இது சாதாரண பென்டிரைவ் அல்ல.. அதுக்கும் மேல.. மாஸ் காட்டிய பிரபல நிறுவனம்.. அப்படி என்ன இருக்கு?
தற்போது டிஜிட்டல் உலகம் விரிவடைந்துள்ளது. அதாவது ஏராளமான எலக்ட்ரானிக் சாதனங்கள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன், லேப்டாப் போன் போன்றவை அதிகளவு பயன்படுத்தப்பட்டு வரும் முதன்மையான சாதனங்களாகும். அதேபோல் பென்டிரைவ்களும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று ஆகும்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் முக்கியமான ஆவணங்கள் மற்றும் கோப்புகளைப் பதிவு செய்து வைக்க இந்த பென்டிரைவ்கள் பெரிதும் பயன்படுகிறது. அதேபோல் பென்டிரைவ்கள் தற்போது புதிய புதிய வடிவமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரத் தொடங்கி உள்ளன.

அதாவது லெக்ஸர் (Lexar) எனும் நிறுவனம் தற்போது இந்தியச் சந்தையில் புதிய பென்டிரைவ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய பென்டிரைவ் ஆனது கூடுதல் பாதுகாப்பிற்காக பில்ட்-இன் பிங்கர் பிரிண்ட் ரீடர் (கைரேகை ரீடர்) உடன் வருகிறது. அதாவது லெக்ஸர் நிறுவனம் தற்போது ஜம்ப் டிரைவ் எஃப்35 (JumpDrive f35)எனும் பென்டிரைவ் மாடலை தான் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஜம்ப் டிரைவ் எஃப்35 மாடல் தான் பில்ட்-இன் பிங்கர் பிரிண்ட் ரீடர் கொண்டுள்ளது. அதேபோல் இது 300MB/s வேகம் கொண்ட யுஸ்பி 3.0 டிரைவ் ஆகும். மேலும் இந்த பென்டிரைவ் நம்முடைய முக்கிய ஆவணங்களைச் சேமித்து வைக்கவே பிரத்யேகமான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜம்ப் டிரைவ் எஃப்35 எனும் பென்டிரைவில் 10 கைரேகைகள் வரை சேமிக்க முடியும். எனவே உங்கள் குடும்பம் உறுப்பினர்கள் அல்லது நண்பர்களும் இந்த பென்டிரைவ்-ஐ பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும். மேலும் இந்த புதிய வகை பென்டிரைவ்-இல் கைரேகை சென்சார் உள்ளதால் கடவுச்சொற்கள் அல்லது பின்களை அமைப்பதற்கான தேவை இருக்கவே இருக்காது.
மேலும் இந்த ஜம்ப் டிரைவ் எஃப்35 எனும் பென்டிரைவ் மாடலில் உள்ள அல்ட்ரா ஃபாஸ்ட் ரெகக்னிஷன்(Ultra fast recognition) அம்சம் 1 வினாடிக்கும் குறைவான நேரத்தில் உங்கள் டிரைவை அணுக உதவுகிறது. எனவே உடனே இந்த பென்ரைடிவ்-ஐ ஓபன் செய்து கோப்புகளை எளிமையாகப் பார்க்க முடியும். பின்பு 256 AES எனும் பாதுகாப்பு சான்றிதழ் உடன் இந்த புதிய வகை பென்டிரைவ் வெளிவந்துள்ளது.
லெக்ஸர் நிறுவனத்தின் ஜம்ப் டிரைவ் எஃப்35 ஆனது 32ஜிபி/64ஜிபி ஆகிய வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த அட்டகாசமான பென்டிரைவ்-ஐ வாங்க முடியும். மேலும் இவற்றின் விலை ரூ.4500, ரூ.6000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக லெக்ஸர் நிறுவனத்தின் இந்த புதிய வகை பென்டிரைவ்-ஐ வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த பென்டிரைவ்கள் நம்முடைய முக்கிய ஆவணங்களைச் சேமித்து வைக்கவே உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறந்த பாதுகாப்பு வசதி கொண்ட பென்டிரைவ் மாடல்களை இனி பல முன்னணி நிறுவனங்கள் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக லெக்ஸர் நிறுவனம் கொண்டு வந்த ஜம்ப் டிரைவ் எஃப்35 மாடல் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவந்தாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன.
மேலும் ஜம்ப் டிரைவ் எஃப்35 மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் லெக்ஸர் நிறுவனம் விரைவில் பல அசத்தலான பென்டிரைவ் மாடல்களை கம்மி விலையில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








