Home
Gadgets

கோடையில் வீட்டை சில்லுனு ஆக்க புதிய டெசர்ட் கூலர் அறிமுகம்..1200 RPM ஸ்பீடு.. டிஜிட்டல் டிஸ்பிளே.. என்ன விலை?

கூல் (KUHL) நிறுவனம் இந்தியாவில் புதிய கூலர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது எக்ஸ்செல் எச்1 நெக்ஸ்ட்-ஜென் டெசர்ட் கூலர் (KUHL Exzel H1 Next Gen Desert Cooler) மாடல் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் சில இடங்களில் மழை பெய்தாலும் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. அதுவும் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. குறிப்பாக மதிய நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே போகமுடியாத அளவுக்குத் தான் வெப்பநிலை பதிவாகி வருகிறது.

கோடையில் வீட்டை சில்லுனு ஆக்க புதிய டெசர்ட்  கூலர் அறிமுகம்..

அதேபோல் இந்த வெயில் காலத்தில் ஏசி, ஏர் கூலர், மின்விசிறிகள் போன்றவற்றை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே முன்னணி நிறுவனங்கள் ஏசி, ஏர் கூலர், மின்விசிறிகள் சாதனங்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில் தான் கூல் ஸ்டைலிஷ் பேன்ஸ் நிறுவனமும் ஒரு புதிய கூலர் பேன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

கூல் எக்ஸ்செல் எச்1 நெக்ஸ்ட்-ஜென் டெசர்ட் கூலர் அம்சங்கள் (KUHL Exzel H1 Cooler specifications) : 8 Hr வாட்டர் டேங்க் கொண்டுள்ளது இந்த கூல் எக்ஸ்செல் எச்1 நெக்ஸ்ட்-ஜென் டெசர்ட் கூலர் மாடல். குறிப்பாக இதன் மூலம் எட்டு மணி நேரத்துக்குத் தடையின்றி குளிர்விக்க முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் இது 65 சதவீதம் மின்சாரத்தைச் சேமிக்கும்.

அதேபோல் பெடஸ்டல் வடிவில் இருக்கும் இந்த கூலர் ஆனுது எட்டு இறக்கைகள் கொண்டுள்ளது. பின்பு இது அதிகப்படியான காற்றை வெளியிடும் என்றும், குறைந்த இரைச்சலிலும் இயங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூல் நிறுவனம்.

கோடையில் வீட்டை சில்லுனு ஆக்க புதிய டெசர்ட்  கூலர் அறிமுகம்..

கூல் எக்ஸ்செல் எச்1 நெக்ஸ்ட்-ஜென் டெசர்ட் கூலர் மாடலில் அல்ட்ராசோனிக் மிஸ்ட் ஹியுமிடிபையர் எனும் தொழில்நுட்ப வசதி (ultrasonic mist humidifier technology ) உள்ளது. இது நீர் துளிகள் தெறிக்காத குளிர்ந்த சுழலை உருவாக்க உதவும் என்று கூறப்படுகிறது. பின்பு BLDC மோட்டார் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் இதில் உள்ளது. இதுதவிர டிஜிட்டல் டிஸ்பிளே வசதியும் கொண்டுள்ளது இந்த டெசர்ட் கூலர்.

1200 ஆர்பிஎம் ஸ்பீடு (1200 RPM speed), 400 MM sweep, 77 சிஎம்எம் டெலிவரி ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது கூல் எக்ஸ்செல் எச்1 நெக்ஸ்ட்-ஜென் டெசர்ட் கூலர் மாடல். குறிப்பாக இந்த கூலர் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனம் வெள்ளை நிறத்தில் கிடைக்கும்.

கோடையில் வீட்டை சில்லுனு ஆக்க புதிய டெசர்ட்  கூலர் அறிமுகம்..

மேலும் கூல் ஸ்டைலிஷ் பேன்ஸ் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் வருண் குப்தா தெரிவித்தது என்னவென்றால், எக்ஸ்செல் எச்1 நெக்ஸ்ட்-ஜென் டெசர்ட் கூலர் ஆனது வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதுடன், அதிக ஆற்றல் திறனையும் உறுதி செய்கிறது. குறிப்பாக இதன் புதுமையான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்கள், பாரம்பரிய கூலர்களில் இருந்து மாறுபட்டது. பின்பு பட்ஜெட் விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களையும் இந்த சாதனம் வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

தற்போது அமேசான் தளத்தில் கூல் எக்ஸ்செல் எச்1 நெக்ஸ்ட்-ஜென் டெசர்ட் கூலர் மாடல் ரூ.8,950 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த புதிய கூலர் மாடலுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
KUHL Exzel H1 Next Gen Desert Cooler Launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X