பள்ளி, கல்லூரி மாணவர்களை குஷிப்படுத்தும் பட்ஜெட் விலையில் புதிய Lenovo லேப்டாப் அறிமுகம்!

|

"புது லேப்டாப் ஒன்னு வாங்கி இருக்கேன்!" என்று கூறினாலே, "என்ன லேப்டாப்? லெனோவா பிராண்ட்-ஆ!" என்று கேட்கும் அளவிற்கு, லெனோவா (Lenovo) நிறுவனமானது இந்திய லேப்டாப் சந்தையை ஆட்சி செய்கிறது என்றே கூறலாம். பிரீமியம் மாடலோ, பட்ஜெட் மாடலோ.. லெனோவா லேப்டாப்களை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது!

அந்த வரிசையில் ஒரு புதிய லெனோவா லேப்டாப் இணைந்துள்ளது. அதென்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எந்தெந்த வலைத்தளங்கள் வழியாக விற்பனை செய்யப்படுகிறது? இதோ விவரங்கள்:

குஷிப்படுத்தும் விலை, அம்சங்களுடன் புதிய Lenovo லேப்டாப் அறிமுகம்!

அதென்ன Laptop?

லெனோவா நிறுவனத்தின் லேட்டஸ்ட் லேப்டாப் ஆக லெனோவா ஐடியாபேட் 1 (Lenovo IdeaPad 1) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப், லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஏஎம்டி ரைஸன் ஆர்3 ப்ராசஸர்களுடன் (AMD Ryzen R3 Processors) உடன் வரும் லெனோவா பிராண்டின் முதல் பெர்சனல் கம்ப்யூட்டரும் (PCs) கூட!

ChatGPT க்கு ஆப்பு.. சுந்தர் பிச்சையின் சூப்பர் ஐடியா.. Google-ன் ஆட்டம் இனி வேற மாதிரி இருக்கும்!ChatGPT க்கு ஆப்பு.. சுந்தர் பிச்சையின் சூப்பர் ஐடியா.. Google-ன் ஆட்டம் இனி வேற மாதிரி இருக்கும்!

Lenovo IdeaPad 1 லேப்டாப்பில் கவனிக்கப்பட வேண்டிய சிறப்பம்சங்கள்!

இந்த லேப்டாப்பில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, 15-இன்ச் அளவிலான ஃபுல் எச்டி ஆன்ட்டி-க்ளேர் டிஸ்ப்ளே, விண்டோஸ் 11 ஓஎஸ், டால்பி ஆடியோவுக்கான ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 14 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப், கேமரா ஷட்டர் போன்றவைகளை கூறலாம்!

Lenovo IdeaPad 1 லேப்டாப்பின் இந்திய விலை விவரங்கள்:

லெனோவாவின் இந்த புதிய லேப்டாப் 2 வகைகளின் கீழ் வாங்க கிடைக்கிறது.

ஏஎம்டி ரைஸன் 3 7320யு ப்ராசஸர், ப்ளூடூத் 5.1 மற்றும் இன்டெக்ரேடட் ஏஎம்டி ரேடியான் 610எம் கிராபிக்ஸை கொண்ட வேரியண்ட் ரூ.44,690 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏஎம்டி ரைஸன் 3 3250யு ப்ராசஸர், ப்ளூடூத் 5.1 மற்றும் இன்டெக்ரேடட் ஏஎம்டி ரேடியான் கிராபிக்ஸை கொண்ட மற்றொரு வேரியண்ட் ரூ.38,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ.. போய்த்தான் பார்ப்போம்.. OnePlus 11 5G விலை & விற்பனை!கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ.. போய்த்தான் பார்ப்போம்.. OnePlus 11 5G விலை & விற்பனை!

இந்த லேப்டாப் எந்தெந்த வலைத்தளங்கள் வழியாக விற்பனை செய்யப்படுகிறது?

லெனோவா ஐடியாபேட் 1 லேப்டாப், கிளவுட் கிரே என்கிற ஒரே ஒரு கலர் ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது வருகிற பிப்ரவரி 8, 2023 முதல் லெனோவோ எக்ஸ்க்ளூஸிவ் (Lenovo Exclusive) ஸ்டோர்ஸ், லெனோவா.காம் (Lenovo.com) மற்றும் அமேசான் இந்தியா (Amazon.in) வழியாக வாங்க கிடைக்கும்!

iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!

Lenovo IdeaPad 1 லேப்டாப்பின் விரிவான அம்சங்கள்:

- 15.6-இன்ச் அளவிலான எஃப்எச்டி ஆன்ட்டி-க்ளேர் டிஸ்ப்ளே
- 1920 x 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 220 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்

- ஏஎம்டி ரைஸன் 3 7320யு ப்ராசஸர்
- இன்டெக்ரேடட் ஏஎம்டி ரேடியான் 610எம் கிராபிக்ஸ்
- 8ஜிபி எல்பிடிடிஆர்5-5500 ரேம்
- 512ஜிபி எஸ்எஸ்டி எம்.2 2242 PCIe 4.0.4
- இரண்டு One M.2 2280 PCIe 3.0 ஸ்லாட்டுகளை பயன்படுத்தி ஸ்டோரேஜை நீடிக்கலாம்

- நான்-பேக்லிட் கீபோர்ட்
- கஸ்டம் ஷட்டர் உடனான 720p ரெசல்யூஷனை கொண்ட எச்டி வெப் கேமரா
- டால்பி ஆடியோ
- எச்டி ஆடியோ
- இரண்டு 1.5W ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்

- 14 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும் 42Wh பேட்டரி
- வைஃபை 6
- ப்ளூடூத் 5.1
- ஒரு யூஎஸ்பி 2.0 போர்ட்
- ஒரு யூஎஸ்பி 3.2 ஜென் 1 போர்ட்
- ஒரு யூஎஸ்பி-சி 3.2 ஜென் 1 போர்ட்
- ஒரு எச்டிஎம்ஐ 1.4பி போர்ட்
- கார்டு ரீடர்
- 3.5 மிமீ ஹெட்ஜாக்
- பவர் கனெக்டர்

Best Mobiles in India

English summary
Lenovo IdeaPad 1 with AMD Ryzen R3 Processor Best Laptop Under Rs 40000 in India 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X