Laptop-களுக்கு டாட்டா.. இனி Mini PC காலம்.. 100W அடாப்டர், 32GB மெமரி, 5 போர்ட், AI உடன் Yoga Mini i அறிமுகம்!
சிஇஎஸ் 2026 (CES 2026) என்று சுருக்கமாக அழைக்கப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில் (Consumer Electronics Show) ரொம்பவே சுவாரசியமாக உள்ளது. இந்நிகழ்வுல், ஒருபக்கம் சாம்சங் 130-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ய, மறுபக்கம் லெனோவோ நிறுவனமானது மினி பிசி பில்ட்-க்கான ஒரு சிறிய டிவைஸை அறிமுகம் செய்துள்ளது.
வளர்ந்து வரும் மினி பிசி பிரிவிற்காக லெனோவா நிறுவனமானது - வீட்டில் அல்லது மேசையில் உள்ள இடத்தை மிச்சப்படுத்த விரும்பும் பயனர்களுக்கு ஒரு புதிய ஆப்ஷனை வழங்குகிறது. லெனோவா நிறுவனத்தின் இந்த டிவைஸ் யோகா மினிஎ ஐ (Yoga Mini i) என்று அழைக்கப்படுகிறது.

இது நவீனகால மேசைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய விண்டோஸ் 11 சிஸ்டம் ஆகும். இந்த டிவைஸ் ஒரு உருளை வடிவ அலுமினிய சேஸை பயன்படுத்துகிறது. இது மிகவும் சிறியது, வெறும் 0.65 லிட்டர் அளவு மற்றும் தோராயமாக 600 கிராம் எடை கொண்டது. இதை ஒரு மானிட்டரின் பின்னால் வைக்கலாம் அல்லது தேவைப்பட்டால் பணியிடங்களுக்கு இடையில் எளிதிக நகர்த்தவும் செய்யலாம்.
அளவில் சிறியதாக இருக்கும் போதிலும் கூட, லெனோவா நிறுவனம் யோகா மினி ஐ டிவைஸை இன்டெல்லின் சமீபத்திய கோர் அல்ட்ரா X7 358H சிப், 32ஜிபி வரை LPDDR5X ஸ்டோரேஜ் மற்றும் 2TB PCIe ஜென் 4 ஸ்டோரேஜ் கொண்டு உடன் கான்பிகரேஷன் (configuration) செய்ய முடியும். கிராபிக்ஸ் ஆனது - ஒருங்கிணைந்த இன்டெல் ஆர்க்கை நம்பியுள்ளது.
இது சிஸ்டமை ஒரு கோபிலட் பிளஸ் பிசியாக தகுதி பெற செய்கிறது, இது நேரடி டிரான்ஸ்கிரிப்ஷன், சம்மரீஸ் மற்றும் பிற வேலைகளை செய்ய டிவைஸில் உள்ள ஏஐ அம்சங்களுக்கான ஆதரவை கொண்டுவருகிறது, இவை அனைத்தும் கிளவுட்டில் இல்லாமல் லோக்கல் ஆக கையாளப்படுகின்றன.
மீண்டும் ஒருமுறை "அளவில் சிறியதாக இருந்தாலும்" கூட இது நல்ல போர்ட் ஆப்ஷன்களை வழங்குகிறது. இந்த லெனோவா மினி பிசியில் இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், இரண்டு முழு-செயல்பாட்டு யுஎஸ்பி-சி போர்ட்கள், ஒரு யுஎஸ்பி-ஏ போர்ட், எச்டிஎம்ஐ 2.1 மற்றும் 2.5ஜிபி ஈதர்நெட் கனெக்ஷன் ஆகியவைகளை கொண்டுள்ளது. லெனோவா நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த சிஸ்டம்ஒரே நேரத்தில் நான்கு எக்ஸ்டர்னல் டிஸ்பிளேக்களை இயக்க முடியும்.
இந்த டிவைஸில் வயர்லெஸ் கனெக்ஷனும் அப்-டூ-டேட் ஆக உள்ளது. இது வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 6.0 உடன் வருகிறது. இதில் வைஃபை சென்சிங் ஆதரவும் உள்ளது, இது ஒரு பயனர் சிஸ்டமின் அருகில் இருக்கும்போது அது வேக் செய்ய அல்லது அடிப்படை பேஸிக் நோட்டிபிகேஷனை ட்ரிக்கர் செய்யும். கடைசியாக இதன் சார்ஜிங் 100W USB-C அடாப்டர் மூலம் கையாளப்படுகிறது.
விலையை பொறுத்தவரை லெனோவா யோகா மினி ஐ டிவைஸின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.62,900 இருக்கும் என்றும், இது ஜூன் 2026 இல் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. சிறிய டிசைன், நவீன போர்ட்கள் மற்றும் ஏஐ அம்சங்கள் ஆகியவற்றின் கலவையுடன், இது மேக் மினி (Mac mini) போன்ற டிவைஸ்களை கருத்தில் கொண்ட, ஆனால் விண்டோஸ் அமைப்பிற்குள் இருக்க விரும்பும் பயனர்களை நிச்சயம் இலக்காக கொண்டிருக்கும்.
சிஇஎஸ் 2026 (CES 2026) நிகழ்வில், உலகின் முதல் 130-இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவியை அறிமுகம் செய்து, ஒட்டுமொத்த ஸ்மார்ட் டிவி சந்தையையும் பரபரப்பிற்கு உள்ளாக்கிய கையோடு, சாம்சங் (Samsung) நிறுவனம் ஆனது தனது 2026 ஓஎல்இடி சீரீஸ் மாடல்களை (2026 OLED TV Models) சிஇஎஸ் 2026 இல் அறிவித்துள்ளது.
இந்த சீரிஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன: S85H, S90H, S95H, மற்றும் முற்றிலும் புதிய S99H மாடல். இந்த புதிய சீரீஸில் உள்ள அனைத்து மாடல்களுமே அப்டேட் செய்யப்பட்டு உள்ளன. மேலும் கடந்த ஆண்டு அறிமுகமான S95F மாடலன்து மாற்றியமைக்கப்பட்டு இந்தாண்டு S99H ஆக டாப்-எண்ட் ஃபிளாக்ஷிப் மாடல் ஆக சேர்க்கப்பட்டுள்ளது. விலைகள் இன்னும் அரவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








