மாஸனா பவர்ஃபுல் டேப்லெட்.. ஒட்டுமொத்த Tablet மார்க்கெட்டும் ஷாக்.. 2.7K டிஸ்பிளே.. 1TB மெமரி.. எந்த மாடல்?
புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான லெனோவா தனது லெஜியான் டேப் (Legion Tab) என்ற டேப்லெட் சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய டேப்லெட் மல்டிடாஸ்கிங் மற்றும் கேமிங் ஆர்வலர்களுக்கு ஏற்ற உயர் செயல்திறன் அம்சங்களை கொண்ட பெஸ்ட் டேப்லெட் சாதனமாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனம் இந்தியாவின் முதல் கேமிங் டேப்லெட் சாதனமாக (India's first gaming tablet device) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை என்ன? இதில் என்னென்ன அம்சங்கள் நிரப்பப்பட்டுள்ளது? என்பது போன்ற தகவலை இப்போது பார்க்கலாம்.
லெனோவா லெஜியான் டேப் (Lenovo Legion Tab) என்ற பெயர் கொண்ட இந்த டேப்லெட் சாதனம் 2.7K தீர்மானம் கொண்ட 144Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) வீதத்துடன் 8.8" இன்ச் எல்சிடி டிஸ்பிளேவைக் (display) கொண்டுள்ளது. இது 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (Peak brightness) உடன் வருகிறது. இது பிரகாசமான வீடியோ அனுபவத்தை தருகிறது. இது இண்டோர் மற்றும் அவுட்டோர் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகிறது.

லெனோவா லெஜியான் டேப் (Lenovo Legion Tab):
இந்த புதிய லெனோவா லெஜியான் டேப் (Lenovo Legion Tab) டேப்லெட் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC) உடன் இயக்கப்படுகிறது. இது 12ஜிபி வரையிலான LPDDR5X ரேம் (RAM) உடன் வருகிறது. இந்த புதிய டேப்லெட் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் (Storage) உடன் 1TB வரையிலான மெமரி கார்டு ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
இந்த டேப்லெட் சாதனம் 13 மெகாபிக்சல் கொண்ட ரியர் கேமரா (rear camera) மற்றும் 8 மெகாபிக்சல் கொண்ட செல்பி கேமரா (selfie camera) போன்றவற்றை கொண்டுள்ளது. இது டால்பி அட்மாஸ் (Dolby Atmos) அம்சத்தையும் ஆதரிக்கிறது. இந்த அம்சம் டேப்லெட்டில் கேமிங் மற்றும் மீடியா பயன்பாட்டை சிறப்படைய செய்கிறது. Lenovo Legion Tab ஆனது 6550mAh பேட்டரியுடன் (battery) வருகிறது.
இது மற்ற டேப்லெட் சாதனங்களை விட அதிக நேர பயன்பாட்டு நேரத்தை உறுதியளிக்கிறது. இது 45W பாஸ்ட் சார்ஜருடன் (fast charger) வருகிறது. இதன் விலை பற்றி பேசிகையில், Lenovo Legion Tab இன் உயர்நிலை சிறப்பம்சம் மற்றும் நியமன விலை நிர்ணயம் போன்றவற்றுடன், ஒரு சூப்பரான டேப்லெட் சாதனமாக இந்த புதிய லெனோவா லெஜியான் டேப் டேப்லெட் சாதனம் வெளிவந்துள்ளது.
மாஸனா பவர்ஃபுல் டேப்லெட்.. ஒட்டுமொத்த Tablet மார்க்கெட்டும் ஷாக்.. ஏன்?
உண்மையில், நீங்கள் ஒரு தரமான டிஸ்பிளேவுடன் பட்ஜெட்டில் ஒரு அட்டகாசமான டேப்லெட் சாதனத்தை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் கட்டாயமாக இந்த புதிய லெனோவா லெஜியான் டேப் (Lenovo Legion Tab) டேப்லெட் சாதனத்தை உங்கள் கருத்தில் கொள்ளலாம் மக்களே. மிகவும் வலுவான பணிகளுக்கு இந்த சக்திவாய்ந்த டேப்லெட் சாதனம் கைகொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்திய மக்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக அமைகிறது.
இந்த புதிய லெனோவா லெஜியான் டேப் (Lenovo Legion Tab Price) டேப்லெட் சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இது ரூ.34,999 விலையில், பிளிப்கார்ட்டின் (Flipkart) GOAT சேல்ஸ் விற்பனையின் போது வாங்க கிடைக்கிறது. இப்போது இதன் மீது 6,000 ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இதன் விலை ரூ. 28,999 ரூபாயாகக் குறைத்துள்ளது. இது ஒரே ஒரு நிறத்தில் மட்டுமே வாங்க கிடைக்கிறது. இந்த நிறம் ஸ்டோர்ம் க்ரேய் என்ற பெயருடன் வருகிறது.


Click it and Unblock the Notifications








