LG அறிமுகம் செய்த 115-இன்ச் 4கே டிவி.. டால்பி ஆடியோ.. டால்பி விஷன்.. HDR 10.. எந்த மாடல்? என்ன விலை?
எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி 115-இன்ச் கியூஎன்இடி ஈவோ ஏஐ மினி எல்இடி டிவி (LG 115-inch 4K QNED evo AI Mini LED TV) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேம்பட்ட ஏஐ அம்சங்கள், தரமான ஆடியோ, டால்பி விஷன் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி வெளியாகி உள்ளது. இப்போது இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
எல்ஜி 115-இன்ச் கியூஎன்இடி ஈவோ டிவி அம்சங்கள் (LG 115 inch QNED evo AI Mini LED TV Specifications): 115-இன்ச் 4கே QNED Mini LED டிஸ்பிளே உடன் இந்த எல்ஜி டிவி வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 3,840 × 2,160 பிக்சல்ஸ், டால்பி விஷன், எச்ஆர் 10, எச்எல்ஜி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

பிரசிஷன் டிம்மிங் அல்ட்ரா, AI சூப்பர் அப்ஸ்கேலிங் 4K, AI பிக்சர் ப்ரோ, AI HDR ரீமாஸ்டரிங், டைனமிக் டோன் மேப்பிங் ப்ரோ, ஆட்டோ பிரைட்னஸ் கண்ட்ரோல், ஆட்டோ கேலிப்ரேஷன், ஃபிலிம்மேக்கர் மோட் போன்ற பிக்சர் அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
ஆல்பா 8 ஏஐ பிராசஸர் 4கே ஜென்3 (Alpha 8 AI Processor 4K Gen3) உடன் இந்த 115-இன்ச் எல்ஜி டிவி வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் webOS 26 மூலம் இந்த எல்ஜி டிவி இயங்குகிறது. எனவே இதில் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
AI சாட்பாட், AI மேஜிக் ரிமோட், AI பிக்சர்/சவுண்ட் விஸார்ட், வாய்ஸ் ஐடி, ஆல்வேஸ் ரெடி, வெப் பிரவுசர், LG சேனல்கள், மல்டி வியூ, மை பேஜ், யூசேஜ் கேர், USB கேமரா போன்ற ஸ்மார்ட் அம்சங்கள் இந்த 115-இன்ச் டிவியில் உள்ளன. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
கூகுள் காஸ்ட், கூகுள் ஹோம், எல்ஜி தின்க்யூ, ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம், எல்ஜி தின்க்யூ செயலி, எல்ஜி ஷீல்ட் போன்ற அனைத்து ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (VRR) மட்டுமல்லாமல், ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் ஏஎம்டி ப்ரீசிங்க் ப்ரீமியம் ப்ரோ (AMD FreeSync Premium Pro) கேம் ஆப்டிமைசர் உள்ளிட்ட பல கேமிங் அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
40W ஸ்பீக்கர்கள் எல்ஜி 115-இன்ச் டிவியில் உள்ளன. டால்பி அட்மாஸ், ஆல்ஃபா 8 AI சவுண்ட் ப்ரோ, AI ஆப்ஜெக்ட் ரீமாஸ்டரிங் ப்ரோ, கிளியர் வாய்ஸ் ப்ரோ, அடாப்டிவ் அகௌஸ்டிக் ட்யூனிங், கிளியர் வாய்ஸ் ப்ரோ, LG சவுண்ட் சிங்க், சைமல்டேனியஸ் ஆடியோ அவுட்புட், சவுண்ட் மோட் ஷேர், WOW ஆர்கெஸ்ட்ரா போன்ற தரமான ஆடியோ அம்சங்களுடன் இந்த டிவி வெளியாகி உள்ளது.

வைஃபை 5, புளூடூத் 5.3, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஆப்டிகல் டிஜிட்டல் ஆடியோ, ஆர்எஃப் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த 115-இன்ச எல்ஜி ஸ்மார்ட் டிவி வெளியாகி உள்ளது. ஏஐ மேஜிக் ரிமோட் ஆதரவும் கிடைப்பதால் இந்த டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
எல்ஜி 115-இன்ச் கியூஎன்இடி ஈவோ டிவி விலை
எல்ஜி 115-இன்ச் கியூஎன்இடி ஈவோ ஏஐ மினி எல்இடி டிவி மாடலின் விலை ரூ.14,99,990-ஆக உள்ளது. தற்போது எல்ஜி நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த புதிய டிவி வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
