குறைந்த விலையில் கிடைக்கும் பயனுள்ள கேட்ஜெட்டுக்கள்

By Siva
|

விலை அதிகமாக இருந்தால் ஒரு பொருள் தரமாக இருக்கும் என்றும் அதே பொருள் விலை குறைவாக இருந்தால் மட்டமாக இருக்கும் என்று எண்ணுவது மனிதனின் இயல்பு. இந்த விஷயத்தில் டெக்னாலஜி துறையும் விதிவிலக்கலா. ஆனால் குறைந்த விலையிலும் நல்ல தரமான கேட்ஜெட்டுக்கள் கிடைக்கும் என்பதைத்தான் தற்போது பார்க்க உள்ளோம்.

குறைந்த விலையில் கிடைக்கும் பயனுள்ள கேட்ஜெட்டுக்கள்

Image Source

கேட்ஜெட்ஸ் (Gadgets) என்பது தற்போது மனித வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது. நமது வேலையை எளிதாக்க, சுலபமாக இந்த கேட்ஜெட்டுக்கள் உதவுகின்றது. ஆனால் அதே நேரத்தில் இந்த கேட்ஜெட்டுக்களில் விலை சிலசமயம் நம்மை மலைக்க வைக்கும். ஆனாலும் குறைந்த விலையிலும் நல்ல உபயோகமான கேட்ஜெட்டுக்கள் இருக்கத்தான் செய்கின்றன

2017 CES -இல் அனைவரையும் கவர்ந்த அற்புதமான தயாரிப்புகள். ஒரு பார்வை

தற்போது ரூ.500 அல்லது அதற்கும் குறைவான விலையில் நல்ல தரமான கேட்ஜெட்டுக்கள் குறித்து பார்ப்போம்

MX HDMI:

MX HDMI:

HDMI என்பதன் விரிவாக்கம் High-Definition Multimedia Interface என்பதுதான். இந்த கேட்ஜெட் ஆடியோ, வீடியோ பைல்கள், டேட்டா ஆகியவற்றை டிரான்ஸ்பர் செய்ய உதவுகிறது. இந்த வகை கேட்ஜெட்டுக்கள் மார்க்கெட்டில் அதிக விலையில் இருக்கும் நிலையில் MX HDMI மலிவான விலையில் அதாவது ரூ.450க்கு கிடைக்கின்றது.

இந்த அடாப்டர் 1080p Full HD 2767 HDMI கனெக்டரை கொண்டது. பிளாஸ்டிக் மற்றும் பித்தளையில் செய்யப்பட்ட இந்த அடாப்டர் எடை குறைவானது என்பதால் எளிதில் எடுத்து கொண்டு செல்ல முடியும்

டெக்னோநோட் கம்பாக்ட்7 போர்ட்:

டெக்னோநோட் கம்பாக்ட்7 போர்ட்:

பொதுவாக USB என்பது அடிக்கடி நமது அன்றாட தேவைகளில் மிக முக்கியமான ஒன்று. டெக்னோட் கம்பாக்ட் USB தரமான தரத்தில் ரூ.340க்கு கிடைக்கின்றது. எடைகுறைவு, நல்ல டிசைன், மற்றும் தரம் ஆகியவை காரணமாக இந்த USB க்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை டிரான்ஸ்பர் செய்வதற்கு மிகவும் உபயோகமாக உள்ள இந்த டெக்னோநோட் கம்பாக்ட் 7, நல்ல தரமான பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ளதால் நீடித்த உழைப்பை தரும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

98கேட்ஜெட் VR பாக்ஸ்:

98கேட்ஜெட் VR பாக்ஸ்:

விர்ட்டியுவல் ரியாலிட்டி என்று கூறப்படும் VR பாக்ஸ், பல வகைகளில் பல விலைகளில் கிடைக்கின்றது. இதில் 98கேட்ஜெட் VR பாக்ஸ் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான பொருளாக உள்ளது. 3D கண்ணாடி, தரமான லென்ஸ் ஆகியவை 3D வீடியோவை நல்ல எபெக்ட் உடன் பார்க்க உதவும்.

குறிப்பாக கேம்ஸ் விளையாடும்போது இதன் உபயோகம் நமக்கு தெரியவரும். 95 முதல் 100 டிகிரி வரையிலான கோணத்தில் செயல்படும் இந்த 98கேட்ஜெட் VR பாக்ஸ் சந்தையில் விற்பனையாகும் மற்ற VR பாக்ஸ்களை விட தரம் வாயந்தது.

டெக்விக் V3.0 கார் புளூடூத்:

டெக்விக் V3.0 கார் புளூடூத்:

டெக்விக் V3.0 கார் புளூடூத் ஒரு புளூடூத் சாதனம். மைக்ரோபோன் மற்றும் ஆடியோ ரிகார்டர்களை கன்வர்ட் செய்யும் இந்த புளூடுத் ரூ.374 விலையில் மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றது. இதனுடன் மைக் ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கும். AUX கேபிளில் உருவாகி இருப்பதால் இந்த புளுடூத் சாதனம் தரம் நிறைந்ததாக கருதப்படுகிறது.

USB 3D சவுண்ட் கார்டு:

USB 3D சவுண்ட் கார்டு:

ஒரே நேரத்தில் ஹெட்போன் மற்றும் மைக்ரோபோன்களில் ஆடியோவை கேட்டு ரசிக்க வேண்டுமானால் நீங்கள் பயன்படுத்த வேண்டிய சாதனம் அவுட்டர் எக்ஸ்டர்னல் 3D சவுண்ட் கார்டு ( Outre Airplane External 3D Sound Card) இந்த சாதனத்தில் இரண்டு LED லைட்டுக்கள் இருக்கும். இவை இந்த சாதனம் இயங்குவதை குறிக்கும். ரூ.359க்கு சந்தையில் கிடைக்கும் இந்த சாதனம் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்

போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர்:

போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர்:

சந்தையில் புதியதாக அறிமுகமாகியுள்ள இந்த புளூடூத் ஸ்பீக்கர், வயர்லெஸ் ஆக இருப்பதால் பெரும் வரவேற்பை பெறுகிறது. ரூ.359 விலையில் பல வண்ணங்களில் கிடைக்கும் இந்த புளூடூத் ஸ்பீக்கர் வாட்டர் புரூப் ஆகவும் உள்ளது. 3W அவுட்புட் பவர் உள்ள இந்த ஸ்பீக்கருக்கு இரண்டு பேட்டரிகள் தேவைப்படும்

ஜாய்ரூம் 4 LED செல்பி லைட் பிளாஷ் மற்றும் LED லைட்:

ஜாய்ரூம் 4 LED செல்பி லைட் பிளாஷ் மற்றும் LED லைட்:

பாக்கெட்டில் வைத்து கொள்ளும் அளவிற்கு அளவில் சிறியதாக உள்ள இந்த LED செல்பி லைட் பிளாஷ் மற்றும் LED லைட் குறைவான வெளிச்சம் உள்ள இடத்தில் நல்ல பளிச்சென்ற செல்பி எடுக்க பயன்படும். ரூ.499 விலைஇல் கிடைக்கும் இதில் ஒரு LED லைட் மற்றும் ஒரு சார்ஜர் இருக்கும். தரமான போட்டோகிராபர்களுக்கு இந்த சாதனம் ஒரு வரப்பிரசாதம்

ஜார்ஷா பல்ப் USB:

ஜார்ஷா பல்ப் USB:

ஹை பவர் LED லைட்டுடன் கூடிய இந்த USB கனெக்டர், டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் பைல்கள் டிரான்ஸ்பர் செய்வதற்கு உபயோகமாக இருக்கும்.

ஹாஷ்டேக் கிளாம் 4 கேட்ஜெட் ஷாக் புரூப்:

ஹாஷ்டேக் கிளாம் 4 கேட்ஜெட் ஷாக் புரூப்:

டிரான்ஸென் ஹார்ட் டிரைவுடன் வெளிவந்துள்ள இந்த ஷாக்புரூப் கேட்ஜெட், பிளாஸ்டிக்கில் தயாரானது. HT HDD EMB BK 2268 என்ற மாடல் நம்பரை கொண்ட இந்த சாதனம் ரூ.299 விலையில் கிடைக்கின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Most useful gadgets which completes everyday life and are available under Rs. 500.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X