Home
Gadgets

ஆளுக்கு 2 வாங்குவீங்க. ரூ.999 பட்ஜெட்ல 40 மணி நேர பேக்கப்.. IPX6 ரேட்டிங்.. வாய்ஸ் அசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

இந்தியாவின் லாவா நிறுவனத்தின் புதிய ப்ரோபட்ஸ் என்21 (Probuds N21) நெக்பேண்ட் மாடல் வெளியாகி இருக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் 40 மணி நேர பேக்கப், 10 நிமிடங்கள் சார்ஜில் 12 மணி நேர பேக்கப் மட்டுமல்லாமல், டூயல் டிவைஸ் கனெக்விடிட்டி, வாய்ஸ் அசிஸ்டன்ட், லோவ் லேட்டன்சி மோட், IPX6 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் போன்ற பக்கா மியூசிக் பீச்சர்களை கொடுக்கிறது. ஸ்பெரிகல் வேவ் ஸ்பீக்கர் கொண்ட இந்த லாவா ப்ரோபட்ஸ் என்21 மாடலின் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

சீன நிறுவனங்களுக்கு நிகராக ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், இயர்பட்ஸ், நெக்பேண்ட் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை இந்தியாவின் லாவா நிறுவனம் களமிறக்கி வருகிறது. இப்போது, ரூ.1,000 பட்ஜெட்டுக்குள் மியூசிக் பிரியர்கள் விரும்படியான பெரும்பாலான பீச்சர்களுடன் இந்த லாவா ப்ரோபட்ஸ் என்21 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ஆளுக்கு 2 வாங்குவீங்க. ரூ.999 பட்ஜெட்ல 40 மணி நேர பேக்கப்.. மாடல்?

பிரீமியம் லுக் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு ஏற்றபடி பான்தர் பிளாக் (Panther Black) மற்றும் டூயல் டோன் கலர் கொண்ட ஃபயர்பிளை கிரீன் (Firefly Green) மற்றும் கய் ஆரஞ்ச் (Kai Orange) கலர்களை கொடுக்கிறது. இதுவொரு நெக்பேண்ட் மாடலாகும். அதற்கு ஏற்ப பட்கள் மற்றும் பில்ட் குவாலிட்டி இருக்கிறது. இதில் 280mAH பேட்டரி கிடைக்கிறது.

IPX6 ரேட்டிங் கொண்ட வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் (Water & Sweat Resistance) கிடைக்கிறது. பட்களில் மேக்னட்டிக் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, அன்பிளக் செய்தால், ஆன் மற்றும் பிளக்-இன் செய்தால் ஆஃப் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டைவிட கூடுதல் லூக் கொடுக்கும்படியே டிசைன் இருக்கிறது. மற்ற பீச்சர்கள் எப்படி?

லாவா ப்ரோபட்ஸ் என்21 அம்சங்கள் (Lava Probuds N21 Specifications): இந்த ப்ரோபட்ஸ் மாடலில் 10 எம்எம் டிரைவர்கள் கிடைக்கின்றன. இதில் தம்ப்பிங் பேஸ் (Thumping BASS) கொடுக்க அட்வான்ஸ்டு அகஸ்டிக் சவ்பென்ஷன் (Advanced Acoustic Suspension) கிடைக்கிறது. ஸ்பெரிகல் வேவ் ஸ்பீக்கர் (Spherical Wave Speaker) பேக் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆளுக்கு 2 வாங்குவீங்க. ரூ.999 பட்ஜெட்ல 40 மணி நேர பேக்கப்.. மாடல்?

முன்பே சொன்னதை போல மேக்னட்டிக் பிளே மற்றும் பாஸ் ஆகிய டூயல் ஸ்விட்ச் ஃபங்ஷன்கள் (Dash Switch Functions) கிடைக்கிறது. இந்த லாவா ப்ரோபட்ஸ் என்21 மாடலில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இதன் மூலம் 10 மீட்டர்கள் கனெக்டிவிட்டி ரேஞ்ச் மற்றும் டூயல் டிவைஸ் பேரிங் (Dual Device Paring) செய்து கொள்ளலாம்.

ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 40 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 12 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் கேமிங் பிரியர்களுக்கான லோவ் லேட்டன்சி எதிர்பார்க்க முடியாது.

ஆனால், இந்த லாவா ப்ரோபட்ஸ் என்21 மாடலில் 50ms லோவ் லேட்டன்சி மோட் (Low Lattency Mode) கிடைக்கிறது. அதேபோல IPX6 ரேட்டிங் வாட்டர் & ஸ்வெட் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இதுபோக கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) மற்றும் சிரி (Siri) அசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த மாடலுக்கு 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது.

இந்த லாவா ப்ரோபட்ஸ் என்21 நெக்பேண்ட் மாடலின் விலை ரூ.999ஆக இருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் பெரும்பாலான பீச்சர்களை பேக் செய்துள்ளது. லாவா ஸ்டோரில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களில் விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த விலைக்கு ஏற்ற மாடலாகவே இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Probuds N21 With 40 Hours Playback Launched Under Rs 1000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X