சத்தமின்றி லெனோவோ தின்க்ஸ்மார்ட் வியூ ஸ்மார்ட் டிஸ்பிளே அறிமுகம்: என்னென்ன அம்சங்கள்.!
லெனோவோ நிறுவனம் நீண்டநாட்களுக்கு பிறகு தின்க்ஸ்மார்ட் வியூ என்ற பெயரில் புத்தம் புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, இதை கொண்டு மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் சார்ந்த ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்
குறிப்பாக கூகுளின் ஹோம் ஏ.ஐ தொழில்நுட்பத்திற்கு மாற்றாக இந்த சாதனம் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் சேவையை கொண்டு இயங்குகிறது. மேலும் இந்த சாதனத்தின் விற்பனை விரைவில் துவங்கும் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தின்க்பேட் எக்ஸ்1 ஏ.என்.சி. ப்ளூடூத் ஹெட்செட் ஒன்றும் வழங்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

8-இன்ச் தொடுதிரை வசதி
லெனோவோ நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட் டிஸ்பிளேவில் 8-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்பிளே மற்றும் இன்டகிரேட்டெட் கேமரா மைக்ரோபோன் மற்றும் ஸ்பிக்கர்கள் வழங்கப்படுகிறது.

5எம்பி வைடு ஆங்கிள் கேமரா
மேலும் இந்த ஸ்மார்ட் டிஸ்பிளேவில் 5எம்பி வைடு ஆங்கிள் கேமரா, பிரைவசி ஷட்டர், டூயல் மைக்ரோபோன் அரே,1.75-இன்ச் வாட் ஃபுல்-ரேன்ஜ் ஸ்பீக்கர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

குவால்காம் ஏ.பி.கியூ.8053 சிஸ்டம்
லெனோவோ அறிமுகம் செய்த இந்த தின்க் ஸ்மார்ட் வியூ டிஸ்ப்ளேவில் குவால்காம் ஏ.பி.கியூ.8053 சிஸ்டம் ஆன சிப்
வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ப்ளூடூத் ஹெட்செட்களுடன் பயன்படுத்த ப்ளூடூத் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சாதனத்தில் 4ஜிபி ரேம் வசதியும் 8ஜிபி மெமரி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த
சாதனத்தின் எடை ஒரு கிலோவுக்கு குறைவாகவே இருக்கிறது.

தின்க்சென்ட்டர் எம்90 ஏ.ஐ.ஒ
இந்த தின்க்ஸ்மார்ட் வியூ டிஸ்ப்ளே சாதனத்துடன் லெனோவா நிறுவனம் தின்க்சென்ட்டர் எம்90 ஏ.ஐ.ஒ என்றபெயரில் மற்றொரு சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 10-வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள்23.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே, ஆப்ஷனல் பிரைவசி கார்டு, ஐ. கேமரா மற்றும் வெப் கேமராவுக்கு தின்க்ஷட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








