லெனோவோவின் ஸ்மார்ட் டிஸ்பிளே அறிமுகம்.? இதுல என்னதான் இருக்கு?
கூகுள் உதவியாளருடன் இயங்கும் வகையில் லெனோவோ நிறுவனம் ஸ்மார்ட் டிஎஸ்பிளே என்று பெயரிட்டுள்ளது. ஸ்மார்ட் டிஎஸ்பிளேவில் கூகுள் உதவியாளர் உடன் இருப்பதால், நமக்கு தேவைப்படும் போது வேண்டியதை கேட்டு பெற மு
கூகுள் உதவியாளருடன் இயங்கும் வகையில் லெனோவோ நிறுவனம் ஸ்மார்ட் டிஸ்பிளே என்று பெயரிட்டுள்ளது. ஸ்மார்ட் டிஸ்பிளேவில் கூகுள் உதவியாளர் உடன் இருப்பதால், நமக்கு தேவைப்படும் போது வேண்டியதை கேட்டு பெற முடியும்.

கூகுள் உதவியாளர் (கூகுள் அசிஸ்டண்ட்) இருப்பதால், நமக்கு தேவைப்படும் அனைத்து விதமான உதவிகளையும் உடனே நிறைவேற்றி விடுகிறது. நாம் வாய் வழியாக இடும் கட்டளைக்கு ஏற்பட திரையில் கொண்டு நமக்கு உதவி செய்கிறது. மேலும் நம் சொல்லும் வேலைகளையும் வேலைக்காரன் போல் எளிதாக செய்து முடித்து விடுகிறது.

கூகுள் உதவியாளர்:
கூகுள் உதவியாளர் இருப்பதால், ஹோட்டல், ரயில், பஸ், விமானம் உள்ளிட்ட பல்வேறு முன்பதிவு செய்ய முடியும். மேலும் நாம் செல்லும் இடத்தையும் பயணம் செய்யும் தூரம் படங்கள் மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் கூகுள் உதவியாளர் நமக்கு உதவுகிறது.

அமேசான் எக்கோ ஷோவை எதிர்த்து:
அமேசான் எக்கோ ஷோவை எதிர்த்து லெனோவோ நிறுவனம் கூகுள் உதவியாளருடன் கூடிய ஸ்மார்ட் டிஸ்பிளேவை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிஸ்பிளேவை குவால்காம் இன்ஹோம் ஹப் பிளாட் பார்மில் உள்ள ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 624 சிப்செட் என்ற அமைப்பு இயக்குகிறது. இதில் வை-பை, புளூடூத் 10 வாட் ஸ்பீக்கர், 2ஜிபி ரேம், 4 ஜிபி உள் சேமிப்பும் இருக்கிறது.

வானிலை, பயணம்:
இந்த ஸ்மார்ட் டிஸ்பிளேவில் உள்ள கூகுள் உதவியாளரிடம் நீங்கள் வானில என்றால் அதன் பருவ நிலை மாற்றங்கள் அனைத்தும் கொடுத்து விடும், போக்குவரத்து என்றால் பயணம் செய்யும் நேரம், சேரும் நேரம் குறித்தும் உட்பட அனைத்து தெரிவித்து விடும். மேலும் சேட்டிலைட் மேப் இருப்பதால், எங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது என்றும் தெரிவித்து முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கிறது.

ஸ்மார்ட் டிஸ்பிளே சிறப்பு:
கூகுள் உதவியாளர்-ஸ்மார்ட் டிஸ்பிளேவில் 5 மெகா பிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. மேலும், 720பி வீடியோ அழைப்பும் பெற முடியும். இதில் இரவில் உணவு தயார் செய்யவும், படிக்கும் போதும் நமக்கு உதவிகரமாக இருக்கும்.

லெனோவோ ஸ்மார்ட் டிஸ்பிளே விலை:
8 இன்ச் ஹெச் டி திரை கொண்ட லெனோவோ ஸ்மார்ட் ரூ.13 ஆயிரத்து 666ம் இருக்கும். 10 இன்ச் ஹெச் டி திரை கொண்ட லெனோவவோ ஸ்மார்ட் டிஸ்பிளே ரூ.17 ஆயிரத்து 100 இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications