சரியான நேரத்தில் தரமான அறிமுகம்.. மெட்டல் பில்ட், லேட்டஸ்ட் Intel Raptor உடன் Lenovo-வின் Slim லேப்டாப்!
ஆசஸ் (Asus) நிறுவனம் கிட்டத்தட்ட அதன் அனைத்து லேப்டாப் சீரீஸின் கீழும் புதிய மாடலக்ளை "அடுக்கடுக்காக" அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் மற்றொரு பிரபலமான லேப்டாப் பிராண்ட் ஆன லெனோவா, அதன் ஐடியாபேட் சீரிஸின் கீழ் புதிய 2025 மாடல் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 2025 (Lenovo IdeaPad Slim 3 2025) லேப்டாப் ஆகும்.
புதிய மெட்டல் பில்ட் உடன் வரும் இந்த லேப்டாப் - ஹைப்ரிட் வொர்க்கர்ஸ், மாணவர்கள் மற்றும் டிஜிட்டல் கிரியேட்டர்களுக்காக மேம்படுத்தப்பட்ட யூஸர் சென்ட்ரிக் அம்சங்களுடன் வருகிறது. எல்லாவற்றை விட முக்கியமாக ஐடியாபேட் ஸ்லிம் 3 2025 ஆனது லேட்டஸ்ட் இன்டெல் ராப்டார் லேக் எச் மற்றும் ஏஎம்டி ஹாக்பாயிண்ட் ப்ராசஸர்களை கொண்டுள்ளது.

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 2025 லேப்டாப்பின் முக்கியஅம்சங்கள்: டிஸ்பிளேவை பொருத்தவாரி, இது WUXGA ரெசல்யூஷன் உடனான 14-இன்ச் / 15.3-இன்ச் மற்றும் 16-இன்ச் IPS பேனல்களுடன் வருகிறது. இது 16:10 ரேஷியோ உடனான ஆன்டி-க்ளேர் பேனல் ஆகும். 90%+ ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ, 300 நிட்ஸ் வரை ப்ரைட்னஸ் மற்றும் 45% NTSC ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
ப்ராசஸர்-ஐ பொறுத்தவரை, லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 2025 லேப்டாப் ஆனது 13த் ஜெனெரஷன் இன்டெல் கோர் i5-13420H (3.40GHz வரை E-கோர்ஸ் மற்றும் 4.60GHz வரை P-கோர்ஸ்) அல்லது i7-13620H (3.60GHz வரை E-கோர்ஸ் மற்றும் 4.90GHz வரை P-கோர்ஸ்) உடன் கிடைக்கிறது. மேலும் இது AMD Ryzen 7 5825U ப்ராசஸர் உடன் மற்றொரு வேரியண்ட்டிலும் வருகிறது.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இந்த லேப்டாப் விண்டோஸ் 11 ஹோமை எம்எஸ் ஆபிஸ் ஹோம் 2024 உடன் இயக்குகிறது. ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 16ஜிபி DDR4-3200MHz ரேம் மற்றும் 512ஜிபி SSD M.2 2242 PCIe QLC ஸ்டோரேஜை தரிக்கிறது. மேலும் இந்த லேப்டாப் ஐஆர் ஆதரவுடன் 1080p FHD கேமரா, டூயல் மைக்ரோஃபோன்கள் மற்றும் ப்ரைவஸி ஷட்டர் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை, இந்த லேப்டாப் 65W சார்ஜிங் ஆதரவுடன் 3-செல் Li-Polymer 60Wh பேட்டரியை கொண்டுள்ளது. கூட்டமைப்பு மற்றும் போர்ட்கள்: இது Wi-Fi 6 மற்றும் ப்ளூடூத் 5.3 இணைப்பைக் கொண்டுள்ளது. போர்ட்களை பொறுத்தவரை இரண்டு யூஎஸ்பி 3.2 ஜென் 1 டைப் ஏ போர்ட்கள், ஒரு எஸ்டி கார்டு ரீடர், டிசி-இன், எச்டிஎம்ஐ 1.4, ஒரு ஆடியோ ஜாக் மற்றும் இரண்டு யூஎஸ்பி டைப் 3.2 ஜென் 1 போர்ட்கள் உள்ளன. கடைசியாக மற்றவை: லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 2025 லேப்டாப் ஆனது ஒரு பெரிய டச்பேட் மற்றும் ரீஃபைன்டு 0.1மிமீ-டிஷ் செய்யப்பட்ட கீபோர்ட்-ஐ கொண்டு உள்ளது மற்றும் MIL-STD 810H தரநிலைகளையும் பூர்த்தி செய்கிறது.
லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 2025 லேப்டாப்பின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 2025 லேப்டாப் ஆனது இந்தியாவில் ரூ.63,790 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மடிக்கணினி பல கான்ஃபிகரேஷன்ஸ் மற்றும் டிஸ்பிளே எ ; அளவுகளில் வாங்க கிடைக்கிறது
இந்த லேப்டாப் லெனோவா,காம் (Lenovo.com), லெனோவாவின் பிரத்தியேக ஸ்டோர்கள், முக்கிய இகாமர்ஸ் தளங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆஃப்லைன் சில்லறை கூட்டாளர்கள் மூலம் விற்பனைக்கு வரும். இந்த லேப்டாப் உடன் லெனோவா நிறுவனம் ஒரு வருட உத்தரவாதத்தையும், ஒரு வருட விபத்து சேத பாதுகாப்பையும் வழங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications