Home
Gadgets

அட்ராசக்கை.. தலைவன் இறங்கிட்டான்.. இந்த பவர்புல் Tablet-க்கு தான் வெயிட் செஞ்சோம்.. புது Lenovo Legion விலை?

அட்ராசக்கை என்று வியப்பில் குஷி அடையும் வகையில், ஒரு புதிய டேப்லெட் சாதனம் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனத்தை லெனோவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லெட் சாதனம் லெனோவா லெஜியான் Y700 2024 (Lenovo Legion Y700 2024) என்ற மாடல் பெயருடன் வெளிவந்துள்ளது. மிட்-பட்ஜெட் செக்மென்ட்டில் பெரிய டிஸ்பிளே, சூப்பர் பவர், அட்டகாசமான ஸ்டோரேஜ் உடன் புதிய டேப்லெட் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த புதிய Lenovo Legion Y700 (2024) பற்றிய முழு விபரங்கள் இதோ.

லெனோவா லெஜியான் Y700 2024 கேமிங் டேப்லெட் (Lenovo Legion Y700 2024 Gaming Tablet) சாதனத்தை நிறுவனம் இப்போது சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது 8.8' இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவுடன் 16GB ரேம் மற்றும் 10,004mm² வேப்பர் சேம்பர் கூலிங் யூனிட், கேமிங் என்ஜின் போன்ற பவர்புல் அம்சங்களை பேக் செய்துள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை விபரங்களை இப்போது பார்க்கலாம்.

அட்ராசக்கை.. தலைவன் இறங்கிட்டான்.. பவர்புல் Lenovo Legion Tablet விலை?

லெஜியான் Y700 2024 கேமிங் டேப்லெட் (Lenovo Legion Y700 2024 Gaming Tablet):
இப்போது இந்த சாதனம் பிளாக் நிறத்தில் மட்டும் சீனாவில் ப்ரீபுக்கிங் செய்ய கிடைக்கிறது. அடுத்தபடியாக விரைவில் இது வைட் நிறத்தில் விற்பனைக்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய லெனோவா லெஜியான் Y700 2024 கேமிங் டேப்லெட் சாதனம் 8.8' இன்ச் அளவிலான 2,560 x 1,600 பிக்சல்கள் கொண்ட 165Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த புதிய Lenovo Legion Y700 2024 Tablet சாதனம் 16GB LPDDR5X வரையிலான ரேம் (RAM) உடன் 512GB வரையிலான UFS 4.1 ஸ்டோரேஜ் வரை வாங்க கிடைக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) உடன் சக்தி வாய்ந்த டேப்லெட்டாக வருகிறது. முன்பே சொன்னது போல, இது ஹீட்டிங் சிக்கலை தடுக்க QianKun cooling architecture கூலிங் சேம்பர் அம்சத்தை வழங்குகிறது.

Lenovo Legion Y700 (2024) ஒரு பிரத்யேக எஞ்சினைக் கொண்டுள்ளது, இது லெனோவாவின் லிங்ஜிங் எஞ்சின் என்று கூறப்படுகிறது. இது முறையே 32.2 மற்றும் 45.8 சதவீதம் டச் மற்றும் நெட்வொர்க் லோ-லேடன்சி அம்சத்தை கொண்டுள்ளது. இது டூயல் சூப்பர்லீனியர் ஸ்பீக்கர் மற்றும் டூயல் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் ஆதரவுடன் வருகிறது. இதில் 6550mAh பேட்டரி உடன் வருகிறது.

Lenovo Legion Y700 (2024) டேப்லெட் விலை:
Lenovo Legion Y700 (2024) டேப்லெட் சாதனம் 12GB + 256GB விருப்பம், 12GB + 256GB விருப்பம் மற்றும் 16GB + 512GB ஸ்டோரேஜ் விருப்பம் ஆகிய மூன்று வேரியண்ட் மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை முறையே இந்தியாவில் ரூ. 34,600, ரூ. 37,900 மற்றும் ரூ. 39,400 ஆகிய விலையில் வருகிறது. இது இந்தியாவுக்கு விரைவில் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Legion Y700 2024 Gaming Tablet With 8 Inch Display 16GB RAM 512GB Storage 6550mAh Battery Price Rs 34600
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X