பேரமே பேச வேணாம்.. கிடைக்காத ரேட்ல 75 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. 70W ஆடியோ.. Google TV ஓஎஸ்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் மலிவு விலைக்கு ஆண்ட்ராய்டு டிவிகளை களமிறக்கி வருகிறது கோடக் நிறுவனம். இப்போது, கோடக் மோஷன்எக்ஸ் சீரிஸ் டிவி (Kodak MotionX Series TV) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கும் 75 இன்ச் டிவிகள் விலையைவிட மலிவாக கிடைக்கிறது. இருப்பினும், பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த மோஷன்எக்ஸ் சீரிஸ் டிவி மாடல்களின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே கொண்ட மூன்று மாடல்கள் இதில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. டால்பி விஷன், டால்பி அட்மோஸ் மட்டுமல்லாமல், விஆர்ஆர், ஏஎல்எல்எம் மற்றும் எம்இஎம்சி போன்ற பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது. 70W ஸ்பீக்கர்கள் கிட்டத்தட்ட ஹோம் தியேட்டருக்கு நிகராக கிடைக்கிறது.

இவை ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கராக கொடுக்கப்பட்டிருப்பதால், பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். லேட்டஸ்ட் கூகுள் டிவி ஓஎஸ், வாய்ஸ் எனபில்ட் ரிமோட் (Voice-enabled Remote) போன்ற அப்டேட்டட் பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டைவிட கூடுதலாக பீச்சர்களை பேக் செய்துள்ளதால், மார்கெட்டில் நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. முழு பீச்சர்களை பார்க்கலாம்.
கோடக் மோஷன்எக்ஸ் சீரிஸ் டிவி அம்சங்கள் (Kodak MotionX Series TV Specifications): இந்த மோஷன்எக்ஸ் டிவியில் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 4K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக 1.1 பில்லியன் கலர் சப்போர்ட் கிடைப்பதால், கலர் அக்கியூரசி மற்றும் நேச்சுரல் அவுட்புட் எதிர்பார்க்கலாம். மேலும், இந்த டிஸ்பிளேவில் கேமிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் விரும்பும்படியான எம்இஎம்சி (MEMC), விஆர்ஆர் (VRR) மற்றும் ஏஎல்எல்எம் (ALLM) பீச்சர்கள் கிடைக்கின்றன.
இது கூடுதல் என்ஹான்ஸ்மெண்ட்டை வியூவர்களுக்கு கொடுக்கிறது. இந்த மோஷன்எக்ஸ் சீரிஸ் டிவியின் ஆடியோவை பார்க்கையில், 70W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டால்பி டிஜிட்டல் (Dolby Digital) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, வீடியோவுக்கு ஏற்ப ஆடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம்.
அதிலும், ஹோம் தியேட்டருக்கு நிகரான அவுட்புட் உறுதியாகிறது. கூகுள் டிவி 5.0 ஓஎஸ் (Google TV 5.0 OS) கிடைக்கிறது. இதில் குரோம்காஸ்ட் (Chromecast) மற்றும் ஏர்பிளே (Airplay) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் அதில் கிடைக்கும் ஒட்டுமொத்த ஆப்களின் சப்போர்ட்டும் கிடைக்கிறது.
இந்த கோடக் மோஷன்எக்ஸ் சீரிஸ் டிவி மாடல்களில் எம்டி9062 (MT9062) சிப்செட் கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கிடைக்கிறது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் எனபில்ட் ரிமோட் மற்றும் அதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் போன்ற ஷார்ட்கட் கீ சப்போர்ட் கொடுக்கப்படுகிறது.
கோடக் மோஷன்எக்ஸ் சீரிஸ் டிவி விலை (Kodak MotionX Series TV Price): 55 இன்ச் கியூஎல்இடி டிவி விலை ரூ.31,999ஆகவும், 65 இன்ச் கியூஎல்இடி டிவி விலை ரூ.43,999 ஆகவும், இருக்கிறது. மேலும், 75 இன்ச் கியூஎல்இடி டிவி விலை ரூ.64,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மற்ற நிறுவனங்களைவிட கோடக் டிவியில் கூடுதல் பீச்சர்கள் கிடைக்கும். ஆகவே, இதை ஆப்ஷனில் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








