ஆப்பிளை ஓரங்கட்டிய புது Lenovo Tab P11 Pro 2nd Gen: இன்று விற்பனை.! நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

|

Lenovo நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு, Lenovo Tab P11 Pro 2nd Gen என்ற புதிய அட்டகாசமான டேப்லெட் சாதனத்தை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய லேட்டஸ்ட் Lenovo Tablet இன்று முதல் நாட்டில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.!

இந்த புதிய டேப்லெட்டை நீங்கள் நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்பதையும், இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை போன்ற விபரங்களையும் தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். வாங்க.!

லெனோவா டேப் P11 ப்ரோ (2வது ஜென்) டேப்லெட்டில் என்ன ஸ்பெஷல்?

லெனோவா டேப் P11 ப்ரோ (2வது ஜென்) டேப்லெட்டில் என்ன ஸ்பெஷல்?

சமீபத்திய லெனோவா டேப் P11 ப்ரோ (2வது ஜென்) மாடலின் ஷார்ட்டான முக்கிய அம்சங்களை முதலில் பார்த்துவிடலாம். இந்த புதிய டேப்லெட் டிவைஸ் பார்ப்பதற்கு ஆப்பிள் iPad Air போலக் காட்சியளிக்கிறது.

ஆப்பிள் தயாரிப்புகளை பார்த்ததும் கிடைக்கும் ஒரு பிரமாண்டமான ஈர்ப்பு, இந்த டிவைஸை பார்த்ததும் கிடைக்கிறது. காரணம், இதன் டிஸ்பிளே 2.5K தெளிவுத் திறனுடன் 11.2' இன்ச் OLED அம்சத்துடன் வருகிறது.

Lenovo Tab P11 Pro (2nd Gen) டேப்லெட்டில் இப்படி ஒரு சிப்செட்-ஆ.!

Lenovo Tab P11 Pro (2nd Gen) டேப்லெட்டில் இப்படி ஒரு சிப்செட்-ஆ.!

இது குவாட்-ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அட்டகாசமான புதிய Lenovo Tab P11 Pro (2nd Gen) டிவைஸ் MediaTek Kompanio 1300T சிப்செட் உடன் இயங்குகிறது.உண்மையிலேயே இது சூப்பரான சிப்செட் தான்.

இந்த புதிய Lenovo Tab P11 Pro (2nd Gen) டேப்லெட் 8200mAh பேட்டரியை பேக் செய்கிறது. சரி, இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய புது விதி.! LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய புது விதி.! "இது" தெரியலான சிக்கல் வரலாம் மக்களே.!

Lenovo Tab P11 Pro (2nd Gen) விலை மற்றும் விற்பனை விபரம்

Lenovo Tab P11 Pro (2nd Gen) விலை மற்றும் விற்பனை விபரம்

Lenovo Tab P11 Pro (2nd Gen) சாதனம் 8GB + 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வாங்கக் கிடைக்கிறது. இந்திய சந்தையில் இப்போது இதன் விலை ரூ.39,999 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பட்ஜெட் விலையில் கிடைக்கும் பெஸ்டான மாடலாகும். காரணம், இதில் உள்ள அம்சங்கள் நாம் மெச்சும் விதத்தில் அமைந்துள்ளது.

அக்டோபர் 17, மதியம் 12:00 மணி முதல் Amazon வழியாகப் பிரத்தியேகமாக வாங்குவதற்குக் கிடைக்கும்.

Lenovo Tab P11 Pro (2nd Gen) சிறப்பம்சம்

Lenovo Tab P11 Pro (2nd Gen) சிறப்பம்சம்

புதிய இரண்டாம் தலைமுறை Lenovo Tab P11 Pro மாடல் அதன் முன்னோடிகளை விடப் பல மேம்படுத்தல்களுடன் வருகிறது.

இந்த புதிய டேப்லெட் டிவைஸ் 11.2' இன்ச் கொண்ட OLED டிஸ்பிளே உடன் வருகிறது. இது 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதம், 600 nits பீக் பிரைட்னஸ் Dolby Vision HDR மற்றும் HDR10+ ஆதரவு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

இதன் டிஸ்பிளே குவாலிட்டி செமையாக அமைந்துள்ளது. இது 13MP பின்புற கேமரா மற்றும் 8MP முன் கேமராவை கொண்டுள்ளது.

5G ஸ்பீட் டெஸ்ட் மட்டும் செஞ்சுடாதீங்க.! விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.! அலெர்ட் மக்களே.!5G ஸ்பீட் டெஸ்ட் மட்டும் செஞ்சுடாதீங்க.! விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.! அலெர்ட் மக்களே.!

அட்டகாசமான ஸ்டைலஸ் அனுபவம் வேண்டுமா?

அட்டகாசமான ஸ்டைலஸ் அனுபவம் வேண்டுமா?

இந்த டேப்லெட் Lenovo Precision Pen 3 ஸ்டைலஸ் ஆதரவுடன் இது வருகிறது. இது ஒரு புதிய MediaTek Kompanio 1300T சிப்செட் இன் கீழ் இயங்குகிறது.

இந்த டேப்லெட் 8,200mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் குவாட்-ஸ்பீக்கர் அமைப்பையும் வழங்குகிறது.

இது 263.66 x 166.67 x 6.8 மிமீ மற்றும் 480 கிராம் தடிமன் கொண்டது. இறுதியாக Lenovo Tab P11 Pro (2nd Gen) ஆனது ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது.

இந்த டேப்லெட்டை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

இந்த டேப்லெட்டை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

முதல் தலைமுறை மாடல் இப்போது இந்தியாவில் ரூ. 36,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய Lenovo Tab P11 Pro டேப்லெட் சாதனம் 8400mAh பேட்டரியை பேக் செய்கிறது.

அதை விட புதிய 2வது ஜென் மாடலில் உள்ள பேட்டரி அளவு சற்று சிறியது என்றாலும் நீடித்து நிலைக்கும் அப்டேட்டை கொண்டுள்ளது.

இந்த டேப்லெட் சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என்று லெனோவா கூறியுள்ளது.

iPad வாங்க முடியாதவர்கள், தாராளமாக இந்த Lenovo Tab P11 Pro (2nd Gen) சாதனத்தை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Lenovo Tab P11 Pro 2nd Gen Goes for First Sale Today at 12 Noon Via Amazon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X