முரட்டு டேப்லெட்.. 1020mAh பேட்டரி.. 16GB ரேம்.. 512GB ஸ்டோர்ஜ்.. 45W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்தியாவில் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் டேப்லெட்களை விரும்புவோரை தட்டித்தூக்கும்படி 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்டிபிஎஸ் டிஸ்பிளே, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 1020mAh பேட்டரி மட்டுமல்லாமல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் கொடுக்கும் மாடலாக லெனோவா யோகா டேப் பிளஸ் (Lenovo Yoga Tab Plus) டேப்லெட் வெளியாகி இருக்கிறது. லெனோவா ஏஐ நவ் பீச்சர்களை கொண்டு இந்த லெனோவா யோகா டேப் பிளஸ் மாடலின் டேப்லெட்டின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த டேப்லெட் கிட்டத்தட்ட லேப்டாப் மாடல்களுக்கு நிகரான பீச்சர்களை கொடுக்கிறது. ஏனென்றால், 2-இன்-1 கீபோர்ட் கிடைக்கிறது. அதேபோல லெனோவோ டேப் பென் ப்ரோ (Lenovo Tab Pen Pro) மற்றும் அடோப் கிரியேஷன் சூட் (Adobe Creation Suite) கிடைக்கிறது. ஆகவே, ஆஃபீஸ் பயன்பாட்டுக்கு பக்கா மாடலாக இருக்கிறது. இதுபோக ஏஐ நவ் (Lenovo AI Now) பீச்சர்களும் உள்ளன.

லெனோவா யோகா டேப் பிளஸ் (Lenovo Yoga Tab Plus Specifications): இந்த டேப்லெட்டில் 12.7 இன்ச் (2944 x 1840 பிக்சல்கள்) எல்டிபிஎஸ் (LTPS) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 3K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது. இதுவொரு லெனோவோ ப்யூர்சைட் ப்ரோ (Lenovo PureSight Pro) மாடலாகும்.
ஆகவே, கண்களுக்கு இடையூறு ஏற்படாமல், டிஸ்பிளே அவுட்புட் கொடுக்கும். டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் ஆன்டி-ரெஃப்ளெக்சன் (Anti-reflection) கிடைப்பதால் ஓடிடி பிரியர்களுக்கும் பக்கா அவுட்புட் கிடைக்கிறது. ஏனென்றால், டிஸ்பிளே மட்டுமல்லாமல், 2 டவீடெர்கள் மற்றும் 4 எஸ்எல்எஸ் சப்வூப்பர்கள் கொண்ட ஸ்பீக்கர் சிஸ்டம் கிடைக்கிறது.
இதுவொரு ஹர்மன் கார்டன் (Harman Kardon) ஆடியோ சிஸ்டமாகும். அதேபோல டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. ஆகவே, ஆடியோவில் ஸ்டீரியோ மற்றும் கிளாரிட்டி பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. டூயல் மைக்ரோபோன்கள் கிடைக்கின்றன. இந்த டேப்லெட்டில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்கிறது.

ஏஐ பீச்சர்களை பார்க்கையில், லெனோவோ ஏஐ நவ் மட்டுமல்லாமல், லெனோவோ ஏஐ நோட் (Lenovo AI Note), லெனோவோ ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் (Lenovo AI Transcript), கூகுள் ஜெமினி (Google Gemini), லெனோவோ ஸ்மார்ட் கனெக்ட் (Lenovo Smart Connect) அடோப் லைட்ரூம் (Adobe Lightroom) மற்றும் டபுள்யூபிஎஸ் (WPS) ஆகியவை கிடைக்கின்றன. டூயல் பேண்ட் வை-பை 7 (Dual Band WiFi 7) உள்ளது.
ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) சப்போர்ட் உள்ளது. மேலும், யுஎஸ்பி-சி போர்ட் மற்றும் 3 பாய்ன்ட் போகோ பின் வருகிறது. இதன் மூலம் கீ-போர்ட்டை கனெக்ட் செய்து கொள்ளலாம். இந்த யுஎஸ்பி-சி போர்ட் மூலம் ஆடியோ, சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் செய்து கொள்ளலாம். 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 1020mAh பேட்டரி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் கிடைக்கிறது. 256 ஜிபி மாடலின் விலை ரூ.44,998ஆகவும், 512 ஜிபி மாடலின் விலை ரூ.47,999ஆகவும் இருக்கிறது. லெனோவா தளத்தில் விற்பனைக்கு வருகிறது. டிடல் டீல் (Tidal Teal) கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட், அமேசான் தளத்தில் விரைவில் எதிர்பாக்கலாம்.


Click it and Unblock the Notifications








