Home
Gadgets

115 இன்ச் டிவியை அறிமுகம் செய்த LG.. எச்டிஆர்.. AI சூப்பர் அப்ஸ்கேலிங்.. AI சவுண்ட் ப்ரோ.. எந்த மாடல்?

எல்ஜி (LG) நிறுவனம் அவ்வப்போது தரமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களை விடத் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனம் டிவிகளை அறிமுகம் செய்வதால் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் எல்ஜி நிறுவனம் புதிய 115 இன்ச் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது எல்ஜி நிறுவனம் இப்போது எல்ஜி 115 இன்ச் க்யூஎன்இடி இவோ மினி எல்இடி டிவி (LG 115-Inch QNED Evo Mini LED TV) மாடலை தான் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

115 இன்ச் டிவியை அறிமுகம் செய்த LG.. எச்டிஆர்.. எந்த மாடல்?

எல்ஜி 115 இன்ச் QNED Evo மினி எல்இடி டிவி அம்சங்கள் (LG 115 Inch QNED Evo Mini LED TV Specifications): எல்ஜி நிறுவனத்தின் α8 AI பிராசஸர் ஜென் 3 (α8 AI Processor Gen 3) உடன் இந்த 115 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இதில் உள்ள ஏஐ அம்சம் sharpness, பிரைட்னஸ் அம்சங்களை மேம்படுத்துகிறது.

குறிப்பாக இந்த 115 இன்ச் டிவியில் டைனமிக் QNED கலர் ப்ரோ, எச்டிஆர்(HDR), கான்ட்ராஸ்ட்டை மேம்படுத்த டிம்மிங் அல்ட்ரா (Dimming Ultra) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. ஆகவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும். AI சூப்பர் அப்ஸ்கேலிங், AI பிக்சர் ப்ரோ போன்ற பல சிறப்பான டிஸ்பிளே அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

அதேசமயம் இந்த எல்ஜி டிவியில் உள்ள டைனமிக் டோன் மேப்பிங் ப்ரோ அம்சம் ஆனது ஒவ்வொரு ஃபிரேமிலும் பிரைட்னஸ் மற்றும் கான்ட்ராஸ்ட்டையும் சரிசெய்கிறது. குறிப்பாக இந்த டிவியின் டிஸ்பிளே அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.

webOS 26 மூலம் எல்ஜி 115 இன்ச் QNED Evo மினி எல்இடி டிவி இயங்குகிறது. இந்த ஓஎஸ் ஆனது டிவியில் மேம்பட்ட பல புதிய அம்சங்களை வழங்குகிறது. அதுவும் இது விளையாட்டுகளுக்கு அதிக கவனம் செலுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள Sports Portal நேரடி போட்டிகள், மதிப்பெண்கள் மற்றும் அட்டவணைகளை ஒரே இடத்தில் தொகுத்து காட்டுகிறது.

ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (VRR), ஏஎம்டி ப்ரீசிங்க் ப்ரீமியம் (AMD FreeSync Premium), Motion பூஸ்டர் உள்ளிட்ட பல கேமிங் அம்சங்களுடன் இந்த எல்ஜி 115 இன்ச் டிவி மாடல் வெளிவந்துள்ளது. மற்ற டிவிகளை விட தனித்துவமான கேமிங் அம்சங்களை வழங்குகிறது இந்த எல்ஜி டிவி.

இந்த 115 இன்ச் எல்ஜி டிவியில் கூகுள் ஜெமினி (Google Gemini) மற்றும் மைக்ரோசாஃப்ட் கோபைலட் (Microsoft Copilot) போன்ற அம்சங்கள் உள்ளன. இது பயனர்கள் டிவியில் நேரடியாகத் தேட அல்லது கேள்விகளைக் கேட்க அனுமதிக்கிறது. அதேபோல் எல்ஜி ஷீல்ட் (LG Shield) பாதுகாப்பு வசதியும் இந்த டிவியில் உள்ளது.

115 இன்ச் டிவியை அறிமுகம் செய்த LG.. எச்டிஆர்.. எந்த மாடல்?

AI சவுண்ட் ப்ரோ அம்சம் கொண்ட பில்ட் இன் ஸ்பீக்கர்கள் எல்ஜி 115 இன்ச் QNED Evo மினி எல்இடி டிவி மாடலில் உள்ளன. இது virtual 11.1.2 சேனல் அவுட்புட் கொடுக்கும். அதாவது இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

இந்த எல்ஜி டிவி முதலில் கொரியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மற்ற நாடுகளிலும் இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்படும். தற்போது இந்த 115 இன்ச் டிவியின் விலையை வெளியிடவில்லை எல்ஜி நிறுவனம். விரைவில் இந்த டிவியின் விலை வெளியாகும். அப்போது அப்டேட் செய்கிறோம்.

photos credits: LG

More from GizBot

Best Mobiles in India

English summary
LG 115 Inch QNED Evo Mini LED TV With AI Sound Pro Launched: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X