இந்தியா : ரூ.3,290க்கு கிடைக்கும் கோடாக் இன் ப்ளூடூத் ஸ்பீக்கர்.!
இப்போது வந்துள்ள கோடாக் இன் ப்ளூடூத் ஸ்பீக்கர் பொறுத்தவரை ரூ.3,290 விலையில் ஃப்ளிப் கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ப்ளாஸ்ட்ரானிக்ஸ் கோடாக் நிறுவனம் தற்போது ப்ளூடூத் ஸ்பீக்கர்களை விற்ப்பனை செய்ய உரிமம் பெற்றது. அதன்பின் இந்த ஸ்பீக்கர் முழுமையான ஒலி அனுபவத்தை கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஸ்பீக்கர் விலைப் பொறுத்தவரை ரூ.3,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் சந்தையில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ஃப்ளிப் கார்ட்- அமேசான்:
இப்போது வந்துள்ள கோடாக் இன் ப்ளூடூத் ஸ்பீக்கர் பொறுத்தவரை ரூ.3,290 விலையில் ஃப்ளிப் கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடாக் இன் ப்ளூடூத் ஸ்பீக்கர்:
இவை 4.0 பிளஸ் இடிஆர் ப்ளூடூத் பதிப்பு கொண்டவையாக உள்ளது, அதன்பின் 10 மீட்டர் வரை எட்டக்கூடிய சக்தி வாய்ந்த 10வாட்ஸ் ஒலி வெளியீடு கொண்டிருக்கிறது.

டிவி:
இந்த ஸ்பீக்கர் பொதுவாக ப்ளூடூத் மூலம் டிவியுடன் இணைக்கும் வசதி கொண்டுள்ளது, அதன்பின் ஸ்மார்ட்போன் போன்ற ப்ளூடூத் வசதி கொண்ட அனைத்து சாதனங்கள் உடன் இந்த ஸ்பீக்கரை இணைக்க முடியும்.

5மணி நேரம்:
சிறந்த பட்ஜெட் கொண்ட கோடாக் இன் ப்ளூடூத் ஸ்பீக்கர் பொறுத்தவரை 5மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் திறன் கொண்ட ஒரு பேட்டரியை கொண்டுள்ளது. அதன்பின் மைக்ரோ யுஎஸ்பி ஜாக் ஆதரவுடன் வெளிவருகிறது இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்.

அவனித் சிங் மர்வா :
சூப்பர் ப்ளாஸ்ட்ரானிக்ஸ் கோடாக் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அவனித் சிங் மர்வா தெரிவித்தது என்னவென்றால் இந்த கோடாக் ப்ளூடூத் ஸ்பீக்கர் பல்வேறு வகையில் மக்களுக்கு பயனுள்ளவகையில் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் சிறந்த ஒலி திறன்களை கொண்டுள்ளது என அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications