லெனோவா லெஜியன் 5 கேமிங் லேப்டாப் அறிமுகம்: சிறப்பம்சங்கள், விலை இதோ!

|

லெனோவா லெஜியன் 5 கேமிங் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவா லெஜியன் 5 Phantom Black வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.75,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லெனோவா லெஜியன் 5 லேப்டாப்

லெனோவா லெஜியன் 5 லேப்டாப்

லெனோவா லெஜியன் 5 சுமார் 2.3 கிலோ எடையுள்ளதாகும். இந்த லேப்டாப் இன்று (டிசம்பர் 1) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லேப்டாப் லெனோவா.காம் மற்றும் லெனோவா பிரத்யேக கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. விரைவில் பிற ஆன்லைன் மற்றும் சில்லறை கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கேமிங் லேப்டாப் அறிமுகம்

கேமிங் லேப்டாப் அறிமுகம்

லெனோவா லெஜியன் 5 லேப்டாப் நிறுவனத்தின் சமீபத்திய கேமிங் சாதனமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப் ஆறு அல்ட்ரா-ரெஸ்பான்சிவ் கோர்களுடன் AMD ரைசன்5 4600 எச் மொபைல் செயலி ஆதரவுடன் இயக்கப்படுகிறது.

120 ஹெ்ட்ஸ் டிஸ்ப்ளே புதிப்பிப்பு வீதம்

120 ஹெ்ட்ஸ் டிஸ்ப்ளே புதிப்பிப்பு வீதம்

லெனோவா லெஜியன் 5 லேப்டாப் 120 ஹெ்ட்ஸ் டிஸ்ப்ளே புதிப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இதில் 15.6 இன்ச் ஐபிஎஸ் 1080 பிக்சல் டிஸ்ப்ளே இருக்கிறது. மேலும் என்விஐடிஐஏ ஜிஇ ஃபோர்ஸ் ஜிடிஎஸ்டிஎம் 1650டிஐ தனித்துவ கிராபிக்ஸ் கட்டமைப்பில் இயங்குகிறது.

அம்பானி வீடு: 600 ஊழியர்கள், 3 ஹெலிகாப்டர், 168 கார் பார்க்கிங்- அன்டிலியாவின் வியப்பூட்டும் தகவல்கள்!

சக்தி வாய்ந்த பேட்டரி வசதி

சக்தி வாய்ந்த பேட்டரி வசதி

பேட்டரி சேமிப்பை பொருத்தவரை சக்தி வாய்ந்த பேட்டரி இதில் இருக்கிறது. ஹைப்ரிட் பயன்முறையை பயன்படுத்தும்போதும் எட்டு மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. லெனோவா லெஜியன் 5 லேப்டாப்பில் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் இரண்டு 2வாட்ஸ் ஹர்மன் கார்டன் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Phantom Black வண்ண விருப்பம்

Phantom Black வண்ண விருப்பம்

லெனோவா லெஜியன் 5 விலை குறித்து பார்க்கையில் இது இந்தியாவில் ரூ.75,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது Phantom Black வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. லெனோவா.காம்மில் விற்பனைக்கு கிடைக்கிறது. லெனோவா லெஜியன் 5., 1 வருட இலவச ப்ரீமியம் பராமரிப்பு மற்றும் ரூ.3,900 மதிப்புள்ல ஒரு வருட விபத்து சேத பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

விண்டோஸ்10 ஆதரவு

விண்டோஸ்10 ஆதரவு

லெனோவா லெஜியன் 5 அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது விண்டோஸ்10 ஆதரவுடன் இயக்கப்படுகிறது. அதோடு 4ஜிபி டிடிஆர் 6 ரேம் உடன் வருகிறது. பிரத்யேகமாக வெப்ப செயல்திறனுக்காக கோல்ட்ஃபிரண்ட் 2.0 ஆதரவு இதில் இருக்கிறது.

file images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lenova Legion 5 Gaming Laptop Launched in India: Specification, Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X