தரமான செய்கை.. ரூ.6,399 பட்ஜெட்ல பெசல் லெஸ் டிசைன்.. 36W ஸ்பீக்கர்கள்.. புதிய Kodak டிவிகள் அறிமுகம்..
கோடாக் (Kodak) நிறுவனம் இந்தியாவில் கோடாக் ஸ்பெஷல் எடிஷன் கியூஎல்இடி டிவி (Kodak Special Edition QLED TVs) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான வசதி மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
கோடாக் ஸ்பெஷல் எடிஷன் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Kodak Special Edition QLED TVs Specifications): 24-இன்ச், 32-இன்ச், 40-இன்ச் ஆகிய மூன்று அளவுகளில் கோடாக் ஸ்பெஷல் எடிஷன் கியூஎல்இடி டிவி வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த டிவிகள் ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல்ஸ் மற்றும் 400 நிட்ஸ் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 32 இன்ச் மற்றும் 40 இன்ச் டிவிகள் 36W ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடாக் நிறுவனம்.
குவாட்-கோர்ட் ஏ35 பிராசஸர் (quad-core A35 processor) உடன் இந்த கோடாக் ஸ்பெஷல் எடிஷன் கியூஎல்இடி டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Linux operating system) இந்த டிவிகளில் உள்ளன.
மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுடன் இந்த புதிய கோடாக் ஸ்பெஷல் எடிஷன் கியூஎல்இடி டிவிகள் வெளிவந்துள்ளன. மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் வைஃபை உள்ளிடட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த கோடாக் டிவிகளில் உள்ளன. பின்பு யூடியூப் பட்டன் கொண்ட ரிமோட் கண்ட்ரோல் உடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன.
அதுவும் இந்த கோடாக் டிவிகள் லைவ் சேனல்கள் (Live Channels), ப்ரீ-இன்ஸ்டால்டு கேம்ஸ் (pre-installed games), ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Mode) உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. குறிப்பாக பெசல்-லெஸ் டிசைன் (bezel-less design) உடன் இந்த புதிய டிவிகள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.
கோடாக் ஸ்பெஷல் எடிஷன் கியூஎல்இடி டிவி 24-இன்ச் மாடலின் விலை ரூ.6,399-ஆக உள்ளது. பின்பு இதன் 32-இன்ச் மாடலை ரூ.8,499 விலையிலும், 40-இன்ச் மாடலை ரூ.13,499 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவிகளை வாங்கினால் சலுகைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கோடாக் ஸ்பெஷல் எடிஷன் கியூஎல்இடி டிவிகள் ஜூலை 12-ம் தேதி பிளிப்கார்ட் GOAT விற்பனையில் வாங்க கிடைக்கும். மேலும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட் கோடாக் ஸ்மார்ட் டிவி மாடல்களையும் கம்மி விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடாக் நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அசத்தலான வடிவமைப்பு தனித்துவமான அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








