ஒரு முறை சார்ஜ் செய்தால் 8நாட்கள் உபயோகிக்கலாம் : HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட்.!
இந்த சாதனத்தை ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்கு புதிய இயங்குதள சாதனங்களில் பயன்படுத்த முடியும். பின்பு ஐஒஎஸ் இயங்குதளங்களில் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவோ நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி மலிவு விலையில் லெனோவோ நிறுவனம் HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது பயன்படுத்த மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

லெனோவா நிறுவனம் இதற்கு முன்பு HX03 கார்டியோ மற்றும் HX03F ஸ்பெக்ட்ரா பேன்ட்கள் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது வெளிவந்த புதிய HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் பொறுத்தவரை சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

8நாட்கள்:
HX06 ஆக்டிவ் சாதனம் பொறுத்தவரை 60எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, இது 8 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பின்பு பில்ட்-இன் ஸ்டான்டர்டு யுஎஸ்பி போர்ட் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
லெனோவோ HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சாதனம் 0.87-இன்ச் டிஸ்பிளே மற்றும் 128x32 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு டிஸ்பிளே ஆக்விட்டி, தேதி, நேரம் மற்றும் பல்வேறு தகவல்களை வழங்குகிறது.

கைரோ சென்சார்:
இந்த சாதனத்தில் கைரோ சென்சார், அழைப்பு ரிமைன்டர்கள், நோட்டிஃபிகேஷன்கள், இன்ஃபர்மேஷன் ரிமைன்டர், சைலன்ட் அலாரம் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக கம்ப்யூட்டர் அல்லது யூஎஸ்பி சார்ஜர் மூலம் மிக எளிமையாக சார்ஜ் செய்ய முடியும்.

ஆண்ட்ராய்டு:
இந்த சாதனத்தை ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்கு புதிய இயங்குதள சாதனங்களில் பயன்படுத்த முடியும். பின்பு ஐஒஎஸ் இயங்குதளங்களில் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ப்ளூடூத் 4.2 வசதி இவற்றுள் அடக்கம்.

விலை:
லெனோவோ HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சாதனம் கருப்பு நிறத்தில் பிளிப்கார்ட் வழியே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்பேன்ட் விலை ரூ.1,299-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications