Just In
- 2 hrs ago
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- 3 hrs ago
சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்த ஆராய்ச்சிக்கு ரூட் போட்ட ISRO.! எல்லாமே ரெடி.!
- 5 hrs ago
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone (2) பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- 7 hrs ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
Don't Miss
- Lifestyle
பாதம் எண்ணெயை உங்க தலை முடியில இப்படி யூஸ் பண்ணா... கிடுகிடுன்னு முடி வளர்ந்து பளபளன்னு மின்னுமாம்!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- News
"கறுப்பு ஆடு".. விபச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பெண் நிர்வாகி.. அதுவும் மகளிரணி தலைவியாம்.. கணவர் வேற
- Movies
இயக்குநர் அட்லீ-பிரியா தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு..என்ன குழந்தை தெரியுமா?
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்தியாவில் அறிமுகமான லெனோவோ 2-இன்-1 லேப்டாப்: விலையை சொன்னா நம்புவீங்களா?
இந்தியாவில் லெனோவா நிறுவனம் யோகா 9i 2-இன்-1 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லேப்டாப் மாடல் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய யோகா 9i 2-இன்-1 லேப்டாப் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

i7 1360P பிராசஸர்
அதாவது யோகா 9i 2-இன்-1 லேப்டாப் ஆனது 13th Gen இண்டெல் கோர் i7 1360P பிராசஸர் மற்றும் இண்டெல் இவோ சான்று பெற்று வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

14-இன்ச் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
அதேபோல் யோகா 9i 2-இன்-1 லேப்டாப் மாடலை லேப்டாப், ஸ்டாண்ட், டெண்ட் அல்லது டேப்லெட் என நான்கு விதங்களில் பயன்படுத்த முடியும். மேலும் 14-இன்ச் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப். பின்பு 4K 3840x2400 பிக்சல்ஸ் / 2.8K 2880x1080 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப். குறிப்பாக டால்பி விஷன், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப்.

ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ்
இந்த புதிய லெனோவோ யோகா மாடலில் இண்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ் ஆதரவு உள்ளது. பின்பு 16 ஜிபி LPDDR5 ரேம், 1 டிபி ஆ.2 எஸ்எஸ்டி ஆதரைவக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த யோகா 9i 2-இன்-1 லேப்டாப் மாடல். குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லெனோவோ நிறுவனம்.

இன்ஃப்ராரெட் கேமரா
யோகா 9i 2-இன்-1 லேப்டாப் மாடல் 2எம்பி ஹைப்ரிட் ஃபுல் எச்டி இன்ஃப்ராரெட் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதில் ஸ்மார்ட் ஃபேஷியல் recognition தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்து மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப்
புதிய யோகா 9i 2-இன்-1 லேப்டாப் மாடலில் 75Wh பேட்டரி உள்ளது. இதை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கனகென்டிவிட்டி
யுஎஸ்பி சி தண்டர்போல்ட் 4, யுஎஸ்பி ஏ ஜென் 3.2, யுஎஸ்பி சி ஜென் 2, ஹெட்போன் ஜாக், வைபை 6E, ப்ளூடூத் 5.2 போன்ற பல கனகென்டிவிட்டி ஆதரவுகளைகொண்டு இந்த யோகா 9i 2-இன்-1 லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் டால்பி அட்மோஸ் வசதி, 4x போவர்ஸ் & வில்கின்ஸ் ஸ்பீக்கர், கிளாஸ் டச்பேட் உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லெனோவா லேப்டாப்.

யோகா 9i 2-இன்-1 லேப்டாப் விலை
யோகா 9i 2-இன்-1 லேப்டாப் மாடல் ஸ்டாம் கிரே மற்றும் ஓட்மீல் என இரு விதமான நிறங்களில் கிடைக்கிறது. பின்பு இந்த லேப்டாப் மாடலின் விலை ரூ.1,74,900-ஆக உள்ளது. லெனோவோ, க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் ஸ்டோர்களில் இந்த லேப்டாப் மாடலை வாங்க முடியும். அதேபோல் ஜனவரி 29-ம் தேதி அமேசான் தளத்தில் இந்த லேப்டாப் விற்பனைக்கு வரும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470