வாங்குனா இதுதான்.. 24GB விரேம்.. OLED டிஸ்பிளே.. RTX 5090 ஜிபியு.. Xbox கேமிங் பாஸ் அல்டிமேட்.. எந்த லேப்டாப்?
கேமிங் பிரியர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கும் ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படியான பீச்சர்களுடன் லெனோவா லெஜியன் ப்ரோ 7ஐ (Lenovo Legion Pro 7i) லேப்டாப் வெளியாகி இருக்கிறது. 24 ஜிபி விரேம், ஓஎல்இடி டிஸ்பிளே, என்விடியா ஆர்டிஎக்ஸ் 5090 ஜிபியு, இன்டல்கோர் அல்ட்ரா 9 எச்எக்ஸ் சீரிஸ் பிராசஸர் போன்ற பீச்சர்களில் மிரள விட்டுள்ள இந்த லெனோவா லெஜியன் ப்ரோ 7ஐ மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் இருக்கும் ப்ரோ லெவல் கேமிங் லேப்டாப்களில் லெனோவா நிறுவனத்தின் லெஜியன் ப்ரோ சீரிஸ் (Legion Pro Series) தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறது. இதில் லெனோவா லெஜியன் ப்ரோ 7ஐ மாடலானது, அல்ட்ரா பிரீமியம் கேமிங் பீச்சர்களுடன் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இதற்கு ஏற்ப விலையும் பிரீமியமாகவே இருக்கிறது.

லெனோவா லெஜியன் ப்ரோ 7ஐ அம்சங்கள் (Lenovo Legion Pro 7i Specifications): கேமிங் மாடலாக இருப்பதால், சாப்ட்வேர் மட்டுமல்லாமல், ஹார்ட்வேர் லெவலிலும் பீச்சர்களை வாரி வழங்கி இருக்கிறது. ஹீட் கன்ட்ரரோலுக்கு ஏகப்பட்ட பீச்சர்கள் உள்ளன. ஆகவே, 275W தெர்மல் பவர் டிசைன் கொண்ட வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் (Vapor Chamber Cooling System) கிடைக்கிறது.
இதுபோக நாய்ஸ்-ஆப்டிமைஸ்டு ஏர்ஃப்ளோ டிசைன் (Noise-optimized Airflow Design) கொண்ட டூயல் ஃபேன் (Dual Fans) கிடைக்கிறது. ட்ரூஸ்ட்ரைக் கீபோர்ட் (TrueStrike) கிடைக்கிறது. இதில் ஆன்டி-கோஸ்டிங் டெக்னாலஜி, சப்-மில்லிசெகண்ட் ரெஸ்பான்ஸ் டைம் போன்ற கேமிங் பிரியர்கள் விரும்பும் அவுட்புட் கிடைக்கும். அதேபோல ஆர்ஜிபி லைட்னிங் (RGB Lighting) கிடைக்கிறது.
மேலும், 2 ஸ்வாப்பபிள் கீகேப்ஸ் (Swappable Keycaps) கிடைக்கிறது. ஸ்டீல்சீரிஸ் (SteelSeries) பிராண்டட் நஹிமிக் 3டி ஆடியோ (Nahimic 3D Audio) சப்போர்ட் கிடைக்கிறது. பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்க்கையில், இன்டல்கோர் அல்ட்ரா 9 எச்எக்ஸ் சீரிஸ் (Intel Core Ultra 9 HX Series) பிராசஸர் மற்றும் என்விடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 5090 ஜிபியு (NVIDIA GeForce RTX 5090 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
24 ஜிபி விரேம் (VRAM) கிடைக்கிறது. இந்த லெனோவா லெஜியன் ப்ரோ 7ஐ மாடலில் விண்டோஸ் 11 ஓஎஸ் (Windows 11 OS) கிடைக்கிறது. இதுபோக மூன்று மாதங்களுக்கான அனுகலுடன் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் அல்டிமேட் (Xbox Game Pass Ultimate) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான சாப்ட்வேர் லெவல் பீச்சர்களை பார்க்கையில், லெனோவா ஏஐ என்ஜின் பிளஸ் (Lenovo AI Engine Plus) உள்ளது.
இதற்காக எல்ஏ3 (LA3) மற்றும் எல்ஏ1 (LA1) போன்ற சிப் கிடைக்கின்றன. லெனோவா ஸ்பேஸ் (Legion Space), கேம் கிளிப் மாஸ்டர் (Game Clip Master) மற்றும் கேம் காம்பானியன் (Game Companion) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. டிஸ்பிளேவை பார்க்கையில், 16 இன்ச் (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டபுள்யூகியூஎக்ஸ்ஜிஏ (WQXGA) டிஸ்பிளேவில் டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது.
மேலும், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஜி-சின்க் (G-SYNC) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த லெனோவா லெஜியன் ப்ரோ 7ஐ மாடலானது, கஸ்டமைசபிள் கான்பிகிரேஷனுடன் கிடைக்கிறது. ஆரம்ப விலை ரூ. 2,39,990 ஆக இருக்கிறது. லெனோவா தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








