Home
Gadgets

மே 1-ல் களமிறங்கும் புதிய Lenovo டேப்லெட்.. 10200mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. எந்த மாடல்?

லெனோவா தனது புதிய லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 (Lenovo Idea Tab Pro Gen 2)மாடலை இந்தியாவில் வரும் மே 1-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 அம்சங்கள் (Lenovo Idea Tab Pro Gen 2 Specifications): 13-இன்ச் PureSight Pro டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 மாடல் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3.5கே ரெசல்யூஷன் (3.5K Resolution), 3504 x 2190 பிக்சல்ஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

மே 1-ல் களமிறங்கும் புதிய Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?

இதுதவிர டால்பி விஷன், 800 நிட்ஸ் பிரைட்னஸ், டிசிஐ-பி3 கலர், எஸ்ஜிஎஸ் லோ ப்ளூ லைட் சான்றிதழ் போன்ற பல சிறப்பான டிஸ்பிளே அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. ஆகவே இந்த டேப்லெட் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Qualcomm Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் இந்த லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 அறிமுகமாகும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக அனைத்து ஆப்களையும் இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்தலாம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த டேப்லெட் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 மாடல் களமிறங்கும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

10200எம்ஏஎச் பேட்டரி உடன் லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

13எம்பி ரியர் கேமரா உடன் லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 மாடல் அறிமுகமாகும். குறிப்பாக இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

புளூடூத் 6, வைஃபை 7, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 மாடல் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Idea Tab Pro Gen 2 India launch date announced: Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X