லாஸ்ட் சான்ஸ்.. 65% டிஸ்கவுண்ட்.. பாதி விலையை விட கம்மியா விற்கப்படும் 5 ஸ்மார்ட் TVகள்.. Amazon அதிரடி!
வழக்கமாக அமேசானில் நடக்கும் சிறப்பு விற்பனைகளானது.. பெரும்பாலும் ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மீது அதிக கவனம் செலுத்தும். ஆனால் மே 7 வரை நடைபெறும் அமேசான் கிரேட் சம்மர் விற்பனையானது ஸ்மார்ட் டிவிகள் மீதும் நம்பமுடியாத டிஸ்கவுண்ட்களை அறிவித்துள்ளது.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்.. அமேசான் (Amazon) வலைத்தளமானது பல நிறுவனங்களின், பல்வேறு வகையான ஸ்மார்ட் டிவி மாடல்கள் மீது 65% வரை நேரடி தள்ளுபடியை வழங்குகிறது. இந்த பட்டியலில் எல்ஜி, எம்ஐ, சோனி, ஒன்பிளஸ் மற்றும் பிற பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவி மாடல்களும் அடக்கம். அவைகளில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத 5 ஆபர்கள் இதோ:

1. எம்ஐ 32 இன்ச் ஏ செரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Redmi 32 inch A Series HD Ready Smart Google TV): ரெட்மியின் இந்த 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது வெறும் ரூ.12,490 க்கு வாங்க கிடைக்கிறது. இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், வைட் 178 டிகிரி வியூயிங் ஆங்கிள், பில்ட்-இன் வைஃபை,, ப்ளூடூத் கனெக்டிவிட்டிட்டி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
2. சோனி பிராவியா 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Sony Bravia 55-inch 4K Ultra HD Smart LED Google TV): சோனியின் இந்த 55 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது வெறும் ரூ.55,990 க்கு வாங்க கிடைக்கிறது.
இது ஆப்பிள் ஏர்பிளே (Apple AirPlay) மற்றும் அலெக்ஸா (Alexa) ஆதரவு, 4கே அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வைட் ஆங்கிள் வியூ, 20W ஸ்பீக்கர்ஸ், டால்பி ஆடியோ ஆதரவு போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
3. ஒன்பிளஸ் 43-இன்ச் ஒய் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (OnePlus 43-inch Y Series 4K Ultra HD Smart Android LED TV): ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது வெறும் ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு டிவி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட் டிவி ஆப்ஸ், கேம்ஸ் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது. மேலும் இது செட் டாப் பாக்ஸ், ப்ளூ ரே பிளேயர்கள், கேமிங் கன்சோல்களை இணைக்க 3 எச்டிஎம்ஐ போர்ட்களை கொண்டுள்ளது. மேலும் ஹார்ட் டிரைவ்கள் மற்றும் பிற யூஎஸ்பி டிவைஸ்களை இணைக்க 2 யூஎஸ்பி போர்ட்களையும் கொண்டுள்ளன.
4. எல்ஜி 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (LG 43 inch 4K Ultra HD Smart LED TV): எல்ஜியின் இந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது வெறும் ரூ.29,990 க்கு வாங்க கிடைக்கிறது. இது வாய்ஸ் கன்ட்ரோலுக்கான ஏஐ திங்க் (AI ThinQ) மற்றும் கேமிங் செயல்திறனுக்கான கேம் ஆப்டிமைசர் போன்ற அம்சங்களை வழங்குகிறது.
ஆடியோவை பொறுத்தவரை 20W அவுட்புட், 2.0 சேனல் ஸ்பீக்கர், ஏஐ சவுண்ட் (விர்ச்சுவல் சரவுண்ட் 5.1) மற்றும் ஏஐ அக்யூஸ்டிக் ட்யூனிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கடைசியாக 4கே டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி வெப்ஓஎஸ் (WebOS) மூலம் இயக்கப்படுகிறது.
5. எம்ஐ 43 இன்ச் ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Mi 43 inch A Series Full HD Smart Google TV): எம்ஐயின் இந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது வெறும் ரூ. 22,999 க்கு வாங்க கிடைக்கிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது ஃபுல் எச்டி ரெசல்யூஷன், டால்பி ஆடியோ, வைஃபை, ப்ளூடூத், மல்டிபிள் போர்ட்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








