பியூச்சர்ல லேப்டாப்லாம் இப்படி மாறிடுமா? Lenovo-வின் டூயல் டிஸ்பிளே லேப்டாப்.! 1 இல்ல 3 டைப்ல யூஸ்.!

|

Lenovo YogaBook 9i 13 Dual Display Laptop: தொழில்நுட்ப வரலாற்றில் இதுவரை நீங்கள் பல வினோதமான தயாரிப்புகளைப் பார்த்திருப்பீர்கள் - ஆனால், இப்படி ஒரு புதுமையான மற்றும் பியூச்சர்ஸ்டிக் தொழில்நுட்ப டிசைனை (Futuristic Technology Designs) நீங்கள் இப்போது வரை பார்த்திருக்க முடியாது. டூயல் ஸ்பீக்கர் (dual speaker), டூயல் டிஸ்பிளே ஸ்மார்ட்போன் (dual display smartphone) என்ற டூயல் ட்ரெண்டிங் வரிசையில் இப்போது புதிதாக டூயல் டிஸ்பிளே லேப்டாப் (Dual Display Laptop) சாதனமும் அறிமுகமாகவிருக்கிறது.

ரகம்-ரகமா உருமாறும் லேப்டாப்.! சும்மா மடக்கி மடக்கி யூஸ் பண்ணலாம்.!

ரகம்-ரகமா உருமாறும் லேப்டாப்.! சும்மா மடக்கி மடக்கி யூஸ் பண்ணலாம்.!

ஆம், லேப்டாப்பின் (laptop) இரண்டு பக்கங்களிலும் டிஸ்பிளே வழுக்கப்பட்டுள்ளது.

இதை விட இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த டூயல் டிஸ்பிளே கொண்ட லேப்டாப் சாதனத்தை நீங்கள் இரண்டாக மடக்கிக்கொள்ளலாம் - ஆம், இது ஃபோல்டிங் டைப் டிஸ்பிளேவுடன் (folding type laptop display) வருகிறது. முழுமையாக விரித்து வைத்தால் சாதாரண லேப்டாப் (laptop device)..

பாதியாக மடக்கிப் பயன்படுத்தினால் யோகா லேப்டாப் (yoga laptop)..

இந்த லேப்டாப்பை - டேப்லெட் போலவும் பயன்படுத்தலாமா?

இந்த லேப்டாப்பை - டேப்லெட் போலவும் பயன்படுத்தலாமா?

அதையே முழுமையாக மடித்துப் பயன்படுத்தினால் போல்ட்டிங் டேப்லெட் (folding tablet) போல சுருங்கிவிடுகிறது.

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் லேப்டாப் சாதனத்தை லெனோவா (Lenovo) நிறுவனம் தான் அறிமுகம் செய்யவுள்ளது.

சமீபத்தில் CES 2023 நிகழ்வுக்கு முன்னதாக பல புதிய சாதனங்களை நிறுவனம் டீஸ் செய்து வெளியிட்டது.

ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கி, லாஸ் வேகாஸில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

ஸ்மார்ட்போன் சூட்டை குறைக்கும் உலகின் முதல் கூலிங் கேஸ்.! இது சாத மொபைல் கேஸ் இல்லை.!ஸ்மார்ட்போன் சூட்டை குறைக்கும் உலகின் முதல் கூலிங் கேஸ்.! இது சாத மொபைல் கேஸ் இல்லை.!

கவனத்தை ஈர்த்த லெனோவாவின் டூயல் டிஸ்பிளே லேப்டாப் சாதனம்.!

கவனத்தை ஈர்த்த லெனோவாவின் டூயல் டிஸ்பிளே லேப்டாப் சாதனம்.!

இந்த நிகழ்வில் ஏராளமான புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

வருகிற 2023 ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பின் அறிமுகம் செய்யப்படும் லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள் (smartphone) மற்றும் கேஜெட்டுகள் (gadgets) அனைத்தும் இங்குக் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பல சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருந்தாலும், நம்முடைய கவனம் லெனோவாவின் இந்த டூயல் டிஸ்பிளே லேப்டாப் சாதனம் (Lenovo dual display laptop) மீது பதிந்திருக்கிறது.

திங்க்பேட் X1 போல்ட் லேப்டாப்பை மிஞ்சிய Lenovo YogaBook 9i 13 டிசைன்

திங்க்பேட் X1 போல்ட் லேப்டாப்பை மிஞ்சிய Lenovo YogaBook 9i 13 டிசைன்

காரணம், இது உண்மையாலுமே மிகவும் தனிப்பட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் சந்தானத்திற்கு நிறுவனம் Lenovo YogaBook 9i 13 என பெயரிட்டுள்ளது.

இந்த சாதனத்தின் பிரஸ் ரெண்டர்கள் அறியப்பட்ட டிப்ஸ்டர் இவான் பிளாஸ் (Evan Blass) மூலம் இப்போது லீக் செய்யப்பட்டுள்ளது.

Lenovo Yoga 9i 13 லைட்போப் டிவைஸ், திங்க்பேட் X1 போல்ட் (ThinkPad X1 Fold) போன்ற வடிவமைப்பைக் கொண்ட டூயல் 13' இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது.

யாருயா நீ.! இவ்ளோ தள்ளுபடி தர.! Amazon, Flipkart-லாம் துண்டை போட்டுடும் போலயே.!யாருயா நீ.! இவ்ளோ தள்ளுபடி தர.! Amazon, Flipkart-லாம் துண்டை போட்டுடும் போலயே.!

இந்த லேப்டாப்பின் கீபோர்ட் எங்கே இருக்கு தெரியுமா?

இந்த லேப்டாப்பின் கீபோர்ட் எங்கே இருக்கு தெரியுமா?

லேப்டாப் (laptop) மற்றும் டேப்லெட் (tablet) போல் மடிக்கும்போது இரண்டு டிஸ்பிளேக்களுக்கு இடையே வைக்கக்கூடிய ஃப்ரீ-ஃப்ளோட்டிங் கீபோர்டு டிவைஸ் (free-floating keyboard device) வழங்கப்பட்டுள்ளது.

ஆம், இந்த லேப்டாப் உடன் வரக்கூடிய கீபோர்ட் தனியாக பிளொட்டிங் டைப் கீபோர்ட் சாதனமாக வருகிறது. திங்க்பேடின் சிங்கிள் ஃபோல்ட் மடிக்கக்கூடிய பேனலுக்கு மாறாக லெனோவா யோகா 9i 13 இரண்டு சுயாதீன டிஸ்பிளேக்களைக் (dual display laptop) கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடடா.. லேப்டாப் கூட ஸ்டைலஸ் வேற கிடைக்குதா?

அடடா.. லேப்டாப் கூட ஸ்டைலஸ் வேற கிடைக்குதா?

ரெண்டர்களைப் பார்க்கும்போது, ​​சாதனம் ஒரு பாரம்பரிய லேப்டாப், டூயல் டிஸ்பிளே லேப்டாப் மற்றும் மடிந்த டேப்லெட் போன்ற பல நோக்கு நிலைகளில் பயன்படுத்தப்படலாம் என்பது தெளிவாகிறது.

இந்த லேப்டாப் உடன் பொருத்தமான ஸ்டைலஸ் (laptop stylus) கூட வரும் என்பதை மற்றொரு ரெண்டர் விபரம் தெளிவுபடுத்தியுள்ளது.

இறுதியாக, சாதனத்தின் பேசல்கள் சற்று நீண்டு செல்லும். கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் ஹார்டுவேர் ஆகியவற்றைத் தவிர, லேப்டாப்பின் மற்ற விவரக்குறிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

OnePlus 11 பாக்ஸிற்குள் என்ன-என்ன இருக்கு தெரியுமா? போட்டோ போட்டு காட்டிய டிப்ஸ்டர்.!OnePlus 11 பாக்ஸிற்குள் என்ன-என்ன இருக்கு தெரியுமா? போட்டோ போட்டு காட்டிய டிப்ஸ்டர்.!

Lenovo Yoga 9i 13 லைட்போப் அறிமுகம் எப்போது?

Lenovo Yoga 9i 13 லைட்போப் அறிமுகம் எப்போது?

இருப்பினும், இது USB டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. கடைசியாக, ரெண்டர் லேப்டாப்பை அழகான மற்றும் கண்கவர் டார்க் டர்க்கைஸ் நிறத்தில் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

அதேபோல், சாதனம் மற்ற துடிப்பான வண்ணங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 5ம் தேதி அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் இந்த சாதனம் பற்றிய விரிவான விபரங்களை அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Lenovo YogaBook 9i 13 Dual Display Laptop Could Launch At CES 2023 On January 5th

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X