சும்மா கிழி.. வெறும் ரூ.1,999 போதும்.. 1.69 இன் டிஸ்பிளே.. 50 ஹவர்ஸ் பிளே பேக்.. குவாட் மைக்ஸ்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் டிஸ்பிளேவுடன் கிடைக்கும் இயர்பட்ஸ் மாடல்கள் குறைவாகவே வெளியாகின்றன. அப்படி வெளியாகினாலும் ரூ.3,000 மேல் விலை இருக்கும். ஆனால், லாவா நிறுவனத்தின் லாவா ப்ரோபட்ஸ் எக்ஸ்ப்ளோர் 25° (Lava Probuds Xplore 25°) மாடலானது, வெறும் ரூ.2,000 பட்ஜெட்டில் வந்துள்ளது. இந்த மாடல் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
லாவா நிறுவனமானது, ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், இயர்பட்ஸ் மாடல்களையும் தொடர்ந்து களமிறக்கி வருகிறது. சீன நிறுவனங்களுக்கு போட்டியாக மலிவான விலைக்கு இந்த மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் லாவா ப்ரோபட்ஸ் எக்ஸ்ப்ளோர் 25° மாடலானது 1.69 இன்ச் டிஎப்டி டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

லாவா ப்ரோபட்ஸ் எக்ஸ்ப்ளோர் 25° அம்சங்கள் (Lava Probuds Xplore 25° Specifications): ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (True Wireless Earbuds) மாடலாக வெளியாகி இருக்கிறது. ஆகவே, ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டியை கொடுத்து இருக்கிறது. இந்த கனெக்டிவிட்டியுடன் 10 எம்எம் டைனாமிக் டிரைவர்களுடன் (Dynamic Drivers) வெளியாகி இருக்கிறது.
டூயல் டிவைஸ் பேரிங் (Dual Device Pairing) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த லாவா ப்ரோபட்ஸ் எக்ஸ்ப்ளோர் 25° இருக்கிறது. குவாட் மைக் செட்டப் (Quad-Mic Setup) உள்ளது. இதில் கிரிஸ்டல் கிளியார் வாய்ஸ் கால்கள் அனுபவம் கொடுக்க என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) கொடுக்கப்பட்டு உள்ளது.
1.69 இன்ச் கலர் டிபிஎப்டி டிஸ்பிளேவை (TFT Display) கொண்ட மாடலாக இந்த லாவா ப்ரோபட்ஸ் எக்ஸ்ப்ளோர் 25° இருக்கிறது. வால்பேப்பர் மாற்றி கொள்ள முடியும். சார்ஜிங் அனிமேஷன், காலிங் அனிமேஷன் கிடைக்கும். நேரம் மற்றும் தேதியை பார்த்து கொள்ளலாம். கேமிங் பிரியர்களுக்காக கேம் மோட் (Gaming Mode) கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த மோடில் 35ms லோவ் லேட்டன்சி மோட் (Low Latency Mode) கொடுக்கப்படும். இந்த பட்ஜெட்டிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த லாவா ப்ரோபட்ஸ் எக்ஸ்ப்ளோர் 25° கிடைக்கிறது. ஆகவே, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 4 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். ஃபுல் சார்ஜ் செய்தால், 50 மணி நேரங்களுக்கு பிளே பேக்கப் கிடைக்கும்.
ஆகவே, ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்துவிட்டால் போதும், 2 நாட்களுக்கும் மேல் பிளேபேக் கிடைக்கும். IPX4 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Splash Resistance) கொண்ட மாடலாக இந்த லாவா ப்ரோபட்ஸ் எக்ஸ்ப்ளோர் 25° இருக்கிறது. காஸ்மிக் பிளாக் (Cosmic Black), சார்கோல் கிரே (Charcoal Grey) மற்றும் ஐவரி ஒயிட் (Ivory White) ஆகிய கலர்களில் இந்த இயர்பட்ஸ் கிடைக்கிறது.
இவ்வளவு பீச்சர்களை கொடுத்தும், வெறும் ரூ.1,999 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்போதைக்கு ரீடெயில் அவுட்லெட்களில் மட்டும் கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களில் ஓரிரு வாரங்களில் எதிர்பார்க்கலாம். பட்ஜெட்டில் டிஸ்பிளேவுடன் கூடிய இயர்பட்ஸ் வேண்டுமானால், இந்த லாவா ப்ரோபட்ஸ் எக்ஸ்ப்ளோர் 25° மாடலை வாங்கலாம். ஆடியோவும் கொஞ்சம் பிரீமியமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications