவிங் (Color Consistency Wide Viewing) சான்றிதழையும் பெற்றுள்ளது. இது பரந்த கோணங்களில் நிலையான வண்ண செயல்திறனை உறுதிப்படுத்துகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி எப்சிசி (FCC) மற்றும் பிரிட்டிஷ் தரநிலை நிறுவன விதிமுறைகளின் கீழ் குடியிருப்பு பாதுகாப்பு மற்றும் மின்காந்த இணக்கத்தன்மை தரநிலைகளையும் பூர்த்தி செய்கிறது.

எல்ஜி நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது தென் கொரியாவில் வாங்க கிடைக்கிறது, மேலும் வட அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய உலகளாவிய சந்தைகளுக்கும் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG 136 inch Smart TV Magnit Active Micro LED TV With 100W sound system Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X