மலிவு விலையில் டேப்லெட் வாங்கணுமா? அப்போ லாவா அறிமுகம் செய்த இந்த மாடல்களை பாருங்க..
லாவா நிறுவனம் மாணவர்களுக்காகக் குறைந்த விலையில் மூன்று புதிய டேப்லெட் சாதனங்களை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை குறிப்பாக ஆன்லைன் வகுப்பு கல்வியை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. வெறும் ரூ. 9000 முதல் ரூ.15,000 வரை மூன்று மாடல்களை பெரிய டிஸ்பிளே மற்றும் பெரிய பேட்டரி உடன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

லாவாவின் e-Education டேப்லெட்டுகள்
லாவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த மூன்று புதிய டேப்லெட்டுகள் அனைத்தும் பிளிப்கார்ட் வழியாக இன்று முதல் விற்பனைக்கு வாங்குவதற்குப் பிரத்தியேகமாகக் கிடைக்கின்றது. லாவாவின் e-Education தொடரில் லாவா மேக்னம் எக்ஸ்எல், லாவா ஆரா மற்றும் லாவா ஐவரி என்ற மூன்று டேப்லெட் சாதனங்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று சாதனங்களும் லாவாவின் கூற்றுப்படி, இது மாணவர்களுக்கு தடையற்ற கற்றல் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாவா மேக்னம் எக்ஸ்எல்
லாவா மேக்னம் எக்ஸ்எல் மாடல் 10.1 இன்ச் டிஸ்பிளே உடன், 6100 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இது 390 நைட் பிரகாசத்துடன் ஐபிஎஸ் எல்சிடி பேனல் கொண்ட டிஸ்பிளேவுடன் வெளியாகிறது. இது 2 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 5 எம்பி பின்புற கேமராவையும் கொண்டுள்ளது. டேப்லெட்டில் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

லாவா மேக்னம் எக்ஸ்எல் விலை
இது 256 ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது. இது மீடியா டெக் 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படும். லாவா மேக்னம் எக்ஸ்எல் டார்க் க்ரெய் மற்றும் மெட்டாலிக் பினிஷ் உடன் வருகிறது. இதன் விலை வெறும் ரூ. 15,499 ஆகும்.

லாவா ஆரா
லாவா ஆரா டேப்லெட் சாதனம் 8' இன்ச் டிஸ்பிளேவுடன், நீண்ட காலம் நிலைக்கும் 5100 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த டேப்லெட்டில் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இது 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது. இதில் 8 எம்பி பின்புற கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது மீடியா டெக் 2GHz குவாட் கோர் செயலியுடன் வருகிறது.லாவா ஆரா டேப்லெட் மெட்டாலிக் கோட்டிங் உடன் வெறும் ரூ. 12,999 என்று விலையில் வருகிறது.

லாவா ஐவரி
லாவா ஐவரி டேப்லெட் மாடல் 7 இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த சிறிய சாதனம் பின்புறத்தில் ஒரு தனித்துவமான கடினமான ஹேர் பிரஷ் பூச்சுடன் வருகிறது. லாவா ஐவரி டேப்லெட் மாடல், 16 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் அம்சத்தை ஆதரிக்கிறது. இது பல்வேறு தரவுக் கோப்புகளைச் சேமிக்க ஒரு விருப்பத்தை வழங்குகிறது. இந்த டேப்லெட்டின் பின்புறத்தில் 5 எம்பி பிரைமரி கேமரா மற்றும் முன்பக்கத்தில் 2 எம்.பி செல்பி கேமரா உள்ளது. இதன் விலை வெறும் ரூ.9,499 மட்டுமே.


Click it and Unblock the Notifications