Home
Gadgets

பின்றானே இவன்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. OLED டிஸ்பிளே.. 12.9 எம்எம் தடிமன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் வெளியாகும் லேப்டாப்களில் லெனோவோ மாடல்களுக்கு தனியிடம் இருக்கிறது. இதில் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மட்டுமல்லாமல், இன்டல் கோர் அல்ட்ரா 7 ப்ராசஸர் கொண்ட மாடலாக லெனோவோ திங்க்‌புக் 14எக்ஸ் (Lenovo ThinkBook 14x) வெளியாகி இருக்கிறது. இந்த திங்க்‌புக் மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அலுமினியம் சேசஸ் கொண்ட லைட் வெயிட் மாடலாக வெளியாகி இருக்கிறது. 12.9 எம்எம் தடிமன் மற்றும் பேட்டரியுடன் சேர்த்து 990 கிராம் எடை மட்டுமே வருகிறது. பேக்லிட் கீபோர்ட் (Backlit Keyboard), வைடுநெட் கிளாஸ் டச்பேட் (Widened Glass Touchpad) மற்றும் லெனோவோ ஸ்மார்ட் கனெக்ட் (Lenovo Smart Connect) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பின்றானே இவன்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. OLED டிஸ்பிளே.. 12.9 எம்எம்!

லேட்டஸ்ட் கோபைலட்+ பிசி (Copilot+ PC) கொண்ட மாடலாக லெனோவோ திங்க்‌புக் 14எக்ஸ் லேப்டாப் வெளியாகி இருக்கிறது. ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் நாள் முழுக்க பேக்கப் கொடுக்கும்படியான பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. பேட்டரி குறையும்போது, ஆட்டமோட்டிக் கீபோர்ட் லைட் டிம்மிங் உள்ளிட்ட பவர் சேவர் மோட்களை கொடுத்துள்ளது.

லெனோவோ திங்க்‌புக் 14எக்ஸ் அம்சங்கள் (Lenovo ThinkBook 14x Specifications): 14 இன்ச் எல்இடி டிஸ்பிளே மற்றும் எல்இடி டச் கிடைக்கிறது. 2.8K ஓஎல்இடி ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 100 சதவீத டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது.

16 ஜிபி ரேம் கொடுத்துள்ளது. 512 ஜிபி மற்றும் 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்களை கொடுத்து இருக்கிறது. இதுபோக டூயல் எஸ்எஸ்டி சிலாட் (Dual SSD Slots) கிடைக்கின்றன. 54.7Wh மற்றும் 65Wh சப்போர்ட் கொண்ட பேட்டரி செட்டப்கள் கிடைக்கின்றன. அதேபோல இன்டல் கோர் அல்ட்ரா 5 226வி (Intel Core Ultra 5 226V) பிராசஸர் கிடைக்கிறது.

மேலும், இன்டல் கோர் அல்ட்ரா 8 256வி (Intel Core Ultra 7 256V) பிராசஸரும் கொடுத்துள்ளது. இந்த லெனோவோ திங்க்‌புக் 14எக்ஸ் மாடலுக்கு வை-பை 6 இ (Wi-Fi 6E), வை-பை 7 (Wi-Fi 7) கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. 2 யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் கிடைக்கின்றன. மேலும், யூஎஸ்பி-ஏ போர்ட்கள் கிடைக்கின்றன. 1 புல் சைஸ் எச்டிஎம்ஐ உள்ளது.

பேக்லிட் கீபோர்ட் (Backlit keyboard) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், வைடுநெட் கிளாஸ் டச்பேட் (Widened Glass Touchpad) கொண்ட மாடலாக இந்த லெனோவோ திங்க்‌புக் 14எக்ஸ் லேப்டாப் கிடைக்கிறது. எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை இந்த லெனோவோ திங்க்‌புக் 14எக்ஸ் கொடுக்கிறது.

விண்டோஸ் 11 ப்ரோ (Windows 11 Pro) ஓஎஸ் கொண்ட மாடலாக கிடைக்க இருக்கிறது. மற்ற பீச்சர்களை பார்க்கையில், ஐசேப் சர்டிபைடு 2.0 (Eyesafe Certified 2.0) உள்ளது. சென்சார் பேஸ்டு கீபோர்டு லைட்னிங் அட்ஜட்ஸ்மெண்ட் (Sensor-based Keyboard Light Adjustment) மற்றும் ஸ்கிரீன் பிளர்ரிங் (Screen Blurring) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய மார்கெட்டில் லெனோவோ திங்க்‌புக் 14எக்ஸ் மாடலின் விலை ரூ.1,08,990 ஆக இருக்கிறது. கஸ்டம்-டு-ஆர்டர் மாடலாக கிடைக்கிறது. ஆகவே, பிராசஸர், ரேம், மெமரிக்கு ஏற்ப விலையில் மாறுபாடுகள் இருக்கும். இப்போது லெனோவோ தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. லெனோவோ ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Lenovo ThinkBook 14x With Intel Core Ultra 7 Processor Launched in India Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X