கண்ணுல போட்டு பார்த்தா மொத்தமும் தெரியும்: Lenovo ஸ்மார்ட் கிளாஸ் வாங்குனா இவ்ளோ பலனா?

|

ஆகச் சிறந்த காட்சி அனுபவத்துடன் Lenovo Glasses T1 அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் இரண்டு மைக்ரோ OLED டிஸ்ப்ளேக்களைக் கொண்டிருக்கின்றன.

அதாவது கண்ணாடிகளின் இரண்டு புறத்திலும் ஒவ்வொரு டிஸ்ப்ளேக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் க்ளாஸ் ஆனது பல்வேறு மேம்பட்ட ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

இரண்டு புறத்திலும் மைக்ரோ ஓஎல்இடி டிஸ்ப்ளே

இரண்டு புறத்திலும் மைக்ரோ ஓஎல்இடி டிஸ்ப்ளே

Lenovo Glasses T1 ஆனது இரண்டு புறத்திலும் மைக்ரோ ஓஎல்இடி டிஸ்ப்ளேக்களைக் கொண்டுள்ளன. இரண்டு டிஸ்ப்ளேக்களும் 60Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. எதிர்கால அம்சத்தோடு ஸ்மார்ட் கிளாஸ் வாங்கத் திட்டமிட்டால் அதற்கு இது சரியான நேரமாகும்.

லெனோவா யோகா கிளாஸஸ்

லெனோவா யோகா கிளாஸஸ்

சீன நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளரான லெனோவா, புதிய ஸ்மார்ட் கிளாஸை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட் கிளாஸ் பயனர்களுக்கு பல்வேறு மேம்பட்ட பயன்பாடுகளை வழங்குகிறது. Lenovo Glasses T1 ஆனது சீனாவில் லெனோவா யோகா கிளாஸஸ் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கிளாஸ் சீனாவில் மட்டுமே தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது.இந்த ஸ்மார்ட்கிளாஸ் உலகளவில் எப்போது கிடைக்கும்?

எதிர்கால அம்சங்கள்

எதிர்கால அம்சங்கள்

லெனோவா க்ளாஸ் டி1 ஆனது 2023 ஆம் ஆண்டில் உலகளவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸ் எதிர்கால அம்சங்களைக் கொண்டிருக்கிறது என இதன் தன்மையை வைத்து நிச்சியமாகக் கூறலாம்.

இதை சரிசெய்து இருக்கலாம்?

இதை சரிசெய்து இருக்கலாம்?

Lenovo Glasses T1 ஆனது ஈர்க்கக்கூடிய காட்சி அனுபவத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் இரண்டு மைக்ரோ OLED டிஸ்ப்ளேக்களைக் கொண்டிருக்கின்றன.

கண்ணாடியின் ஒவ்வொரு டிஸ்ப்ளேயும் தலா 60Hz ரெஃப்ரஷிங் ரேட்டைக் கொண்டிருக்கிறது. 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் இதில் உள்ளது.

ரெஃப்ரஷிங் ரேட் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். அதிக ரெஃப்ரஷிங் ரேட் இருந்திருந்தால் காட்சிகள் கண்களுக்கு நெருக்கமாகவும் துல்லியமாகவும் இருந்திருக்கும். ரெஃப்ரஷிங் ரேட் குறைவாக இருக்கும் காரணத்தால் கண்களுக்கு சற்று அசௌகரிய நிலையை ஏற்படுத்தலாம்.

அனைத்து ஓஎஸ் இயக்க ஆதரவுகள்

Lenovo Glasses T1 ஆனது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதள இணக்கத்தைக் கொண்டுள்ளது. புதிய ஸ்மார்ட் கிளாஸ்களின் டிஸ்ப்ளேக்கள் ஹாங்காங்கை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள்

உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள்

ஸமார்ட் க்ளாஸ் இரண்டு மைக்ரோ ஓஎல்இடி டிஸ்ப்ளேக்களைக் கொண்டுள்ளது. அதேபோல் லெனோவா க்ளாஸ் டி1 ஆனது உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்களைக் கொண்டிருக்கிறது. இதை அணிந்திருப்பவர்கள் இந்த க்ளாஸ் மூலமாகவே காட்சியின் சத்தத்தை கேட்கலாம்.

குறைந்த ஒளிரும் தன்மை மற்றும் குறைந்த ப்ளூ லைட் உமிழ்வு தன்மையக் இந்த ஸ்மார்ட் கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

Lenovo Glasses T1 விலை

Lenovo Glasses T1 விலை

Lenovo Glasses T1 ஆனது சீனாவில் லெனோவா யோகா க்ளாஸ் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸ் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் விற்பனைக்கு வரும்.

2023 ஆம் ஆண்டில் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஸ்மார்ட் கிளாஸ் விற்பனைக்கு வரும் போதுதான் இதன் விலை தெரியவரும் என லெனோவா தெரிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட் கிளாஸ் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பதை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

Lenovo Glasses T1 விவரக்குறிப்புகள்

Lenovo Glasses T1 ஸ்மார்ட் கிளாஸ்கள் சௌகரியமான மூக்கு பிடிமான பேட்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸ் டிஸ்ப்ளேக்கள் TUV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றைப் பெற்றிருக்கிறது.

ஸ்மார்ட் கண்ணாடியில் உயர் நம்பிக்கைத் தன்மை வாய்ந்த உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் இருக்கிறது.

இதன்மூலம் மல்டிமீடியா உள்ளடக்கதை மேம்பட்ட முறையில் பார்க்கவும் கேட்கவும் முடியும். இது மோட்டோராலா ஸ்மார்ட்போன்களுக்கான "ரெடி ஃபார்" ஆதரவைக் கொண்டுள்ளது.

பெரும்பாலான சாதனங்களுடன் இணைக்கலாம்

Lenovo Glasses T1 ஸ்மார்ட்கிளாஸை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் சாதனங்களுடன் இயக்கலாம். அதாவது விண்டோஸ் பிசி, ஆண்ட்ராய்டு போன் உள்ளிட்ட சாதனங்களுடன் இந்த ஸ்மார்ட்கிளாஸை இணைக்கலாம். பிற சாதனங்களை ஸ்மார்ட் கிளாஸ் உடன் இணைக்க யூஎஸ்பி டைப்-சி கேபிளை பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Lenovo Glasses T1 Launched with Micro Oled Display: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X