லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்! பட்ஜெட் விலையில் அறிமுகம்!
லெனோவா நிறுவனம் புதிய லெனோவா கார்மே ஸ்மார்ட்வாட்ச் HW25P என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை இந்தியச் சந்தையில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் 2.5D கர்வுடு டிசைன் கொண்ட IPS கலர் டச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச் இல் 24 மணி நேர இதயத் துடிப்பு மானிட்டர் மற்றும் தூக்கக் கண்காணிப்பு சேவை போன்ற அம்சங்களுடன், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் IP68 சான்றிதழுடன் இந்தியாவில் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச், இன்று முதல் பிளிப்கார்ட் தளம் மற்றும் கிறோமா தளத்திலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. புதிய லெனோவா கார்மே ஸ்மார்ட்வாட்ச் தற்பொழுது வெறும் ரூ.3,499 என்ற பட்ஜெட் விலையில், கிரீன் மற்றும் பிளாக் நிறத்தில் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது.

லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச், ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு எந்த தடையுமின்றி இந்த ஸ்மார்ட் வாட்சை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த புதிய லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 4.2 இணக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்சை, உங்களின் ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளங்களிலும் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்வாட்சில் வேதர் ரிப்போர்ட், சர்ச் ஃபார் போன், அலாரம், ஸ்டாப் வாட்ச், ஈமெயில், மெசேஜ் மற்றும் வாய்ஸ் கால்ஸ் போன்ற சேவைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications