Home
Gadgets

வெச்சி செஞ்சிட்டாங்க.. 3K டிஸ்பிளே.. 12GB ரேம்.. 7600mAh பேட்டரி.. 68W ஃபாஸ்ட் சார்ஜிங்.. கேமிங் டேப் மாடல்!

கேமிங் பிரியர்களை கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் போட வைக்கும்படி மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் 3K ரெசொலூஷன் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 7600mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மோஸ் ஆடியோ போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், கேமிங் கன்ட்ரோலர் சப்போர்ட் கொண்ட மாடலாக லெனோவா லெஜியன் டேப் ஒய்700 2025 (Lenovo Legion Tab Y700 2025) டேப்லெட் வெளியாகி இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்ட மாடலாக வெளியாகி இருக்கும் இந்த டேப்லெட்டின் முழு விவரங்கள் இதோ.

மார்கெட்டில் பல்வேறு பீச்சர்களுடன் கேமிங் டேப்லெட்கள் கிடைக்கின்றன. இதில் பெரும்பாலும் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்க சிப்செட், பிரீமியம் அனுபவம் கொடுக்க டிஸ்பிளே மற்றும் அதிக பேக்கப் கொடுக்க பெரிய கேபாசிட்டி பேட்டரி ஆகியவை மட்டுமே என்ஹான்ஸ் செய்யப்படும். சில டேப்லெட்களில் ஆடியோ சிஸ்டம் மற்றும் கேமிங் பூஸ்ட் போன்ற பீச்சர்களும் கூடுலாக கிடைக்கும்.

வெச்சி செஞ்சிட்டாங்க.. 3K டிஸ்பிளே.. 12GB ரேம்.. 7600mAh பேட்டரி!

ஆனால், லெனோவா லெஜியன் டேப் மாடல்களில் மட்டும் பிரத்யேகமாக கேமிங் கன்ட்ரோல்களும் கிடைக்கின்றன. இதை டேப்லெட்டுன் பொருத்தி, போர்டபிள் கேமிங் கன்சோலை போல பயன்படுத்தி கொள்ளலாம். இந்த லெஜியன் டேப் ஒய்700 2025 மாடலும் அப்படித்தான். ஜி9 கேம் கன்ட்ரோலர் சீரிஸ் (G9 Game Controller Series) சப்போர்ட் கொண்ட மாடலாக வந்துள்ளது.

ஆகவே, டேப்லெட்டுடன் ஜி9 கேமிங் கன்ட்ரோலர் (G9 Game Controller) அல்லது ஜி9 ப்ரோ கேம் கன்ட்ரோலர் (G9 Pro Game Controller) ஆகிய டிவைஸ்களுடன் ஆர்டர் செய்து கொள்ளலாம். இருப்பினும், டேப்லெட் விலையில் இருந்து கூடுதல் விலைக்கே இந்த கன்ட்ரோலர்கள் கிடைக்கும். ஆகவே, டேப்லெட் தனியாகவும், கன்ட்ரோலர் தனியாகவும் கிடைக்கும். முழு பீச்சர்கள் எப்படி?

லெனோவா லெஜியன் டேப் ஒய்700 2025 அம்சங்கள் (Lenovo Legion Tab Y700 2025 Specifications): கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது.

மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது. இதுபோக கூடுதல் ஸ்டோரேஜ் கொடுக்க 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Slot) சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு இசட்யுஐ 16 (ZUI 16) கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பக்கம் எந்த குறையும் சொல்லிவிட முடியாது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. 3K டிஸ்பிளே.. 12GB ரேம்.. 7600mAh பேட்டரி!

இந்த லெனோவா லெஜியன் டேப்லெட்டில் 3K ரெசொலூஷன் கொண்ட 8.8 இன்ச் (3040 x 1904 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கேமிங் மாடலாக இருந்தும், 50 எம்பி கேமராவை கொடுக்கிறது. அதேபோல 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

ஆடியோவை பார்க்கையில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்கள் (Super Linear Speakers) கிடைக்கின்றன. டைப்-சி ஆடியோ (Type-C Audio) அவுட் கிடைக்கிறது. இந்த லெனோவா லெஜியன் டேப் ஒய்700 2025 டேப்லெட்டில் 7600mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 340 கிராம் எடை வருகிறது.

ஆனால், வெறும் 6.99 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி கொடுக்கிறது. இந்த டேப்லெட்டின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 7 (Wi-Fi 7) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் டிபி அவுட் கிடைக்கிறது. 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, பிளாக் (Black) மற்றும் ஐஸ் சோல் ஒயிட் (Ice Soul White) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. 3K டிஸ்பிளே.. 12GB ரேம்.. 7600mAh பேட்டரி!

ஜி9 ப்ரோ கேம் கன்ட்ரோலர் அம்சங்கள் (G9 Pro Game Controller Specifications): கேமிங் கன்ட்ரோலர்களில் கிடைக்கும் ஒட்டுமொத்த பீச்சர்களையும், இதிலும் எதிர்பார்க்கலாம். ஆகவே, ஆப்டிகல் ஏபிஎக்ஸ்ஒய் (Optical ABXY) கீஸ் கன்ட்ரோல், டூயல் கட் டிரிகர் (Dual Cut Trigger) கன்ட்ரோல், நேவிகேஷன் கன்ட்ரோல் போன்றவை கிடைக்கின்றன.

அதேபோல வைப்ரேஷன் (Vibration) மற்றும் சவுண்ட் (Sound) அவுட்புட் கிடைக்கிறது. இது சோனி பிளேஸ்டேஷனின் கேமிங் கன்ட்ரோலர்களில் கிடைக்கும் பீச்சர்களை போலவே இருக்கிறது. மேலும், லோவ்-லேட்டன்சி கனெக்டிவிட்டி (Low Latency Connectivity) கொடுக்க டைப்-சி டைரெக்ட் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இதுபோக ஆர்ஜிபி லைட்னிங் எபெக்ஸ்ட்கள் கிடைக்கிறது.

ஆகவே, வைப்ரேஷன் மட்டுமல்லாமல், ஆர்ஜிபி லைட்கள் மூலமும் கன்ரோல்களை பீல் செய்யலாம். இந்த கேமிங் அவுட்புட்டின் போது, ஹீட் கன்ட்ரோல் கொடுக்க சென்ட்ரல் கூலிங் ஆர்கிடெக்ச்சர் 2.0 (Central Cooling Architecture 2.0), விசி ஸ்டீரியோ லிக்விட் கூலிங் சிஸ்டம் (VC Stereo Liquid Cooling System) போன்ற கேமிங் சப்போர்ட்களையும் இந்த டேப்லெட் கொடுக்கிறது.

Take a Poll

லெனோவா லெஜியன் டேப் ஒய்700 2025 விலை (Lenovo Legion Tab Y700 2025 Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,110ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.45,030 ஆக இருக்கிறது. இந்த வேரியண்ட்களுடன் ஜி9 கேம் கன்ட்ரோலர் ஆனது ரூ.5,915 விலைக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த டேப்லெட்கள் மற்றும் கன்ட்ரோலர்கள் சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. மே 31ஆம் தேதி முதல் அங்கு விற்பனை தொடங்குகிறது. ஆகவே, மேற்கண்ட விலைகளும் சீன யுவானின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, அவ்வப்போது வேறுபாடுகள் இருக்கும். சீனாவில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வந்த பிறகு குளோபல் வெளியீடு நடக்கும்.

இந்திய மார்கெட்டிலும் லெனோவா லெஜியன் டேப்லெட்கள் கிடைக்கின்றன. ஆனால், கேமிங் கன்ட்ரோலர்களை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும், வரும் காலங்களில் லெனோவா நிறுவனம் இங்கும் கேமிங் கன்ட்ரோலர்களை களமிறக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், லெனோவா டேப்லெட்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால், வாய்ப்புகளும் அதிகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Legion Tab Y700 2025 With 16GB RAM Launched Sale From May 31 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X