அசத்தலான அம்சங்களுடன் லெனோவா ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்.!
லேனோவா நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின ஒவ்வொரு சாதனங்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருகிறது. அதேபோல் இந்நிறுவனத்தின் லேப்டாப் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.

லெனோவா நிறுவனம்
இந்நிலையில் லெனோவா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் கடிகாரம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் கணடிப்பாக அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி இந்த புதிய ஸ்மார்ட் கடிகாரத்தில் கூகுள் அசிஸ்டண்ட் சேவையின் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்பு இதுஇந்தி மொழியில் காமண்ட்களை வழங்கும் லெனோவா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் சாதனம் ஆகும்.

இந்த புதிய லெனோவா ஸ்மார்ட் கிளக் எசென்ஷியல் 4-இன்ச் எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனம் அலாரம் வசதி, பார்-பீல்டு மைக்ரோபோன் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி ரேம் மற்றும் 512 ரோம் வசதி
அதேபோல் இந்த புதிய சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 512 ரோம் வசதி உள்ளது. இத்துடன் பிளேஃ அலாரம் பட்டன் உள்ளிட்டவைவழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சாதனத்தின் மென்பொருள் அமைப்பு பற்றி பேசுகையில், அம்லாஜிக் A113X பிராசஸர் வசதி அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 3 வாட் ஸ்பீக்கர் மற்றும் 2 மைக்ரோபோன் அரே உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.

மேலும் மைக்ரோபோன் மியூட் டாகிள், பிளே பட்டன், அலாரம் படட்டன் போன்றவை இவற்றுள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக 2.4ஜி / 5ஜி டூயல் பேண்ட், IEEE 802.11 ac, ப்ளூடூத் 5 போன்ற ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

லெனோவா நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட் கடிகாரம் சாப்ட் டச் கிரே நிறத்தில் கிடைக்கிறது. பின்பு இந்தியாவில் இந்த சாதனத்தின் விலை ரூ.4,499-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications