1 இல்ல 2-ஆ ஆர்டர் போடுங்க.. ரூ.15,000 விலையில் மிரட்டலான லேட்டஸ்ட் Tablet.. எந்த பிராண்ட்.. என்ன மாடல்?
ஸ்மார்ட்போன் வாங்கும் ரேட்டில் பெரிய டிஸ்பிளேவுடன் ஒரு டேப்லெட் (Tablet) சாதனம் விற்பனைக்கு வந்துள்ளது. உங்கள் கையில் வெறும் ரூ. 15,000 இருந்தால் போதும், சூப்பர் அட்டகாசமான டேப்லெட் சாதனத்தை லெனோவா (Lenovo) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லெனோவா நிறுவனம் இப்போது இந்தியாவில் லெனோவா டேப் கே11 (Lenovo Tab K11) என்ற டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்து, விற்பனை செய்துள்ளது. உண்மையை சொல்ல போனால், பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போனை விட இதன் விலை மிகவும் குறைந்ததாக உள்ளது. சமீபத்தில் வெளியான லேட்டஸ்ட் டேப்லெட் மாடலாக இது இருந்தாலும், இதன் மீது நிறுவனம் இப்போது 41% வரை தள்ளுபடி வழங்கியுள்ளது.

லெனோவா டேப் கே11 டேப்லெட் (Lenovo Tab K11 Tablet):
இந்த புதிய லெனோவா டேப் கே11 (Lenovo Tab K11) டேப்லெட் சாதனம் 11" இன்ச் கொண்ட WUXGA IPS டிஸ்பிளேவை, 1920x1200 பிக்சல், 400 நீட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh Rate) உடன் 72% NTSC போன்ற அம்சங்களுடன் வழங்கியுள்ளது. இது ஒரு தரமான மற்றும் நம்பகமான FHD டிஸ்பிளேவாகும்.
இந்த லெனோவா டேப் கே11 டேப்லெட் சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி88 ஆக்டா கோர் சிப்செட் (Mediatek Helio G88 Octa-Core Processor) மூலம் சூப்பர் சக்தி வாய்ந்த சாதனமாக இயங்குகிறது. இந்த டேப்லெட் சாதனம் 8GB ரேம் (RAM) அம்சத்தை கொண்டுள்ளது. இது 128GB ஸ்டோரேஜ் (Storage) உடன் 1TB வரையிலான மைக்ரோ எஸ்டி (microSD) மெமரியை வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்துடன் இயங்குகிறது.
இந்த லெனோவா டேப் கே11 (Lenovo Tab K11) 7040mAh கொண்ட பேட்டரியை பேக் செய்கிறது. இது 10 மணி நேரத்திற்கு மேம்பட்ட பயன்பாட்டு நேரத்தை வழங்குகிறது. இது குவாட் ஸ்பீக்கர் (Quad Speakers) உடன் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் 13MP சிங்கிள் ரியர் கேமரா உடன் வருகிறது.

Lenovo Tab K11 விலை என்ன? சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி விபரம்:
இந்த ரியர் கேமரா ஆட்டோபோகஸ், 1080 பிக்சல்ஸ் வீடியோ பதிவு போன்றவற்றை ஆதரிக்கிறது. அதேபோல், இதன் செல்பி கேமராவும் 1080 பிக்சல்ஸ் வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கிறது. ஆனாள், முன்பக்கத்தில் இந்த சாதனம் 8MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இறுதியாக இது 465 கிராம் எடையுடன், 7.1mm ஸ்லிம் சைஸில் வெளிவந்துள்ளது.
இதன் விலை பற்றி பேசுகையில், லெனோவா டேப்லெட் கே11 சாதனமானது, ரூ. 31,000 என்று அசல் விலையுடன் வருகிறது. இது அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் லெனோவா பக்கத்தில் 41% சலுகையுடன் காணப்படுகிறது. தற்போது இந்த சாதனத்தை வெறும் ரூ. 17,999 என்ற மிகவும் குறைந்த விலை முதல் வாங்க முடியும். இதற்கும் மேல் கூடுதலாக ரூ.2000 வரையிலான எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது.
இதன் காரணமாக வெறும் ரூ. 15,999 என்ற சிறப்பு விலையில் இந்த புத்தம் புதிய லேட்டஸ்ட் டேப்லெட் சாதனத்தை வாங்க முடியும். இது குறிப்பிட்ட சில வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு சலுகை கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது. புதிதாக டேப்லெட் சாதனம் வாங்க விரும்புவோர் கட்டாயம் இந்த Lenovo Tab K11 சாதனத்தை வாங்கி பயன்பெறலாம்.


Click it and Unblock the Notifications








